ஈரோடு, அக். 2:தமிழகத்தில் வாரிசுகள் சொன்னால்தான் வேலை நடக்கும் என முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஈவிகேஎஸ். இளங்கோவன் தெரிவித்தார். வீரப்பன் தேடுதல் வேட்டையின்போது அதிரடிப் படை போலீஸôரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி ஈரோட்டில் சனிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.இதில், ஈவிகேஎஸ். இளங்கோவன் பேசியது: வீரப்பனை பிடிக்க வேண்டும் என்று நினைத்திருந்தால் ஹெலிகாப்டர் மூலம் எப்போதோ எளிதாகப் பிடித்திருக்க முடியும். தேடுதல் வேட்டை என்ற பெயரில் அரசியல் நடத்தப்பட்டது. இதற்காக உருவாக்கப்பட்ட அதிரடிப்படை போலீஸôர், தேடுதல் என்ற பெயரில் உல்லாசப் பயணம் சென்றனர்.காட்டுக்கு அரசன் போல நடந்து, மிருகங்களை வேட்டையாடி விருந்து சாப்பிட்டு, மலைவாழ் மக்களிடம் மிருகத்தைவிடக் கேவலமாக நடந்து கொண்டனர். வீரப்பனை பிடித்த போலீஸôருக்குப் பதக்கம், பரிசு, பதவி உயர்வு வழங்கப்பட்டன. ஆனால் அவர்களால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னும் இழப்பீடு கேட்டுப் போராடிக் கொண்டிருக்கின்றனர்.தமிழகத்தில் இப்போது வாரிசுகள் சொன்னால்தான் வேலை நடக்கிறது. வேண்டாதவர்களின் கோரிக்கைகள் வேண்டாதவைதான். தா.பாண்டியன், இளங்கோவன் போன்றவர்கள் வேண்டாதவர்கள். இவர்கள் சொல்வதை ஏன் செய்ய வேண்டும் என்று கருதுவதால்தான், இன்னும் இந்த மக்களுக்கு உரிய நியாயம் கிடைக்கவில்லை என்றார்.
கருத்துக்கள்
வாரிசு என்னும் நிழலில் கட்சியில் ஒட்டிக் கொண்டிருப்பவர் சொல்வது தன்னிலை விளக்கமாகத்தான் இருக்கும். இப்படி ஓர் அரசியல் பிழைப்புவாதி இருப்பதை நாளும் ஊடகங்கள் நினைவூட்டிக் கொண்டிருக்கும் கொடுமையைத்தான் நம்மால் தாங்க முடிய வில்லை.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்.
By Ilakkuvanar Thiruvalluvan
10/3/2010 3:31:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *10/3/2010 3:31:00 AM