செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010

தமிழர்க்குத் தமிழே தேசிய மொழி என்னும் உண்மையை மறந்து இந்தியைத் தேசிய மொழி எனத் தமிழர்களே நம்பும் பொழுது இந்திக்காரர்கள் இந்தியை அனைவரின் தேசிய மொழியாகவும் கருதுவதில் வியப்பில்லை. ஆங்கிலத்தை எல்லா வகையிலும் பயன்படுத்திக் கொண்டு இந்தியக்குடிமக்களாக உள்ள ஆங்கில-இநதியர்களின் தாய்மொழி என்ற அளவில் அதையும் தேசிய மொழியாக ஏற்றுக் கொண்டு ஆங்கிலத்திற்கு எதிராகக் கூச்சலிட்டுப் பயனில்லை. எனினும் தமிழகத்தலைவர்கள் தமிழின் சிறப்பையும்  தமிழுக்கு எல்லா  இடங்களிலும் தலைமைநிலை கொடுக்க வேண்டியதன் இன்றியமையாமையும் விளக்காமல் தமிழ்வாழ்க என்று மட்டும்  சொன்னால் போதாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.  இந்தி  அம் மொழி பேசும் பகுதியில் வாழட்டும். அடுத்த மொழிக்காரர்களின் செலவில் அடுத்த மொழிக்காரர்களிடம் இந்தயைத் திணிக்க வேண்டா. 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக