புதன், 1 ஆகஸ்ட், 2012

இலங்கை இராணுவ வீரர்களுக்கு ப் பயிற்சி அளிக்கும் இந்திய அரசை க் கண்டித்து ப் போராட்டம்: சிரீராமசேனை

இலங்கை இராணுவ வீரர்களுக்கு ப் பயிற்சி அளிக்கும் இந்திய அரசை க் கண்டித்து ப் போராட்டம்: சிரீராமசேனை
பெங்களூர், ஆக. 1: இலங்கை ராணுவ வீரர்களுக்கு பெங்களூரில் பயிற்சி அளிக்கும் இந்திய அரசை கண்டித்து போராட்டம் விரைவில் நடத்தப்படும் என்று ஸ்ரீராமசேனை தலைவர் பிரமோத் முத்தாலிக் தெரிவித்தார்.இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இலங்கையில் தமிழ் இந்துக்கள் போர் என்ற பெயரில் படுகொலை செய்யப்பட்டனர். அந்நாட்டின் ராணுவ வீரர்களுக்கு பெங்களூர் எலஹங்காவில் இந்திய அரசு பயிற்சி அளித்து வருகிறது. அவர்களுக்கு பயிற்சி அளிக்கக்கூடாது என்று ஏற்கெனவே ஆளுநரிடம் மனு அளித்தோம். இருந்தாலும் அவர்களுக்கு பெங்களூரில் பயிற்சி அளிப்பது தொடர்ந்து வருகிறது. எனவே இன்னும் ஒரு வாரத்திற்குள் இந்திய அரசை கண்டித்து எலஹங்காவில் ஸ்ரீராமசேனை உள்ளிட்ட இந்து அமைப்புகளின் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக