சேலம், ஆக. 20: ஆண்டிப்பட்டியில் பொதுமக்களுக்கு இலவசமாக வினியோகம் செய்யப்பட்ட ஹார்லிக்ஸ் பாட்டில்கள் விலை கொடுத்து வாங்கப்பட்டவை, அதற்கான ரசீது என்னிடம் உள்ளது என்று மத்திய ரசாயனம், உரத்துறை அமைச்சர் மு.க.அழகிரி கூறினார். சேலத்தில் வேளாண்மைத்துறை அமைச்சரின் இல்லத் திருமண விழாவில் அவர் பேசியது: கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஆண்டிப்பட்டி தொகுதியில் பொது மக்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடத்தியபோது 200 கிராம் எடையுள்ள சுமார் 9 ஆயிரம் ஹார்லிக்ஸ் பாட்டில்கள் வழங்கினேன். ஆனால் இவை சோழவந்தான் பகுதியில் இருந்து திருடப்பட்டவை என்று ஜெயலலிதா குற்றஞ்சாட்டியுள்ளார். இந்த பாட்டில்களை நான் விலை கொடுத்துதான் வாங்கினேன். அதற்கான ரசீதுகள் என்னிடம் உள்ளன. இந்த வழக்கை நான் எங்கு வேண்டுமானாலும் சந்திக்கத் தயாராக இருக்கிறேன் என்றார்.
கருத்துக்கள்


By Ilakkuvanar Thiruvalluvan
8/21/2010 7:06:00 AM
8/21/2010 7:06:00 AM


By Vijay
8/21/2010 5:40:00 AM
8/21/2010 5:40:00 AM


By ravi abudhabi
8/21/2010 2:52:00 AM
8/21/2010 2:52:00 AM


By மதுரைக்காரன்.
8/21/2010 1:22:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் 8/21/2010 1:22:00 AM