சனி, 4 ஆகஸ்ட், 2012

மக்களவை முன்னவர் சுசீல் குமார்

ஆங்கிலத்தில் உள்ளவாறு தமிழில் மொழி பெயர்த்துத் தலைவர் எனக் குறிப்பிட்டு  இருந்தீர்கள்.முன்னவர் எனக் குறிப்பிட வேண்டும் எனச் சுட்டிக்காட்டியதும்  முன்னவர் எனத்  திருத்தி உள்ளீர்கள். திருத்தப்பட்டதும் ஒரு  செய்தியாகத்தான் காட்சி அளிக்கிறது. திருத்துமாறு வேண்டிய கருத்தும் இடம் பெற்று திருத்தப்பட்ட செய்தியும் இடம் பெற்றால்தான், தினமணி வாசகர் கருத்திற்கு முதன்மை அளிப்பதும், தவறு எனத்  தெரிந்தால் திருத்திக் கொள்ளும் பண்பு உடையது என்றும் வெளிப்படுகிறது. ஆனால், நீங்கள் எதிர்மறையாக எழுதி உள்ளீர்கள். பின்னூட்டக் கருத்தும் இடம் பெற்று திருத்தி விட்டதாக உங்களின் குறிப்பும் இடம் பெற்றால் சிறப்பன்றோ! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /
 
மக்களவை முன்னவர் சுசீல் குமார்



புது தில்லி, ஆக.3: குடியரசுத் தலைவராக பிரணாப் முகர்ஜி தேர்ந்தெடுக்கப்பட்டதால், மக்களவையின் அவை முன்னவராக மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பிரதமர் மன்மோகன் சிங், இந்தப் பதவிக்கு அவரைத் தேர்ந்தெடுத்ததாக நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பவன் குமார் பன்சால் தெரிவித்துள்ளார்.இதுபற்றி சுஷீல் குமார் ஷிண்டே செய்தியாளர்களிடம் கூறுகையில், என்னை மக்களவையின் முன்னவராக தேர்ந்தெடுத்த பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோருக்கு எனது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.முதுபெரும் காங்கிரஸ் தலைவரான ஷிண்டே (71), மத்திய மின்துறை அமைச்சராக இருந்தார். கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த மத்திய அமைச்சரவை மாற்றத்தின்போது, உள்துறை அமைச்சராக இருந்த ப. சிதம்பரம், நிதி அமைச்சராக மாற்றப்பட்டார். இதனால் உள்துறை ஷிண்டேவுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.பொதுவாக, மக்களவை உறுப்பினராக இருந்தால் அவை முன்னவராக பிரதமர்தான் இருப்பார். ஆனால், பிரதமர் மன்மோகன் சிங், மாநிலங்களவை உறுப்பினராக இருப்பதால் இந்த பதவிக்கு முன்பு பிரணாப் முகர்ஜியும், இப்போது ஷிண்டேவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
 
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மக்களவை முன்னவராக சுசில் குமார் சிண்டே தேர்வு

First Published : 03 Aug 2012 04:46:53 PM IST


புது தில்லி, ஆக., 3 : நாடாளுமன்றத்தின் மக்களவை முன்னவராக உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.முன்பு மத்திய நிதியமைச்சராக இருந்த பிரணாப் மக்களவைத் தலைவராக இருந்தார். அவர் தனது பதவியை ராஜினாமா செய்து குடியரசுத் தலைவராக பதவியேற்றதைத் தொடர்ந்து அந்த பதவிக்கு கடும் போட்டி ஏற்பட்டது.இந்நிலையில், உள்துறை அமைச்சராக 2 நாட்களுக்கு முன்பு பதவியேற்றுக் கொண்ட சுஷில் குமார் ஷிண்டே மக்களவை முன்னவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக