புதுச்சேரி, அக். 5: புதுச்சேரியில் 55 வயது பூர்த்தியானவர்களுக்கு அடுத்த ஆண்டு ஜனவரி முதல் ஓய்வூதியம் வழங்கப்படும் என்று சமூக நலத்துறை அமைச்சர் மு.கந்தசாமி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பில் நடந்த திட்ட பயனளிப்பு விழாவில் அமைச்சர் மு.கந்தசாமி பேசியது:தற்போது 60 வயதானவர்களுக்கு உதவித் தொகைகள் வழங்கப்பட்டு வந்தது. வயதை குறைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்தனர். இதைத் தொடர்ந்து கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் 55 வயது அடைந்தவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவித்தோம். அதன்படி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் வழங்கப்படும்.கடந்த 2006-ம் ஆண்டுக்கு பிறகு நிதி பற்றாக்குறையால் நலத் திட்ட உதவிகள் வழங்க முடியாமல் நிறுத்தப்பட்டது. தற்போது மொத்தமாக அனைத்து பயனாளிகளுக்கும் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இனி நலத் திட்ட உதவிகளை உரிய நேரத்தில் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கருத்துக்கள்
புதுச்சேரி அரசிற்குப் பாராட்டுகள். எனினும், இதனை ஓய்வூதியம் என்று சொல்வது பொருந்தாது. நல உதவிகள் என்றே குறிப்பிட்டிருக்கலாம். அல்லது pension என்ற சொல்லையே கையாள வேண்டும் என எண்ணினால் கொடுப்பூதியம் (கொடுவை) என்று சொல்ல வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/6/2010 4:50:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * 10/6/2010 4:50:00 AM