திங்கள், 16 ஆகஸ்ட், 2010

பிரபாகரனை காப்பாற்ற பல முயற்சிகளை எடுத்தோம்: கே.பி.


கொழும்பு, ஆக.16- விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை காப்பாற்ற பல முயற்சிகள் எடுத்தோம் என்றும், அவை அனைத்தும் பலனளிக்கவில்லை என்றும் கே.பி. என்னும் குமரன் பத்மநாதன் கூறியுள்ளார்.
"டெய்லி மிரர்" பத்திரிகைக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பேட்டியில் கே.பி. கூறியிருப்பதாவது:
"போர் பகுதியிலிருந்து பொதுமக்களை காப்பாற்ற எடுக்கப்பட்ட முடிவுகளை பிரபாகரன் ஏற்கவில்லை. அவ்வாறு செய்தால் புலிகள் எளிதில் தோற்கடிக்கப்படுவார்கள் என்பதால் அவர் ஒப்புக்கொள்ளவில்லை. இதனிடையே, பிரபாகரனின் மகன் சார்லஸ் ஆண்டனி என்னுடன் தொடர்பில் இருந்தார்.
மார்ச் 2009ல், போர்நிறுத்தம் ஏற்பட முயற்சிகளை மேற்கொண்டேன். புலிகள் வசமிருந்த பொன்னேரின், பரந்தன், யானைஇறவு, கிளிநொச்சி ஆகிய பகுதிகளை இழந்ததும் பிரபாகரன் போர்நிறுத்தம் செய்ய ஒப்புக்கொண்டார். ஆனால், இது காலம் கடந்த முடிவாக இருந்தது.
பிரபாகரனை ஒரு கப்பலில் பாதுகாப்பாக அழைத்துச் செல்லும் யோசனையும் முன்வைக்கப்பட்டது. ஆனால், இதற்கு அவர் ஒப்புக்கொள்ளவில்லை. அவரது இந்த முடிவுக்கு காரணம் நார்வேயில் செயல்படும் புலிகளின் முக்கியத் தளபதிகளில் ஒருவரான நெடியவன் தான்.
இந்நிலையில், பிரபாகரன் மற்றும் குடும்பத்தினரை பாதுகாப்பாக வேறொரு பகுதிக்கு அழைத்துச் செல்லுமாறு அவரது மகன் சார்லஸ் ஆண்டனி கேட்டுக்கொண்டார். தான் போர்க்களத்தில் இருந்து தொடர்ந்து போரிடப் போவதாகவும் அவர் கூறியிருந்தார்.
ஆனால், இந்த முடிவையும் பிரபாகரன் ஏற்கவில்லை. போர்க்களத்தில் அவரும் தொடர்ந்து  இருந்து போரிட விரும்பினார்.
கடைசி முயற்சியாக பிரபாகரனை ஹெலிகாப்டர் மூலம் வன்னி காட்டுப் பகுதிக்கு அழைத்துச் செல்லவும், அவரது குடும்பத்தினரை சர்வதேச கடல் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலுக்கு அழைத்துச் செல்லவும் முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆனால், இந்த திட்டமும் தோல்வியடைந்தது.
இவ்வாறு கே.பி. தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள்

2002 ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து விலகி விட்டதாக அறிக்கை விட்ட கே.பி. எவ்வாறு இத்தகைய முயற்சிகளில் ஈடுபட்டிருக்க முடியும்? எனவே, இரண்டில் ஒன்று பொய் என்பது உறுதியாகிறது. எனவே, பொய்யனின் எப் பேச்சையும் நம்ப முடியாது. தம் மக்களுடன் களத்திலேயே இருக்க நினைத்த ஓர் உண்மையைச் சொல்வதன் மூலம் தமிழ்த்தேச ஞாலத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் இல்லை என்ற பொய்யை நிறுவ முற்படுகிறார். பொய்யனைப் புறக்கணிப்போம். உண்மை வெளிவரும் நாள் தொலைவில் இல்லை. காலம் மாறும். ஞாலத்திற்கு உண்மை விரைவில் புரியும்.‌வெல்க தமிழ் ஈழம்! 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/16/2010 5:41:00 PM
Thanks for your support but help less.......we lost our Tamil soul
By SRINIVASAN
8/16/2010 4:23:00 PM
வணக்கம் வாசகர்களே! மிண்டும் வந்து வட்டேன்!
By usanthan
8/16/2010 3:50:00 PM
HIS INTREVIEW SHOWS HOW HE PLAYED THE DOUBLE GAME TO SAVE HIS PERSONAL INTREST BY SELLING TAMILS FOR MONEY. TAMIL WORLD WILL NEVER FORGIVE THIS TRAITOR.
By Paris EJILAN
8/16/2010 3:41:00 PM
இது தவறான விளக்கம். கே.பி. யை இறுதி யுத்தத்திற்கு முன்பே அவர் தவறான வழியில் செல்வது அவதானிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் சார்ல்ஸ் அவரிடம் கேட்டுக் கொண்டார் என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது. அப்படி அவர் கூட்டி சென்றாலும் சிங்களத்திடம் ஒப்படைத்து இருந்திருப்பார்.உண்மையான கொள்கைப் பற்றுடைய போராளிகள் அரசிடம் எதையும் சொல்லவில்லை.அதனால் தான் அவர்கள் பல்வேறு முகாமக்ளில் வைத்து கொல்லப்பட்டு வருகிறார்கள் . சமீபத்தில் மணலாற்றில் கொல்லப்பட்ட புலி சந்தேக நபர்களும் இந்த கைதிகளே.சிங்களத்தின் வலையில் இருக்கும் கே.பி. உலகத் தமிழர்களை திசை திருப்பி வருவதும்,அதனால் அவரிடம் ஏமாந்தவர்களும், மற்றும் அனைத்து தமிழர்களும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லதே
By usanthan
8/16/2010 3:40:00 PM
உன்னை நாங்கள் எப்பொழுதோ புரிந்து கொண்டோம் எட்டப்பரே! உங்கள் பருப்பு இனி வேகாது . மதுரை தமிழன்
By Ravan
8/16/2010 3:05:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் 

ஹாட் நியுஸ்
முத்தரப்பு கிரிக்கெட்: இலங்கை பேட்டிங் 7 விக்கெட் இழப்பிற்கு 142 ரன் (40-வது ஓவர்) * பூவரசி ஜாமீன் மனு: ஐகோர்ட்டில் தள்ளுபடி * ரெட்டி சகோதரர்கள் இரும்பு சுரங்கம் பற்றி விசாரிக்க குழு; மத்திய அரசு முடிவு * குடிநீர், வீட்டு வரியை குறைக்ககோரி மானாமதுரையில், நாளை அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்; ஜெயலலிதா அறிவிப்பு * இறுதிகட்ட போர் நடந்த போது பிரபாகரனை காப்பாற்ற பல தடவை முயன்றேன்; பத்மநாதன் பேட்டி * பின்லேடன் பாகிஸ்தானில் பதுங்கி இருக்கிறான்: அமெரிக்கா தகவல் * ரேஷன் கடைகளில் ரூ.25 விலையில் மளிகை பொருள் விற்பனை * இன்னும் சில நாட்களில் கோர்ட்டில் சரண் அடைவேன்: மதானி * தமிழ்நாடு கைப்பந்து சங்க புதிய தலைவராக சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் தேர்வு



தொடர்புடைய
பரிந்துரைக்கபட்டது
அதிகம்
வாசிக்கபட்டது



இறுதிகட்ட போர் நடந்த போது பிரபாகரனை காப்பாற்ற பல தடவை முயன்றேன்: பத்மநாதன் பேட்டி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக