புது தில்லி, ஆக.20: மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்தநாள் விழா விளம்பரத்துக்கு செலவு செய்த பணத்தைக் கொண்டு லே பகுதியில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி இருக்கலாம் என்று மாநிலங்களவை பாஜக உறுப்பினர் பிரபாத் ஜா கூறினார்.÷மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரத்துக்கு பிந்தைய நேரத்தில் இதுகுறித்து பிரச்னை எழுப்பி அவர் பேசியதாவது: ராஜீவ் காந்தி பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. பிறந்தநாளையொட்டி விளம்பரங்கள் கோடிக்கணக்கான ரூபாய் செலவில் செய்யபட்டுள்ளன. இந்த பணத்தை லே பகுதியில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அனுப்பியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.÷மழை, வெள்ளத்தால் லே பகுதியிலுள்ள மக்கள் குடிக்க நீரின்றியும், அடிப்படை சுகாதார வசதிகளின்றியும், இருக்க இடமின்றியும் அவதிப்படுகின்றனர். இந்தத் தொகையை அந்தப் பணிகளுக்குச் செலவிடப்பட்டு இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்றார் அவர். இதையடுத்து காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆவேசமாக குரல் எழுப்பினர். பிரபாத் ஜாவுக்கு எதிராக அவர்கள் கோஷங்களை எழுப்பினர். இதனால் அவையில் கூச்சல்-குழப்பம் ஏற்பட்டது. பாஜக உறுப்பினர் தனது கருத்துகளை வாபஸ் பெறவேண்டும் என்று அவர்கள் கோஷம் எழுப்பினர். பின்னர் மாநிலங்களவை தலைவர் தலையிட காங்கிரஸ் உறுப்பினர்கள் அமைதியாயினர்.
கருத்துக்கள்

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
8/21/2010 7:29:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *8/21/2010 7:29:00 AM