வியாழன், 2 ஆகஸ்ட், 2012

பழிவாங்கும் கால்நடைகளிலிருந்து தப்பிக்க எனப் பணம் பறிக்க வழி பிறந்தது!

துன்புறுத்தியவரை க் குத்தி கொன்ற காளை: சுடுகாடு வரை பின் தொடர்ந்து சென்றும் பார்த்தது
 

மத்திய பிரதேச மாநிலம், சாகர் மாவட்டம், தியோரி பகுதியை சேர்ந்தவர் பூப் நாராயணன் பிரஜாபதி,65. கடந்த ஆறு மாதங்களுக்கு முன் ஒரு நாள், இவர் தன் வீட்டருகே சுற்றித் திரிந்த காளை ஒன்றை கம்பால் அடித்தார். உடன் அந்த காளை, பிரஜாபதியை தாக்கியது. இதில், பலத்த காயமடைந்த அவர், ஒரு மாதம் வரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினார். இந்நிலையில், கடந்த வாரம் தன்னைத் தாக்கிய காளை, தன் வீட்டின் முன் உள்ள ரோட்டில் படுத்திருப்பதைக் கண்ட பிரஜாபதி, அதன் மீது வெந்நீரை ஊற்றினார். மறுநாள் காலை பிரஜாபதி தன் வீட்டின் முன், தேநீர் அருந்திக் கொண்டிருந்த போது, அந்தக் காளை மீண்டும் வந்து, அவரைத் தாக்க முற்பட்டது. பயந்து போன அவர், தப்பித்தால் போதும் என, தன் குடிசை வீட்டுக்குள் ஓடினார். ஆனாலும், அவரைத் தொடர்ந்து குடிசைக்குள் சென்ற காளை, குடிசையை துவம்சம் செய்ததோடு, பிரஜாபதியை தன் கொம்புகளால் குத்தியவாறு, தரதரவென வெளியே இழுத்துச் சென்றது. பின், தரையில் இரண்டு முறை அவரை தூக்கி வீசியதுடன், தன் கூரிய கொம்புகளால் அவரை மீண்டும் மீண்டும் குத்தி சின்னாபின்னம் ஆக்கியது.

மரணம்: இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்துக் கொண்டிருந்த அப்பகுதி மக்கள், காளையை அங்கிருந்து விரட்டினர். பின், பிரஜாபதியை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் இறந்து விட்டதாகக் கூறினர்.

சுடுகாடு வரை...: இதனிடையே, அக்கம் பக்கத்தினர் பிரஜாபதியை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, அவர்களுடன் மருத்துவமனை வரை காளை மாடு தொடர்ந்து சென்றது. இதனை, அப்பகுதி மக்கள் வியப்புடன் பார்த்தனர். அத்துடன், பிரஜாபதியின் உடல் தகனம் செய்யப்படும் வரை, சுடுகாட்டிலேயே காளைமாடு இருந்துள்ளது.

இதுகுறித்து, அப்பகுதியை சேர்ந்த தீபக் சவுராசா கூறுகையில், ""மருத்துவமனை மற்றும் சுடுகாட்டிற்கு அருகில் பிரஜாபதியின் வீடு இருந்தாலும், அவரை மாடு பின் தொடர்ந்து வந்தது எங்களுக்கெல்லாம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது,'' என்றார். "மருத்துவமனைக்கும், சுடுகாட்டிற்கும் காளை வந்ததை நானும் பார்த்தேன்' என, தியோரி காவல் நிலைய ஆய்வாளர் ஆர்.பி.சர்மாவும் கூறினார்.


 

1 கருத்து: