லண்டன், ஆக. 20: இலங்கைப் போரில் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டது தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி பிரிட்டிஷ் தமிழ் இளைஞர் கோபி சிவந்தன் மேற்கொண்ட நடைப்பயணம் ஜெனீவாவில் வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது. இலங்கை அரசுக்கு எதிராக லண்டனில் இருந்து ஜூலை 23-ம் தேதி அவர் தனது நடைப்பயணத்தை துவங்கினார். பல்வேறு நாடுகளைக் கடந்து ஜெனீவாவில் உள்ள ஐ.நா. சபை அலுவலகத்தில் தனது பயணத்தை வெள்ளிக்கிழமை நிறைவு செய்தார்.பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, இத்தாலி உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தமிழர்கள் ஜெனீவாவில் கூடி, அவரை வரவேற்றனர்.
கருத்துக்கள்

லர்க மனித நேயம்! வெல்க தமிழ் ஈழம்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
8/21/2010 7:43:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * 8/21/2010 7:43:00 AM
சிவந்தனுக்கு நாடு கடந்த தமிழ் ஈழ அரசு வாழ்த்து
First Published : 21 Aug 2010 04:22:01 PM IST
Last Updated : 21 Aug 2010 06:49:28 PM IST
