சேலம், ஆக. 20: மாநில அரசுகளின் உரிமைகளை எடுத்துக் கொள்ளும் விதத்தில் மத்திய அரசு செயல்பட்டால் அதற்காக வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறினார்.சேலத்தில் ரூ.139 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, ரூ.39 கோடி கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட ரூ.273 கோடி மதிப்பில் கட்டப்பட்ட கட்டடங்களின் திறப்பு விழா, ரூ.36 கோடி மதிப்பிலான புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா ஆகியவை வெள்ளிக்கிழமை நடைபெற்றன.புதிய கட்டடங்களைத் திறந்துவைத்து கருணாநிதி பேசியது:சேலத்தில் புதிய ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கு கடந்த 2007-ல் அடிக்கல் நாட்டப்பட்டது. இப்போது திறப்பு விழா காணும் இந்தப் புதிய அலுவலகம் தமிழகத்திலேயே வேறு எங்கும் இல்லாத அளவுக்கு 51 துறைகளின் அலுவலகங்களைக் கொண்டு மிகப் பெரிய அலுவலகமாகத் திகழ்கிறது. இதேபோல் ரூ.139 கோடி மதிப்பீட்டில் மத்திய-மாநில அரசுகளின் நிதி உதவியுடன் கட்டப்பட்டுள்ள இந்த அதி நவீன மருத்துவமனை தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இணையானதாகத் திகழ உள்ளது.நுழைவுத் தேர்வு:மருத்துவமனைகள் மத்திய அரசின் பொறுப்பில் வரும். அப்படி வந்தால் இனி நுழைவுத் தேர்வு உண்டு என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஏற்கெனவே திமுக ஆட்சியில்தான் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. நுழைவுத் தேர்வு இருந்தால் கிராமப்புற மாணவர்கள் முன்னேற முடியாது, உயர்ந்த பதவிகளுக்கு வர முடியாது என்ற காரணத்தால், நுழைவுத் தேர்வு என்னும் கதவு இல்லாமலேயே மாணவர்கள் முன்னேறி வர வசதியாக சட்டம் இயற்றினோம். தமிழகத்தில் நுழைவுத் தேர்வு வேண்டாம் என்பதில் எந்தக் கட்சிக்கும் வேறுபாடு இருக்கக் கூடாது. காங்கிரஸ், பாமக கட்சிகள் இதே கருத்து உடையவை. அதிமுக கூட நுழைவுத் தேர்வு வேண்டாம் என்ற வாதத்தை ஏற்றுக் கொண்டுள்ளது. ஆனால் அக்கட்சித் தலைவர் ஜெயலலிதா, மத்திய அரசு நுழைவுத் தேர்வு கொண்டு வருகிறது, ஆனால் இவர் கடிதம் எழுதுகிறார் என்று அறிக்கை வெளியிட்டார்.கடிதத்தின் பலனே இது... நான் கோரிக்கைகளுக்காகவும், தகவல்களை பரிமாறிக் கொள்வதற்காகவும் பிரதமருக்கு கடிதம் எழுதுகிறேன். நுழைவுத் தேர்வு குறித்த கடிதத்தில் சாமானிய குடிமகன்களின் வாழ்வை நுழைவுத் தேர்வு அழித்துவிடும் என்று தமிழக மக்களின் மனதை பிரதிபலித்து கடிதம் எழுதினேன். அதன் பலனாகத்தான் இப்போது நுழைவுத் தேர்வு நிறுத்தி வைப்பு என்ற தகவல் அங்கிருந்து கிடைத்துள்ளது.உரிமைகளை பறிக்கக் கூடாது: அப்படிப்பட்ட நிலையில் மத்திய அரசின் இந்த முடிவு மகிழ்ச்சியை அளித்தாலும் கூட, மாநில அரசின் உரிமைகளை மத்திய அரசு எடுக்கும் முறையில் இருந்தால் அதற்காக வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.மத்திய அரசு எடுக்கும் நுழைவுத் தேர்வு முடிவானாலும், வரி விதிப்பு போன்ற எந்த செயலாக இருந்தாலும் மாநிலங்களின் கருத்தைக் கேட்டறிந்தே மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும் என்று தமிழகத்தின் சார்பில் கருத்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே இங்கிருந்து எழும் குரல் பொதுவான விஷயங்களுக்கு ஒருமித்த குரலாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் நமக்கு நன்மை கிடைக்கும் என்றார் முதல்வர்.விழாவில், நிதி அமைச்சர் க.அன்பழகன், அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வீரபாண்டி ஆறுமுகம், மத்திய இணையமைச்சர் காந்திச் செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்துக்கள்

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
8/21/2010 5:56:00 AM
8/21/2010 5:56:00 AM


By முத்தமிழ்
8/21/2010 4:43:00 AM
8/21/2010 4:43:00 AM


By முத்தமிழ்
8/21/2010 4:42:00 AM
8/21/2010 4:42:00 AM


By முத்தமிழ்
8/21/2010 4:40:00 AM
8/21/2010 4:40:00 AM


By முத்தமிழ்
8/21/2010 4:39:00 AM
8/21/2010 4:39:00 AM


By Vadivel
8/21/2010 3:56:00 AM
8/21/2010 3:56:00 AM


By George
8/21/2010 3:50:00 AM
8/21/2010 3:50:00 AM


By jandian
8/21/2010 3:42:00 AM
8/21/2010 3:42:00 AM


By naam tamilar
8/21/2010 2:18:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *8/21/2010 2:18:00 AM
ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பொழுதே வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்வதைத்தவிர வேறு வழியில்லை என்றால் எதற்கு ஆட்சிப் பொறுப்பு என்று கேட்க மாட்டார்களா? பதவிகளுக்குப் போராடுவது போல் தமிழகத்தின் / தமிழர்களின் உரிமைகளைக் காக்கவும் மீட்கவும்....Well said Ilakkuvanar..wonderfull arguement.

By Seralaathan-Melbourne
8/21/2010 7:36:00 AM
8/21/2010 7:36:00 AM