வெள்ளி, 3 ஆகஸ்ட், 2012

"திறமை உண்டு; ஆனால் படிப்பு வராது!':

 
"திறமை உண்டு; ஆனால் படிப்பு வராது!':
மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு காகிதப் பொருட்கள் செய்ய கற்றுக் கொடுக்கும் அர்ச்சனா: மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு, "கவுன்சிலிங்' கொடுக்கும் பணியில் இருக்கிறேன். தங்கள் பிள்ளைகளை, "கவுன்சிலிங்'கிற்கு அழைத்து வரும் பெற்றோர், மூளைக்கு பயிற்சி கொடுப்பது போல், இந்தக் குழந்தைகளுக்கு ஏதாவது, கற்றுக் கொடுக்கலாமே என, என்னிடம் கேட்டுக் கொண்டே இருப்பர். எனக்கும் இந்த குழந்தைகளுக்கு, ஏதாவது செய்ய வேண்டும் எனத் தோன்றியது; செயலில் இறங்கினேன். அப்படி உருவானது தான், "சகாயத்யா' அமைப்பு. சகாயம் என்றால், உதவி என அர்த்தம். நான் செய்யும் பொருட்களால், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு வரக்கூடாது என நினைத்தேன். அதனால், காகிதப் பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டேன். அதில், சின்ன சின்ன பொருட்கள் செய்ய ஆரம்பித்தேன். அடுத்து, காகிதம், கார்டுபோர்டு இரண்டும் பயன்படுத்தி, மேஜை, ஸ்டூல் என, சில பொருட்களை செய்யத் துவங்கினேன். எல்லாம் என்னுடைய சொந்த யோசனை தான். என்ன பொருள் செய்ய வேண்டுமோ, அதற்கு ஏற்றபடி, காகிதத்தை, "கட்' பண்ணி, பசை தடவி ஒட்ட கற்றுக் கொடுத்தேன்; புரிந்து கொண்டு, ஆர்வமாகச் செய்கின்றனர். நாங்கள் தயாரிக்கும், காகித மேஜை, ஸ்டூலில், 50, 60 கிலோ எடை உள்ள நபர்களும் அமரலாம். "வார்னிஷ் கோட்டிங்' கொடுத்திருப்பதால், தண்ணீர் பட்டாலும் பாதிப்பில்லை. ஓட்டல், மருத்துவமனைகளுக்காக சிலர் என்னிடம், காகித ஸ்டூலுக்கு, "ஆர்டர்' தரத் துவங்கியுள்ளனர். இதன் மூலம், இவர்களின் உழைப்பிற்கு ஊதியம் கொடுக்கும் எண்ணம் உள்ளது. மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு திறமை உண்டு; ஆனால், படிப்பு மட்டும் வராது. பள்ளியில் சேர்த்தாலும், அங்குள்ள மற்ற பிள்ளைகளை படிக்க விடாமல், இடையூறு செய்வர். இருப்பினும், இந்த பிள்ளைகளுக்கு படிப்பறிவைக் கொண்டு வருவதற்கான பயிற்சியையும், அளிக்கிறேன். இதை பெரிய அளவில் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக