சென்னை, அக். 4: தமிழ் வழியில் படித்தோருக்கு அரசு வேலையில் 20 சதவீதம் எவ்வாறு ஒதுக்கீடு செய்யப்படும் என்கிற தகவல் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அரசு வேலைவாய்ப்பில் நேரடி நியமனங்களில் 20 சதவீதம், தமிழ் வழியில் படித்தோருக்கு அளிக்கப்படும் என்று தமிழக அரசு அவசரச் சட்டம் பிறப்பித்துள்ளது. இந்தச் சட்டத்தை ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா கடந்த மாதம் 7-ம் தேதி பிறப்பித்தார். ஒதுக்கீடு எப்படி? தமிழ் வழியில் படித்தோருக்கு அரசு வேலைவாய்ப்பில் 20 சதவீதம் ஒதுக்கீடு செய்வது அமலுக்கு வந்துள்ளது. இதன்படி ஒதுக்கீட்டு முறை எவ்வாறு என்பது குறித்து தமிழக அரசின் அரசிதழில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை செயலாளர் கே.என்.வெங்கடரமணன் வெளியிட்டுள்ள உத்தரவு: நேரடி நியமனம் வழியிலான வேலைவாய்ப்புகள் அனைத்திலும் 20 சதவீதம் ஒதுக்கீடு அளிக்கப்படும். பொதுப் பிரிவு, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என வகுப்பு வாரியாக இந்த ஒதுக்கீட்டு முறை அமல்படுத்தப்படும். 200 பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட்டால் அதில், 40 இடங்கள் தமிழ் வழியில் படித்தோருக்கு முன்னுரிமை அடிப்படையில் அளிக்கப்படும். இதில், பொதுப்பிரிவில் 19, 31, 48, 65, 81, 100, 115, 131, 148, 165, 181, 200 ஆகிய சுழற்சி எண்களில் 12 பேர் நியமிக்கப்படுவர். இதேபோன்று, பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த தேர்வர்களில் 18, 38, 58, 74,114,134, 149, 170, 190, 199 ஆகிய சுழற்சி எண்களில் 11 பேருக்கும் வேலைவாய்ப்பு அளிக்கப்படும். மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபுப் பிரிவைச் சேர்ந்தவர்களில் 23, 46, 73, 96, 123, 146, 173, 196 ஆகிய சுழற்சி எண்களில் 8 பேருக்கும், தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு 26, 62, 92, 126, 162, 192 ஆகிய எண்களில் 6 பேர்களுக்கும் பணி வாய்ப்பு அளிக்கப்படும். பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த முஸ்லிம் பிரிவினர், அருந்ததியர் சமுதாயத்தினர், பழங்குடியினர் ஆகியோருக்கு தலா ஒவ்வொரு இடத்திலும் சுழற்சி எண் முறையில் வேலை வாய்ப்பு தரப்படும் என்று அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்கள்

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/5/2010 5:25:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *10/5/2010 5:25:00 AM

அவ்வளவுதான்.
அன்பன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/6/2010 5:08:00 AM
10/6/2010 5:08:00 AM


By MANI
10/5/2010 4:24:00 PM
10/5/2010 4:24:00 PM


By பாமரன்
10/5/2010 12:49:00 PM
10/5/2010 12:49:00 PM


By A.Gnanasundaram
10/5/2010 9:15:00 AM
10/5/2010 9:15:00 AM