சனி, 21 ஆகஸ்ட், 2010

ஐ.நா சபை முன் சிவந்தன் தலைமையில் பேரெழுச்சியுடன் ஒன்று திரண்ட மக்கள்!

swis_un_1
ஈழத் தமிழருக்கு நீதி வேண்டும் என்று கோரி பிரித்தானிய தலைநகர் லண்டனில் இருந்து சுவிற்சலாந்தின் தலைநகர் ஜெனிவாவில் அமைந்திருக்கும் ஐ.நா மனித உரிமைகள் சபையை நோக்கி மனித நேய நடை பயணத்தை பல நாட்களாக மேற்கொண்டுள்ள சிவந்தன் இன்று தனது இலக்கினை அடைந்து விட்டார்.
இன்று மதியம் பிரான்ஸ் எல்லையில் இருந்து சுமார் 1.30 மணியளவில் சிவந்தனும், சுவிஸ் நாட்டில் கடந்த பல நாட்களாக நடைபயணம் மேற்கொண்ட மற்றும் 3 இளைஞர்களும் ஒன்றிணைந்தனர். அவர்களோடும் அங்கு குழுமி இருந்த தமிழ் மக்களோடு சுமார் 3 கி.லோமீட்டர் தூரத்தை நடந்து மதியம் 2.30 மணியளவில் ஜ.நா முன்றலுக்கு பேரணி வந்தடைந்தது. அதனைத் தொடர்ந்து அங்கு அவருக்கு செங்கம்பள வரவேற்ப்பு கொடுக்கப்பட்டது. மேலும் முருகதாசின் தாய் தந்தையரால், ஈகைச்சுடர் ஏற்றப்பட்டதோடு, முருகதாஸ் தன்னை மாய்த்துக்கொண்ட இடத்தில் அனைவரும் அஞ்சலி செலுத்தினர். மிகவும் உணர்ச்சிபூர்வமாக நடைபெறுகின்ற இன் நிகழ்வில் ஜ.நா அதிகாரிகளிடம் சிவந்தன் உட்பட நால்வர் சென்று தமது கோரிக்கை மனுவைக் கையழிக்க இருக்கின்றனர்.
சுவிஸ் இளையோர் அமைப்பு இந்தக் கவனயீர்ப்பு போராட்டத்தை மிகவும் திறம்பட அமைத்து இருந்தது மிகுந்த பாராட்டுதலுக்கு உரியது. அதே போல பிரான், இத்தாலி, ஜேர்மனி, போன்ற பல நாடுகளின் இளையோர் மைப்புகளும் இதில் இணைந்துகொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நிகழ்விடத்திலிருந்து மருத்துவர் இந்து நமது மீனகம் தளத்துக்கு அளித்த செவ்வி:
}
Share/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக