
சென்னை, அக். 4: சென்னையில் மாநகரப் போக்குவரத்துக் கழக ஊழியர்களில் ஒரு பிரிவினர் திங்கள்கிழமை காலையில் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக 1000-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படாததால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாயினர். போக்குவரத்துக் கழக அதிகாரிகளும், போலீஸ் அதிகாரிகளும் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து மதியத்துக்குப் நேரத்துக்குப் பிறகு வேலை நிறுத்தப் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. சென்னை தியாகராய நகரில் இருந்து அம்பத்தூர் செல்லும் மாநகரப் போக்குவரத்துக் கழக பஸ் ஞாயிற்றுக்கிழமை இரவு பாடி புதுநகர் அருகே சென்றுக் கொண்டிருந்தது. அப்போது, அந்த பஸ்ûஸ கார் ஒன்று முந்திச் செல்ல முயன்றது. அந்தக் காரில் அம்பத்தூர் நகராட்சி 37-வது வார்டு திமுக கவுன்சிலர் அன்புவின் மகன் செந்தில் சுரேஷ், முருகன், ஸ்டாலின் உள்ளிட்ட சிலர் இருந்துள்ளனர். அப்போது அந்தக் கார் மீது பஸ் லேசாக உரசியது. இதையடுத்து தங்கள் காரை பஸ்ஸின் குறுக்கே நிறுத்தி பஸ் டிரைவர் குமாரவேல், நடத்துனர் குமார் ஆகியோருடன் வாக்குவாதத்தில் அவர்கள் ஈடுபட்டனர். இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. அப்போது அங்கு திரண்ட செந்தில் சுரேஷின் ஆதரவாளர்கள், பஸ்ûஸயும், டிரைவர், நடத்துனர் ஆகியோரையும் தாக்கினர். அவ்வழியே வந்த மற்ற பஸ்களில் இருந்த டிரைவர்களும், நடத்துனர்களும் குமாரவேல், குமாருக்கு ஆதரவாகப் பிரச்னையில் தலையிட்டனர். அதேசமயத்தில், செந்தில் சுரேஷுக்கு ஆதரவாக வந்தவர்கள் அங்கு நிறுத்தப்பட்டிருந்த பஸ்களையும் கல்வீசித் தாக்கினர். இதில் 3 பஸ்கள் சேதமடைந்தன. இந்தத் தாக்குதலில் டிரைவர்கள் குமாரவேல், தினகரன், நடத்துனர் குமார் ஆகியோர் காயமடைந்தனர். இவர்கள் 3 பேரும் அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். போக்குவரத்துக் கழக ஊழியர்கள் 3 பேர் கவுன்சிலர் ஒருவரின் மகன் மற்றும் ஆதரவாளர்களால் தாக்கப்பட்ட தகவல் மற்ற பஸ் டிரைவர்கள், நடத்துனர்கள் மத்தியில் வேகமாகப் பரவியது. பணி முடியும் நேரம் என்பதால் அனைத்து ஊழியர்களும் பஸ்களை அந்தந்த பணிமனைகளில் சேர்ப்பதிலேயே தீவிரமாக இருந்தனர். வதந்தி பரவியது: இந்த நிலையில், திங்கள்கிழமை காலையில் பஸ்களை இயக்க ஊழியர்கள் வழக்கம் போல வந்தனர். அப்போது, ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த தாக்குதலில் காயமடைந்த நடத்துனர் ஒருவர் இறந்துவிட்டதாகவும், மற்றொரு டிரைவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் ஊழியர்கள் மத்தியில் வதந்தி பரவியது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அதிகாலையில் எடுக்கப்பட்ட சில பஸ்களும் பாதி வழியில் நிறுத்தப்பட்டன. அம்பத்தூர், ஆவடி, அண்ணா நகர் மேற்கு ஆகிய பணிமனைகளைச் சேர்ந்த பஸ்கள் அனைத்தும் முழுமையாக நிறுத்தப்பட்டன. இந்தப் பணிமனைகளைச் சேர்ந்த ஊழியர்களில் ஒரு பிரிவினர் திருமங்கலம் காவல் நிலையம், அண்ணா நகர் மேற்கு பணிமனை அருகில் மறியலில் ஈடுபட்டனர். இந்த திடீர் வேலை நிறுத்தம் தொடர்பான தகவல் பரவியதன் காரணமாக வடபழனி, கே.கே. நகர் உள்ளிட்ட பல்வேறு பணிமனைகளைச் சேர்ந்த ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதிப்பு: ஊழியர்களின் இந்த திடீர் வேலை நிறுத்தத்தின் காரணமாக, சென்னையின் பல்வேறு இடங்களில் பஸ் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியது. சுமார் 1000-க்கும் மேற்பட்ட பஸ்கள் பணிமனைகளில் நிறுத்திவைக்கப்பட்டன. திங்கள்கிழமை காலை வேளை என்பதால், பள்ளிகள், கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிக்குச் செல்வோர் பெரும் அவதிக்கு ஆளாயினர். அரசு பஸ்களையே நம்பியுள்ள பல்வேறு தரப்பினரும் ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் செலுத்திச் சென்றனர். அதிகாரிகள் தலையீடு: இந்த திடீர் வேலை நிறுத்தம் குறித்து தகவல் அறிந்து, மாநகரப் போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் பாபு, மாநகரப் போலீஸ் கூடுதல் கமிஷனர் ஷகீல் அக்தர், இணை கமிஷனர் தாமரைக்கண்ணன் உள்ளிட்டோர் அண்ணா தொழிற்சங்க பேரவையைச் சேர்ந்த அதிமுக எம்.எல்.ஏ. சின்னசாமி, சிஐடியூ நிர்வாகி ஏ.செüந்தர்ராஜன் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு: இந்தப் பேச்சுவார்த்தையின்போது, 2 டிரைவர்கள், நடத்துனர் ஆகியோரைத் தாக்கியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் சில கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படுவதாக நிர்வாக இயக்குநர் பாபு உறுதி அளித்தார். இதனை ஏற்று, வேலை நிறுத்தப் போராட்டம் பிற்பகல் 12 மணிக்கு கைவிடப்பட்டது. 4 பேர் கைது: இதையடுத்து தாக்குதலில் ஈடுபட்டது தொடர்பாக, திமுக கவுன்சிலரின் மகன் செந்தில் சுரேஷ், முருகன், ஸ்டாலின், உதயகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது கொலை முயற்சி, பொது சொத்துகளைச் சேதப்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது என மாநகரப் போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் பாபு தெரிவித்தார். பெரும்பாலான ஊழியர்கள் பணிக்குத் திரும்பியதை அடுத்து முற்றிலுமாக முடங்கி இருந்த பஸ் போக்குவரத்து பிற்பகலுக்குப் பிறகு ஓரளவுக்கு சீரானது. இருப்பினும், வீட்டுக்குச் சென்றுவிட்ட பல ஊழியர்கள் பணிக்கு வராததால், வேலை நிறுத்தம் முடிந்தபிறகும் நூற்றுக்கணக்காண பஸ்கள் ஓடவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். போராட்டங்களை தீவிரப்படுத்தும் வதந்தி சென்னை பாடி புதுநகரில் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் சிலர் தாக்கப்பட்டதில் பொய்யான சில தகவல்கள் ஊழியர்கள் மத்தியில் வதந்தியாகப் பரவியதே வேலை நிறுத்தப் போராட்டம் தீவிரமடைய காரணம் என தெரியவந்துள்ளது. சில மாதங்களுக்கு முன் அம்பத்தூர் தொழிற்பேட்டை பஸ் நிலையத்தில் வெளி நபர் ஒருவருக்கும், ஊழியர்கள் சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில், அந்த நபரை, மனிதாபிமான அடிப்படையில் போலீஸôர் மீட்டு புறக்காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், தாக்குதலுக்கு ஆளான அந்த நபர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவரின் மகன் என்றும், அதனாலேயே போலீஸôர் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக வதந்தி பரவியது. இதையடுத்து, போக்குவரத்து ஊழியர்களுக்கும் போலீஸôருக்கும் இடையே மோதல் வெடித்தது. இப்போது தாக்குதலுக்கு ஆளான ஊழியர்கள் 3 பேரும் நலமுடன் இருப்பதை அவர்களை நேரில் சென்று சந்தித்த தொழிற்சங்கத் தலைவர்கள் உறுதிப்படுத்தினர். இருப்பினும் வதந்தியால் போராட்டம் தீவிரமடைந்தது. கடும் நடவடிக்கை: ஊழியர்கள் தாக்கப்பட்டதாக தகவல் வந்தால் அது குறித்து அலுவலகத்தை தொடர்புக் கொண்டு உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் வதந்திகளைப் பரப்புவோர் யார் என கண்டறியப்பட்டு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநகர போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் பாபு தெரிவித்தார்.
கருத்துக்கள்

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/5/2010 5:49:00 AM
10/5/2010 5:49:00 AM


By Appan
10/5/2010 3:12:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * 10/5/2010 3:12:00 AM
கருத்துக்கள்


By Ilakkuvanar Thiruvalluvan
10/5/2010 9:10:00 AM
10/5/2010 9:10:00 AM


By mani
10/5/2010 8:38:00 AM
10/5/2010 8:38:00 AM


By Ganapathy
10/5/2010 8:26:00 AM
10/5/2010 8:26:00 AM