சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற மத்திய அரசின் சாதனை விளக்கப் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி ப. சிதம்பர
சென்னை, ஆக. 18: தமிழகத்துக்கு உகந்த அரசியல் கட்சியாக காங்கிரஸ் கட்சி செயல்படவில்லை என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் வருத்தம் தெரிவித்தார்.சென்னை புரசைவாக்கத்தில் புதன்கிழமை நடைபெற்ற மத்திய அரசின் சாதனை விளக்கக் கூட்டத்தில் அவர் பேசியது:மாவோயிஸ்ட் பிரச்னை, காஷ்மீர் பிரச்னை, இலங்கைத் தமிழர் பிரச்னை, பள்ளிகளுக்கான கல்வி கட்டணப் பிரச்னை போன்ற சர்ச்சைக்குரிய பிரச்னைகளில் கருத்து தெரிவிக்காமல் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி விலகி நிற்கிறது. அதனால் காங்கிரஸின் நிலை மக்களுக்கு தெரிவதில்லை.இலங்கைத் தமிழர் பிரச்னை குறித்து காங்கிரஸ் கட்சி அதிகமாக பேசாததால் தமிழர்களுக்கு எதிரான கட்சி என்பதுபோல பிரசாரம் செய்கிறார்கள். ஆனால், இலங்கைத் தமிழர்களுக்காக பல தியாகங்களை செய்த கட்சி காங்கிரஸ் மட்டுமே. 1987-ல் ஏற்பட்ட ராஜீவ் - ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தை விடுதலைப் புலிகள் ஏற்றிருந்தால் தமிழர்களுக்கு சுயாட்சி கிடைத்திருக்கும். அதனை விட்டுவிட்டு ஆயுதப் போராட்டம் நடத்தியதால் தமிழர்களுக்கு அழிவு ஏற்பட்டது. வரப்போகும் தேர்தல்களில் கேரளத்திலும், மேற்கு வங்கத்திலும் கம்யூனிஸ்ட்டுகள் ஆட்சியை இழக்கப் போகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் மாவோயிஸ்ட்டுகள் என்ற பெயரில் பழங்குடி மக்களை திசைதிருப்பி ஆயுதங்கள் மூலம் அரசாங்கத்தை கைப்பற்ற நினைக்கிறார்கள். "வளர்ச்சி இல்லை' அதனால் ஆயுதம் ஏந்துகிறார்கள் என்று மாவோயிஸ்டுகளை எழுத்தாளர்கள் ஆதரிக்கிறார்கள். அமைதி இருந்தால் தான் வளர்ச்சி ஏற்படும் என்பதை அவர்கள் வசதியாக மறந்து விடுகிறார்கள். தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டு வரும் பல்வேறு நல திட்டங்கள் மத்திய அரசின் நிதி உதவியுடன் தான் செயல்படுத்தப்படுகின்றன. உதாரணமாக தமிழகத்தில் ஓடும் சொகுசு பஸ்கள் அனைத்தும் மத்திய அரசின் ஜவாஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் வாங்கப்பட்டதாகும். இது பற்றி காங்கிரஸ்காரர்கள் மக்களிடம் பிரசாரம் செய்யாததால் மாநில அரசு பெயரை தட்டிச் செல்கிறது. அதற்காக நான் திமுகவைக் குறைகூறவில்லை. நாம்தான் நமது சாதனையை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்றார்.முன்னாள் எம்.பி. வள்ளல்பெருமான், சென்னை மாநகராட்சி முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கே. சிரஞ்சீவி உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.
கருத்துக்கள்

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
8/19/2010 6:22:00 AM
8/19/2010 6:22:00 AM


By krishnaswami
8/19/2010 6:11:00 AM
8/19/2010 6:11:00 AM


By குமரா
8/19/2010 5:58:00 AM
8/19/2010 5:58:00 AM


By rangaraj
8/19/2010 5:25:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *+++++++++8/19/2010 5:25:00 AM
பஞ்சாயத்து பண்ண வந்தவன், தன்னை கூப்பிட்டு வந்தவனின் எதிரியிடம் ஒப்பந்தம் போட்டுக்கொண்டு, உதவி கேட்டவனை அடித்த கதை எங்காவது நடந்தது உண்டா? தமிழனைக் காப்பாற்ற வந்த இந்திய அரசு, இலங்கை அரசுடன் ஒப்பந்தம் போட்டுகொண்டு தமிழனை தாக்கியது எந்த ஊர் நியாயம்? அதைவிடக் கேவலமானது, விடுதலைப்புலிகளுக்கு பிரேமதாசா ஆயுத உதவி செய்தது, IPKF உடன் போராட. கடைசியில் இந்தியா யாருக்காக இலங்கையில் யுத்தம் நடத்தியது? இந்திய வெளியுறவுக்கொள்கை உலகநாடுகளின் கேலிக்கு ஆளாகியது தான் உண்மை. இன்றும் இந்தியாவின் வெளியுறவுக்கொள்கை தவறான பாதையில் தான் செல்கிறது. இலங்கை, பர்மா (மியான்மர்) போன்ற மனிதத்தை மிதிக்கின்ற நாடுகளுக்கு துணை போகிறது. மதுரைக்காரன்

By மதுரைக்காரன்
8/19/2010 11:11:00 PM
8/19/2010 11:11:00 PM


By தமிழ் கிறுக்கன்
8/19/2010 5:53:00 PM
8/19/2010 5:53:00 PM


By Nagarajan
8/19/2010 4:23:00 PM
8/19/2010 4:23:00 PM


By சிர்ப்பு நடிகர் வடிவேலு
8/19/2010 2:51:00 PM
8/19/2010 2:51:00 PM


By SUBBU IYER
8/19/2010 2:00:00 PM
8/19/2010 2:00:00 PM


By Nallan
8/19/2010 1:51:00 PM
8/19/2010 1:51:00 PM


By K Rajan
8/19/2010 1:00:00 PM
8/19/2010 1:00:00 PM


By Unmai
8/19/2010 9:02:00 AM
8/19/2010 9:02:00 AM


By DS
8/19/2010 8:59:00 AM
8/19/2010 8:59:00 AM


By ஆண்டவன்
8/19/2010 8:30:00 AM
8/19/2010 8:30:00 AM


By Sarav
8/19/2010 7:48:00 AM
8/19/2010 7:48:00 AM


By வீரகணபதி
8/19/2010 7:34:00 AM
8/19/2010 7:34:00 AM


By appavi
8/19/2010 6:44:00 AM
8/19/2010 6:44:00 AM
