செவ்வாய், 31 ஜூலை, 2012

சருக்கரை ஆய்வு 2 உரூபாயில்





இரத்தப் பரிசோதனை இரண்டு ரூபாயில்... :
ரத்தத்தில் சர்க்கரையின் அளவை, 10 வினாடிகளில் கண்டு பிடிக்க, புதிய கருவியை உருவாக்கியுள்ள சுமன் கபூர்: ரத்தத்தில் சர்க்கரையின் அளவைப் பார்க்க, நான் கண்டுபிடித்திருக்கும், கைபேசி அளவிலான கருவியில், மெல்லிய நீளக் குழாய் இருக்கும்; இது, குளூக்கோஸ் மானிட்டரில் பொருத்தப்பட்டிருக்கும்.தற்போது, நடைமுறையில் உள்ள குளூக்கோஸ் மீட்டரை விட, 1,000 மடங்கு குறைவான ரத்தம் இதற்குப் போதுமானது. ஒரு முறை பயன்படும் இந்த நீளக் குழாயின் விலை, இரண்டு ரூபாய் தான்.கைவிரல் நுனியை ஊசியில் குத்தியவுடன், நீளக் குழாய் வழியாக, குளூக்கோஸ் மானிட்டருக்கு, ரத்தம் செல்லும். இங்கு, ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களைத் தடுத்து, பிளாஸ்மாவை மட்டும் வேகமாகச் செல்ல அனுமதிக்கும். இந்த இடத்தில் தான், புதிய கருவியின் முக்கியப் பணி நடக்கிறது. ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைப் பொறுத்து, மானிட்டரில் நிறம் மாறும்.குளூக்கோஸ் அளவைப் பொறுத்து நிறம் மாறுவதற்கும், தேவையான அதிர்வுகளை ஏற்படுத்துவற்கும் வேண்டிய தொழில் நுட்பத்தை, "நானோ' துகள்களைப் பயன்படுத்தித் தந்துள்ளேன். இதனால், பரிசோதனை முடிவு மிகத் துல்லியமாக இருக்கும்.இந்தக் கருவி நடைமுறைக்கு வரும் போது, ஐந்து கோடி மக்களை பரிசோதித்துப் பார்க்க வேண்டும் என்ற திட்டம் உள்ளது. இது தவிர, நாடு முழுவதிலும் உள்ள கர்ப்பிணிகள் மற்றும் 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் பரிசோதனை செய்ய உள்ளோம்.அடுத்த, 20 ஆண்டுகளில் இரண்டு கோடிக்கும் அதிகமானவர்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்படலாம் எனத் தெரிய வந்துள்ள நிலையில், இந்த கையடக்கக் கருவி பயனுள்ளதாக இருக்கும்.மனிதர்களின் ரத்தத்தில் உள்ள குளூக்கோஸ் அளவை, இந்தக் கருவி மூலம் துல்லியமாக அளக்க முடியும் என்று, சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக