ராமர் பிறந்த இடத்தை உறுதிப்படுத்த முடிகிறது; ராஜராஜன் மறைந்த இடத்தை அறியமுடியவில்லையே! - முதல்வர்
First Published : 04 Oct 2010 01:01:45 AM IST
Last Updated : 04 Oct 2010 03:36:30 AM IST
சென்னை, அக்.3: சுமார் 17 லட்சம் ஆண்டுகளுக்கு முன் ராமர் பிறந்த இடத்தை உறுதிப்படுத்த முடிகிறது; ஆனால், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ராஜராஜ சோழனின் கல்லறையையோ, நினைவுத் தூண் அமைந்த இடத்தையோ அறிய முடியவில்லையே என முதல்வர் கருணாநிதி வருத்தம் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக, அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:அண்மையில் நடைபெற்ற இரண்டு, மூன்று நிகழ்ச்சிகளை இணைத்துப் பார்க்கும்போது எனக்கு ஒரு பக்கம் பிரமிப்பாகவும், பெருமையாகவும் உள்ளது; இன்னொரு பக்கம் ஆச்சரியமாகவும் உள்ளது.நாகர்கோவிலில் திமுக முப்பெரும் விழா நடைபெற்றது. அதிலே பேசும்போது, லெமூரியா கண்டம் இருந்த பகுதியில்தான் இப்போது கூடியுள்ளதாகவும், இது ஆதி தமிழன் தோன்றிய இடம் என்றும் தெரிவித்தேன்.மூன்றாயிரம் ஆண்டுகள் அல்லது 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றிய திராவிடப் பாரம்பரியத்தின் பரிணாம வளர்ச்சியையும் இந்தக் கூட்டத்தில் குறிப்பிட்டு பேசினேன்.லெமூரியா கண்டம் இருந்தது என்பதை ஆராய்ச்சியாளர்கள் ஆதாரங்களுடன் எடுத்துக் கூறியுள்ளனர்.அதைப்போலவே தமிழரின் கலை, பண்பாடு, கலாசாரத்துக்கு எடுத்துக்காட்டாகத் திகழும் ராஜராஜனின் தஞ்சைப் பெரிய கோயிலின் ஆயிரம் ஆண்டு நிறைவு விழா மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்றது. அதில் சோழர்களின் வெளிநாட்டு வணிகம், கடல் வணிகம் ஆகியவற்றின் நுணுக்கங்களை எடுத்துரைத்தேன்.தென்னகத்தில் சோழப் பேரரசு 176 ஆண்டுகள் நீடித்திருந்தது என்பதற்கான ஆதாரங்களை நீலகண்ட சாஸ்திரி, காத்யாயனர் போன்ற ஆய்வாளர்களின் கருத்துகள் எடுத்து வைக்கப்பட்டது.ராஜராஜ சோழனின் நிர்வாகத்தில் அறிமுகம் செய்து வைத்த நில அளவை முறை, ஊராட்சிக்கான குடவோலை முறை ஆகியவற்றுக்கு தஞ்சை பெரிய கோயிலும், கல்வெட்டுகளும் ஆதாரங்களாக உள்ளன.அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தை மூன்றாகப் பிரித்து வழங்க வேண்டும் என்று அலாகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதில் நீதிபதி டி.வி.சர்மா வழங்கிய தீர்ப்பில், "சர்ச்சைக்குரிய இடம் ராமர் பிறந்த இடம்தான். ராமர் ஒரு கடவுள். அவர் தெய்வாம்சம் பொருந்தியவராக வழிபடப்பட்டிருக்கிறார். அங்கு பாபரால் கட்டடம் எழுப்பப்பட்டது. அந்த இடத்தை ராமர் பிறந்த இடமாகக் கருதி ஹிந்துக்கள் வழிபட்டு வந்துள்ளனர். நினைவு தெரிந்த நாளிலில் இருந்தே, அதை புனிதத் தலமாகக் கருதி ஆன்மிகப் பயணம் சென்று வருகிறார்கள்' என்று குறிப்பிட்டுள்ளார்.ராமர் கிருத யுகத்தில் பிறந்ததாகச் சொல்லப்படுகிறது. கிருதயுகம் என்பது 17 லட்சத்து 28 ஆயிரம் ஆண்டுகள் கொண்டதாகும். இப்படி கற்பனைக்கே எட்டாத எண்ணிக்கை கொண்ட ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்ச்சியைப் பற்றி, ராமர் பிறந்த இடம் இதுதான் என்று அறுதியிட்டு நீதிமன்றம் கூறியுள்ளது.இந்தத் தீர்ப்பைப் பார்க்கும்போது, சுமார் 17 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ராமர் பிறந்த இடத்தை உறுதிப்படுத்த முடிகிறது; ஆனால், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து, தென்னகத்தையே ஆண்ட மாமன்னன் ராஜராஜ சோழன் மறைந்த விதத்தையோ, அவன் கல்லறையையோ, அவனுக்கான நினைவுத் தூண் அமைந்த இடத்தையோ அறியமுடியவில்லையே என அகம் நொந்து வருந்தத்தானே வேண்டியுள்ளது.திராவிட இனத்தின் வரலாறு நிரல்படுத்தி முறையாக எழுதப்படவில்லை என்றாலும், லெமூரியாக் கண்டத்தைப் பற்றிய ஆராய்ச்சி, சிந்துவெளி நாகரிகத்தைப் பற்றிய ஆராய்ச்சி, தமிழ்மொழியைப் பற்றிய மூல ஆராய்ச்சி ஆகிய ஆராய்ச்சிகளின் மூலமாக தொல்லியல் அறிஞர்கள், மொழியியல் வல்லுநர்கள் திராவிட நாகரிகம் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்று கருத்துத் தெரிவித்துள்ளனர்.இதனடிப்படையில், திராவிட இனத்தின் வரலாறு பற்றிய ஆதாரங்களை, பிற வரலாறுகளுடன் ஒப்பிட்டு நோக்கும்போது, திராவிட இனம் அறிவியல் ரீதியாக வாழ்ந்துள்ள உண்மை வரலாற்றினைத் தெளிவாக உலகம் அறிந்துகொள்ள முடியும்.ஆனால், திராவிட இனத்தைப் புறந்தள்ள முயற்சித்த ஆரிய நாகரிகம் அடிப்படை ஆதாரம் இல்லாமலேயே வெறும் மூடநம்பிக்கையை மக்களிடம் வளர்ப்பதில் மட்டும் முனைப்பாக செயல்பட்டிருக்கிறது என்று தெரிவித்துள்ளார் கருணாநிதி.
கருத்துக்கள்
இராமர் இடம் என நம்பிக்கையின் அடிப்படையில்தான் நீதிபதிகள் தெரிவித்துள்ளனரே தவிர எந்தச் சான்றாவணங்கள் அடிப்படையிலும் கூற வில்லை. தமிழ் தொடர்பான இலக்கியச் சான்றுகளையும் பிறவற்றையும் கற்பனை என்றே திரித்துக் கூறுவோரே மிகுதி. எனவேதான் கலைஞரின் எண்ணம் வருத்த வெளிப்பாடாக உள்ளது. என்றாலும் முதல்வரின் உள்ளத்தில் நீறுபூத்த நெருப்பாகக் கலைஞர் உள்ளார் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. இந்த உள்ளம் குடும்பப்பற்றினைப் புறந்தள்ளினால் தமிழ் நலம் பெறும். அவர் குடும்பமும் புகழ் பெறும்.
http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName=Tamilnadu&artid=312892&SectionID=129&MainSectionID=129&SEO=&Title=%u0bb0%u0bbe%u0bae%u0bb0%u0bcd+%u0baa%u0bbf%u0bb1%u0ba8%u0bcd%u0ba4+%u0b87%u0b9f%u0ba4%u0bcd%u0ba4%u0bc8+%u0b89%u0bb1%u0bc1%u0ba4%u0bbf%u0baa%u0bcd%u0baa%u0b9f%u0bc1%u0ba4%u0bcd%u0ba4+%u0bae%u0bc1%u0b9f%u0bbf%u0b95%u0bbf%u0bb1%u0ba4%u0bc1%3b+%u0bb0%u0bbe%u0b9c%u0bb0%u0bbe%u0b9c%u0ba9%u0bcd+%u0bae%u0bb1%u0bc8%u0ba8%u0bcd%u0ba4+%u0b87%u0b9f%u0ba4%u0bcd%u0ba4%u0bc8+%u0b85%u0bb1%u0bbf%u0baf%u0bae%u0bc1%u0b9f%u0bbf%u0baf%u0bb5%u0bbf%u0bb2%u0bcd%u0bb2%u0bc8%u0baf%u0bc7!+-+%u0bae%u0bc1%u0ba4%u0bb2%u0bcd%u0bb5%u0bb0%u0bcdஅன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்.
http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName=Tamilnadu&artid=312892&SectionID=129&MainSectionID=129&SEO=&Title=%u0bb0%u0bbe%u0bae%u0bb0%u0bcd+%u0baa%u0bbf%u0bb1%u0ba8%u0bcd%u0ba4+%u0b87%u0b9f%u0ba4%u0bcd%u0ba4%u0bc8+%u0b89%u0bb1%u0bc1%u0ba4%u0bbf%u0baa%u0bcd%u0baa%u0b9f%u0bc1%u0ba4%u0bcd%u0ba4+%u0bae%u0bc1%u0b9f%u0bbf%u0b95%u0bbf%u0bb1%u0ba4%u0bc1%3b+%u0bb0%u0bbe%u0b9c%u0bb0%u0bbe%u0b9c%u0ba9%u0bcd+%u0bae%u0bb1%u0bc8%u0ba8%u0bcd%u0ba4+%u0b87%u0b9f%u0ba4%u0bcd%u0ba4%u0bc8+%u0b85%u0bb1%u0bbf%u0baf%u0bae%u0bc1%u0b9f%u0bbf%u0baf%u0bb5%u0bbf%u0bb2%u0bcd%u0bb2%u0bc8%u0baf%u0bc7!+-+%u0bae%u0bc1%u0ba4%u0bb2%u0bcd%u0bb5%u0bb0%u0bcdஅன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்.
By Ilakkuvanar Thiruvalluvan
10/4/2010 4:29:00 AM
10/4/2010 4:29:00 AM
அரசன் பேரரசனாகவே இருந்தாலும் அவனது புகழ் ஒரு சில வருடங்கள் தான் இருக்கும் ! அதன் பின் கால ஓட்டத்தில் கரைந்து காணாமல் போய் விடும் ! ஆனால் பகவன் ஸ்ரீ ராமன் ஒரு தெய்வம் என்பதால் அவனது புகழ் யுகங்களைக் கடந்து காலங்களைக் கடந்து நிலைத்து நிற்கும் ! இந்த பூமியே அழிந்து போனாலும் மனிதனின் சிந்தனைக்கும் அறிவுக்கும் உட்படாமல் ஸ்ரீ ராமனின் புகழ் இந்த பிரபஞ்சத்தில் உயர்ந்து நிற்கும் !இந்த பேருண்மை முட்டாள்களுக்கும் மூடர்களுக்கும் விளங்காது ! ஸ்ரீ ராம நாமத்தை சுற்றி நடைபெறும் அதிசயங்களுக்கு திருக்குவளை தீயசக்தியாம் கருணாநிதி தவறான வியாக்கியானம் செய்வது மிகவும் கண்டனத்திற்கு உரியது ! ஒழிக திருக்குவளை தீயசக்தியாம் கருணாநிதி!... எக்காலமும் எல்லா உலகிலும் வாழ்க ஸ்ரீ ராமனின் புகழ்!!! ஸ்ரீ ராம ஜெயம் !!! @ rajasji
By rajasji
10/4/2010 3:06:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * 10/4/2010 3:06:00 AM