சனி, 21 ஆகஸ்ட், 2010

சுயமரியாதை இயக்கத்துக்கு நான் நன்றிக் கடன்பட்டவன்: முதல்வர்


சேலம், ஆக. 20: சுயமரியாதை இயக்கத்துக்கு என்றென்றும் நன்றிக் கடன்பட்டவனாக இருக்கிறேன் என்றார் முதல்வர் கருணாநிதி.சேலத்தில் வேளாண்மைத்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் இல்லத் திருமண விழாவில் வெள்ளிக்கிழமை பங்கேற்று முதல்வர் பேசியது:எனக்கு எல்லா நிலையிலும் ஆலோசனை கூறக் கூடியவராக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் இருக்கிறார். அழகிரி வாலிபக் கோளாறு காரணமாகவோ, அவர் பட்ட துன்பம் காரணமாகவோ ஆவேசமாகப் பேசினார். பன்னீர் செல்வமும் அதேபோலப் பேசினார். நானும் ஆவேசமாகப் பேசும் நேரங்களில் எனக்குள் அழகிரி புகுந்துள்ளார் என்றுதான் எண்ணுவேன். நான் கூறுவது தளபதி அழகிரி சாமி என்னும் எனது தலைவர்களில் ஒருவரைத்தான். ராஜாஜி காலத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த வாதத்திறமை மிக்க பன்னீர் செல்வத்தைப் போலவே எம்.ஆர்.கே.வும் பேசியுள்ளார். ஆனால் திருமணம் போன்ற நல்ல நிகழ்ச்சிகளில் கெட்டவர்களைப்பற்றிப் பேசக் கூடாது. தமிழர்கள் லட்சியத்தை, இலக்கிய வளத்தை காத்து வளர்த்தவர்கள். அவர்கள் அன்று காப்பாற்றியதை வழி வழியாகப் போற்றிப் பாதுகாக்க வேண்டியது நமது பொறுப்பு. கலை, இலக்கிய மரபை, சரித்திரத்தில் இடம் பெற்றுள்ள மாவீரர்களின் புகழை பாதுகாத்து அதை மேலும் பட்டொளி வீசிப் பறக்கச் செய்ய வேண்டும்.தமிழர்கள் இன ரீதியாக அடிமைப்பட்டுக் கிடந்த காலத்தில் அவர்களிடையே சுயமரியாதை உணர்வை உசுப்பிவிட்டவர் பெரியார். நான் கலைஞராக மதிக்கப்படக்  காரணம் இந்த இயக்கம்தான். எனவே இதற்கு நான் நன்றிக் கடன்பட்டவனாக இருக்கிறேன் என்றார் கருணாநிதி
கருத்துக்கள்

அழகிரி வாலிபர் என்றால் அவரையே இளைஞர் அணித் தலைவராக நியமிக்கலாமே! தொண்டர்களை அரவணைத்துத் திட்டமிட்டுச் செயலாற்றுவாரே! இளைஞர் அணியை மதுரை மண்டலம் போல் மாற்றிக் காட்டுவாரே! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/21/2010 7:14:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக