செவ்வாய், 5 அக்டோபர், 2010

தி.மு.க. ஆட்சியில் தொடர எண்ணினால் இத்தகைய உட்பகை மீது உடனே கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகாரப் போதை தலைக்கேறி இருக்கும் போது கண்மண் தெரியாமல்தான் நடந்து கொள்வார்கள். போதையைத் தெளிவிக்க வேண்டியது தி.மு.க. தலைவரின் கடமை. காலச் சுழற்சி இயற்கை என்பதைப் புரிந்து கொண்டு  அடக்கத்துடன் செயல்பட்டால் மக்கள் நலத் திட்டங்கள் கை கொடுக்கும். இல்லையேல் யானைபோல் தன் தலையில் தானே மண்ணைவாரிக் கொட்டிக் கொள்ள வேண்டடியதுதான். கட்சியினரின் ஒவ்வொரு குற்றச் செயலும் ஆளும் கட்சியாலேயே எதிர்க்கட்சிக்கு அணிவிக்கும் வாக்குமாலை  என்பதை நினைவில் கொண்டால் அடக்கம் தானே வரும். அமைதி தானே நிலவும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

சென்னை, அண்ணா நகரை அடுத்த திருமங்கலம் அருகே ஆளுங்கட்சி கவுன்சிலரின் மகன் மற்றும் அவரது கும்பலால், அரசு பஸ்கள் அடித்து நொறுக்கப்பட்டன; பஸ் ஊழியர்கள் தாக்கப்பட்டனர். இதைக் கண்டித்து போக்குவரத்துக் கழக ஊழியர்கள், நேற்று திடீர், "ஸ்டிரைக்'கில் இறங்கினர். சென்னை நகர் முழுவதும் பஸ்கள் இயங்காததால் போக்குவரத்து ஸ்தம்பித்து, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.


சென்னை தி.நகரிலிருந்து அம்பத்தூர் செல்லும் பஸ் (வழித்தடம் எம் 147 பி) நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் அம்பத்தூரை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது, பின்னே வந்த ஸ்கார்பியோ கார் டிரைவர், ஹாரன் அடித்து வழி கேட்டார்.குறுகிய சாலையாக இருந்ததால், பஸ் டிரைவரால் வழி கொடுக்க முடியவில்லை. சிறிது தூரம் சென்றதும், அந்த பஸ்சை வழிமறித்து ஸ்கார்பியோ கார் நின்றது. காரில் இருந்து இறங்கிய தி.மு.க., மாநகராட்சி கவுன்சிலர் அன்பின் மகன் செந்தில் சுரேஷ்(27) மற்றும் டிரைவர் உதயகுமார்(22) ஆகியோர், பஸ் டிரைவரிடம் வாக்குவாதம் செய்தனர்.செந்தில் சுரேஷ் அழைப்பின் பேரில் அங்கு வந்த 10 பேர் கொண்ட கும்பல், பஸ் டிரைவர் குமாரவேலுவை இரும்பு கம்பி மற்றும், "டைல்ஸ்' கற்களால் சரமாரியாக தாக்கியது; கண்டக்டர் குமாரும் தாக்கப்பட்டார். இதில், குமாரவேலுவின் கண், கன்னம், காது மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. குமாரின் கை மணிக்கட்டில் எலும்பு முறிவு ஏற்பட்டது.மற்றொரு பஸ் டிரைவர் தினகரனும் தாக்கப்பட்டார். தொடர்ந்து அந்த கும்பல், பஸ் கண்ணாடியை அடித்து நொறுக்கியது. அந்த வழியாக வந்த ஐந்து பஸ்களை அடித்து நொறுக்கி, கும்பல் வெறியாட்டம் நடத்தியது.

திடீரென பஸ் தாக்கப்பட்டதால், பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். அப்பகுதியில் இரண்டு மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது.படுகாயமடைந்த டிரைவர்கள் மற்றும் நடத்துனர் மூவரும், சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ரவுடிகளின் இந்த வெறியாட்டத்தைக் கண்டித்தும், அவர்களை கைது செய்யக் கோரியும், மாநகர போக்குவரத்துக் கழக ஊழியர்கள் நேற்று திடீர் வேலை நிறுத்தத்தில் இறங்கினர்.அண்ணா நகர் மேற்கு, அம்பத்தூர், ஆவடி, அயனாவரம், கே.கே., நகர், தாம்பரம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட பணிமனை தொழிலாளர்கள் பஸ்களை இயக்காமல், திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். சென்னை நகர் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பஸ்கள் இயங்காததால், அலுவலகம், பள்ளி மற்றும் கல்லூரி செல்பவர்கள் பாதிப்புக்கு உள்ளாயினர்.

சென்னை நகரின் பல பகுதிகளிலும் நடுவழியில் பஸ்கள் நிறுத்தப்பட்டதால், பயணிகள் அடுத்து என்ன செய்வது எனப் புரியாமல் தவித்தனர். கோயம்பேடு பஸ் நிலையம், சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் குவிந்த வெளியூர் பயணிகள், பஸ் இல்லாமல் அவதிக்குள்ளாயினர்.தாக்குதலில் ஈடுபட்ட செந்தில் சுரேஷ், உதயகுமார், ஸ்டாலின், முருகன் ஆகிய நால்வரும், கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டதை, மத்திய சென்னை இணை கமிஷனர் தாமரைக்கண்ணன் உறுதி செய்தார்.அதைத் தொடர்ந்து, தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை கைவிட சம்மதித்தனர். மதியம் 1 மணிக்கு மேல் பஸ்கள் இயங்கத் துவங்கின.

-நமது நிருபர்கள் குழு- 


மேலும் சம்பவம் செய்திகள்:




வாசகர் கருத்து (37)
ரங்கராஜன் - லாஸ்ஏஞ்சில்ஸ்யு.எஸ்.ஏ.,இந்தியா
2010-10-05 05:16:11 IST
ஒரு முதலமைச்சர்,துணைமுதல்வர் இன்னும் எத்தனையோ அமைச்சர்கள்,போலீஸ் கமிசனர்,துனைகமிசனர்கள் ,இணை கமிஷனர்கள் அவர்களின் படைகள் இத்தனை பேர் இருந்தும் பலமணி நேரம் பஸ்நகரில் ஓடவில்லை என்பது தெரியாமல் போனது ஏன் ?ஆளுங்கட்சியினர் என்பதால் கேட்டு,கேட்டு நடவடிக்கையா ?அதுவும் எல்லா பஸ் ஊழியர்களும் போராடிய பின்னர் கைது நடவடிக்கை என்பது நகரில் சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கிறது என்பதற்கு சான்றாக உள்ளது;;;நான் முன்பே எழுதியதுபோல் மூன்று சட்டங்கள் போலீஸ் கையாள்கிறார்களா ? ஒன்று;;;ஆளுங்கட்சியினர் மீது;;;;;;இரண்டு;;;;;;;எதிர்கட்சியினர் மீது ;;;;;மூன்று ;;;;;சாதாரண பொதுமக்கள் மீது ;;;;;;நான்காவதாக இப்போது ஆளுங்கட்சிக்கு வேண்டியவர்மீது ;;;அதிகாரிகள் சிபாரிசு மீது ;;;;;;நல்ல திறமையுள்ள போலீசாரும் கை கட்டி சேவகம் செய்யும் நிலை ;நாடு எங்கே போய்கொண்டு இருக்கிறது ?நல்ல நிலை வரும் நாள் எப்போது ?கண்காணிக்க வேண்டிய மத்திய அரசும் துணை போவது இன்னும் கொடுமை;;;ஒரு கவுன்சிலர் மகனால் சென்னையை அரை நாள் கலக்க முடியும் என்றால் எல்லா மாவட்டத்தில் உள்ள ஆளுங்கட்சியினர் நினைத்தால் முழு தமிழகத்தையும் என்ன கலக்கு கலக்குவார்கள் ? இப்படி நடக்கும் போதுகாத்திருக்கும் போலீசார் கடைசியில் மிசா போல ஏதாவது வரும் போது வேலை காட்டுகிறார்கள்;;;ஆனால் இவர்கள் ஜெயிலுக்கு போனாலும் உதைபட்டாலும் பின்னர் 'தியாகி ' பட்டத்துடன் வெளியே வருவது இன்னும் கொடுமையாக இருக்கிறது;;கல்வியாளர்க்கு மதிப்பு குறையும் நிகழ்வுகள் இன்னும் கொடுமை துணை வேந்தரை உதைக்கும் எம்,எல். ஏ. என பட்டியல் நீளுகிறது ;;ஆமாம் !உண்மையிலேயே கடவுள் இருக்கிறாரா ?...
Kumar - Chennai,இந்தியா
2010-10-05 05:14:05 IST
This proves rowdies are ruling us. The punishment should be severe, so that no one will repeat this kind of activities. In TN most councellers are like this only. What our CM is going to do now?...
Tamilan - Madarasapatanam,இந்தியா
2010-10-05 05:00:32 IST
கழக ஆட்சியின் சாதனை பட்டியல் இது. மேலும் பல சாதனை புரிந்து நல் ஆட்சி தருக .... மீண்டும் இந்த மக்கள் காசு வாங்கி கழக ஆட்சி மலர வாழ்த்துக்கள்...
ssr - chennai,இந்தியா
2010-10-05 04:47:59 IST
அரசியல் வாதிகளின் வாரிசுகள் வளர்க்கப்படும் முறை அவர்களே இந்த நாட்டிற்கு சொந்தக்காரர்கள் போலவும் தங்களைத் தட்டிக் கேட்க யாருக்கும் உரிமை இலையென்பது போலவும் உருவாகிவிட்டதன் விளைவே....
பப்ளிக் - Bangalore,இந்தியா
2010-10-05 04:26:53 IST
அவர்கள் செய்தது தவறு தான்.. மன்னிக்க முடியாத குற்றம்.. போலீசில் கம்ப்ளைன்ட் கொடுத்து நடவடிக்க எடுக்க செய்து இருக்கலாம்!! அதற்காக லட்சக்கணக்கான மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்க செய்தது எந்த வகையில் நியாயம்?...
suresh - லண்டன்,யுனைடெட் கிங்டம்
2010-10-05 04:25:06 IST
What abt the bus damages and bus driver/conducters medical expenses and pain. Who will bear them? Please recover these charges from his councillor father. This is untolerable and needs serious punishments so that we can avoid these kind of incidents in future,...
C Suresh - Charlotte,யூ.எஸ்.ஏ
2010-10-05 04:16:30 IST
கருணாநிதி ஆட்சியில் ரௌடிதனம் வளரும் என்பது எல்லாருக்கும் தெரிந்ததே. ஆனால் அது சற்றும் குறையவில்லை என்பதற்கு இது எடுத்து காட்டு. இதற்காகவது ஜெயலலிதா ஆட்சி தமிழ் நாட்டுக்கு தேவை....
JK BAVA - ஆக்லாந்து,நியூ சிலாந்து
2010-10-05 04:00:54 IST
தமிழ் படங்களில் தான் இப்படி நடக்கும் என்று நினைத்தோம். நிஜ வாழ்க்கையிலும் இது போன்ற அடாவடி தனங்கள் எப்படி ஒரு மனித சமுகத்தில் நடக்கலாம்?...
c.murugesan - virudhunagar,இந்தியா
2010-10-05 04:00:47 IST
Oru DMK councilor mahane ivvalo arajagam panrane, appo avanga appan evvalo pannirupan indha 5 varusathila. avanga appanuku thalaivan karunanidhi yoda kudumbangal evvalo arajagam panniruppaan. makkale ippovadhu konjam mulichukonga. Iniyavadhu indha kolai kara,kollai kara DMK kumbaluku vote podathings. pottingana unga uyirukum oru naal emana vandhu nippanunga...
2010-10-05 03:31:20 IST
இதற்கு மஞ்சள்துண்டு இன்னும் அறிக்கை விடவில்லையே??????????ஓஒ இன்னும் எழுதுகிறார்போல்...
ilango - chennai,இந்தியா
2010-10-05 03:28:06 IST
எல்லாம் இறைவனுக்கே வெளிச்சம்....
சந்திரன் - தமிழ்நாடு,இந்தியா
2010-10-05 03:25:07 IST
ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களின் கோபம் புரிந்துகொள்ளக்கூடியதே...அதே சமயம் ஒரு வருத்தம்...சில மாதங்களுக்கு முன் இதே போல அரசு பஸ் செக்கிங் இன்ஸ்பெக்டர் ஒருவர் செகரட்டரியேட்டில் உயிருக்கு ஆபத்தான வகையில் கண்மூடித்தனமாக ஆளும் கட்சி என்று அறியப்பட்ட நபர்களால் தாக்கப்பட்ட போது சக போக்குவரத்து ஊழியர் என்ற வகையில் யாரும் சிறு போராட்டம் கூட நடத்த முன்வரவில்லை....
ர.ஸ்ரீனிவாசன் - CHENNAI,இந்தியா
2010-10-05 03:15:47 IST
60 லட்சம் பேர் வசிக்கும் சென்னை மாநகரில் சட்டம் ஒழுங்கு உள்ளதா? சமீப காலங்களில் நிகழும் கொலை கொள்ளை இவற்றை பார்க்கும் போது காவல் துறையின் செயல்பாடுகள் கேள்விக்குறி ஆகி உள்ளது. இதில் இப்படி ரௌடிசம் வேறு ....
Appan - Londonuk,யுனைடெட் கிங்டம்
2010-10-05 03:05:02 IST
இந்த நிகழ்ச்சி வளர்ந்து வரும் அரசியல்வாதிகளின் அடாவடித்தனத்தின் ஒரு அங்கம், முகவின் கடைசி கால அரசியல் இப்படி வன்முறை அடாவடித்தனத்தால் தமிழ் நாடும் அவரும் அழிந்துவிடுவார்கள். முகவின் குடும்ப அராஜகம் சரித்திரத்தில் யாரும் பார்க்காத அளவில் நடந்து கொண்டிருக்கிரது.முக எந்த தார்மீகம், நியாம் இல்லாமல் குடும்ப நபர்கள் எல்லோருக்கும் பதவிகொடுத்து அழகு பார்கிரார்.இது எதனால் இவர் செய்ய முடிகிரது என்றல் திமுகவில் எல்லோரையும் கொள்ளை அடிக்க விட்டார். அதனால் தலைவர் என்ன செய்தாலும் கவலைப்படாமல் தனக்கு என்ன கிடைக்கிறது என்று கிடைக்கும்வரை சுருட்டுகிரார்கள். காங்கிரஸும் இதற்கு துணை போகுகிரார்கள். காந்தி ஒரு பைசா தவறுக்கு உண்ணாவிரதம் இருந்தாராம். இதே காங்கிரஸ் இப்போது 70,000 கோடியை காமன்வெல்த் விளையாட்டில் ஏப்பம் விட்டு மலை முழுங்கி ஆகிவிட்டார்கள். நாடு எங்கே போகிரது ?....
முஹம்மது - Riyadh,இந்தியா
2010-10-05 03:04:01 IST
இது போலே பல கவுன்சிலர்கள் இருக்கிறார்கள், அதே பகுதியில் தி.மு.க. கவுன்சிலர் ஆண்ட்ரூஸ் என்பவர் இருக்கிறார். அவர் எங்காவது தகராறில் ஈடு பட்டால் உடனே திருமங்கலம் இன்ஸ்பெக்ட்டர் அவருக்கு ஆதரவாக ஆஜராகிவிடுவார், தினமும் குடித்து விட்டு தள்ளாடும் அவரை ராஜ மரியாதையோடு போலிஸ் ஜீப்பில் வீடு வரை வந்து விட்டு செல்லும் அளவிற்கு செல்வாக்கு மிக்கவர்.இப்போதெல்லாம் ரவுடியாக இருந்தால் போதும் மக்கள் பிரதிநிதியாக ஆகிவிடலாம்.நம் அரசும் சட்டத்தை மதிப்பவர்களை விட மிதிப்பவர்களுக்கு தான் ஆதரவாக இருக்கும்.ஒழுங்காக வாங்கிய கடனை கட்டுபவர்களுக்கு ஒன்றும் கிடையாது, கட்டாதவர்களுக்கு மானியம், தள்ளுபடி போன்ற சலுகைகள் தருவார்கள். முறைப்படி அனுமதி வாங்கி வீடு கட்ட முயன்றால் ஆயிரம் முறை அலைய வேண்டும் ( லஞ்சம் கொடுத்ததும் ). வீட்டு வசதி வாரியத்தால் குடியிருப்பு பகுதிக்கு மட்டும் என்று ஒதுக்கிய அண்ணாநகர், ஆறாவது அவேன்விவ் முழுவதும் இப்போது வணிக வளாக பகுதியாக உள்ளது, அதுவும் ரிலையன்ஸ் சூப்பர் மார்க்கெட் அமைந்துள்ளது, இந்த விதி மீறல்கள் எல்லாம் அதிகாரிகளுக்கு தெரியாதா? இல்லை அரசுக்குத்தான் தெரியாதா? தவறுதலாக இரண்டாம் வகுப்பு டிக்கெட்டில் முதலாம் வகுப்பில் ( சென்னை மெட்ரோ ரயிலில் ) பயணம் செய்த ஒரு அப்பாவிக்கு அபராதம் விதிக்கு அரசு, ஆயிரம் பேர், பீகாரிலிருந்து சென்னை வந்தவர்களிடம் என்ன அபராதம் வசூலித்து? என்ன தண்டனை கொடுத்தது? சட்டத்தின் பிடி எளியவர்களுக்க் மட்டும், அரசு வலியவர்களுக்கு மட்டும் தான்.வல்லவன் வாழ்வான் ( பெரும் முதலாளிகள், ரவுடிகள், பொறுக்கிகள், அரசியல்வாதிகள் , அரசியல் செல்வாக்கு மிக்க அதிகாரிகள் இவர்கள் தான் வல்லவர்கள் )...
ஸ்ரீராம் - அட்லாண்டா,யூ.எஸ்.ஏ
2010-10-05 02:46:50 IST
வெறும் நான்கு தெருவிற்கு கவுன்சிலர்-ஆக உள்ளவரின் மகன் இப்படி ஒரு வெறியாட்டத்தை நடத்தி இருக்கிறான் என்றால், தி மு கவின் M.L.A., M.P., அமைச்சர்களும் அவர்களது தொண்டரடி-பொடியர்ரகளும் வெறியாட்டம் நடத்தினால்??? ஐய்யகோ!!! 2011 தேர்தலை இப்போதே நடத்தி இவர்களை வீட்டுக்கு அனுப்பவேண்டும். போதுமடா சாமி!!! நீங்களும் நீங்கள் ஆண்ட லட்சணமும்!!!...
பாலசுப்ரமணி - சென்னை,இந்தியா
2010-10-05 02:45:01 IST
விளங்கிடும்.பாவம் ஜனங்க. மறுபடியும் தி.மு.க வுக்கே ஒட்டு போடுவாங்க.பாரு இன்னும் ஒரு வாரத்துல இந்த சம்பவமே மறந்துடும் ஜனங்களுக்கு. கைது செய்யப்பட்டவனும் வெளியே வந்துடுவான்.இதெல்லாம் அரசியல்ல சகஜமப்ப....
நந்தன் - சென்னை,இந்தியா
2010-10-05 02:29:37 IST
If it is true that Senthil Suresh has beaten the driver of the bus, Senthil should be given severe punishment which will send a strict warning to others. Will our CM Karunanidhi do it?...
இந்தியன் - லண்டன்,யுனைடெட் கிங்டம்
2010-10-05 02:03:51 IST
I will try and point out the differences in handling smilar situation in western countries. 1. Should this have happened in UK police would have been in the seen in 3-4 min with a van full of police to have things under control. 2. The press will be after this Guy until he gets punished legally . 3. His dad would disown him publically to save his political career and to have some sort of face value in public. Our Problem 1- Police department sleeps 2- Press Biased 3- Politicians dont care about public ...let alone face value....
கே.கைப்புள்ள - nj,இந்தியா
2010-10-05 02:00:44 IST
ஹ்ம்ம், அந்த காவாலி பயலோட நல்ல நேரம். ஒரு கல்வீச்சு கலவரம்னா அலறியடித்து ஓட்டம் பிடிக்கும் பொதுமக்கள இருந்ததினால் தப்பிச்சான். இதே அலறியடித்து ஓடிய மக்கள் ஒரு நூறு பேரு கூட்டமா சேர்ந்து அவன தர்ம அடி போட்டு கூட்டத்துக்கு நடுவில எவனாச்சும் அவன பஸ் சக்கரத்துல வெச்சு எலுமிச்சங்காய் நசுக்கிற மாறி நசுக்கி போட்டு இருந்தா என்ன ஆகும்? இருட்டில எவனுக்கு என்ன தெரிய போவுது? இதே ஒரு பட்டிக்காடா இருந்தா இப்படித்தான் நடந்து இருக்கும். இந்நேரம் அந்த காவாலி பய படத்துக்கு மாலய போட்டு இருப்பாங்க. ஏதோ சென்னை ல நடந்தாங்காட்டி தப்பிச்சுக்கிட்டான்....
சார்லஸ் - ஏற்மொன்ட்,பிரான்ஸ்
2010-10-05 01:30:06 IST
இது தான் கழக ஆட்சி...
விஜய் - சென்னை,இந்தியா
2010-10-05 01:15:19 IST
இந்த அராஜக போக்கை வன்மையாக கண்டிக்கிறேன். என்ன கொடுமை என்றால், ஒரு 10 பேர் கொண்ட கும்பலை சமாளிக்க யாரும் இல்லையே என்பது தான். சரி அவர்களை நம் காவல் துறையாவது எதாவது செய்யுமா என்றால். அது கலைஞரின் கைப்பாவையல்லவா .... எப்படி நடக்கும்.. அரசு ஊழியர்க்கும் அரசியல் வாதிக்கும் நடந்த சண்டையில் கஷ்டப்பட்டதும் நஷ்ட்டபட்டதும் நாம் தான். ஆகையால் தமிழ் நாடு வாழ பொது ஜனங்களே ..... காசு வாங்கி வோட்டு போட்டதின் விளைவை அனுபவியுங்கள் கலைஞரின் கைப்பாவைகலே, நாலு பேரையும் உங்களால் முடிந்தால் அவர்களுக்கு மரணதண்டனை வாங்கித்தாருங்கள் பார்ப்போம். அவர்கள் செய்த குற்றம் 1 பொது சொத்துகளுக்கு பங்கம் விளைவிப்பது 2 அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுப்பது 3 அரசு ஊழியர்கள் மற்றும் பொது மக்களை கொலை வெறி கொண்டு தாக்குவது. 4 கும்பலாக குடித்துவிட்டு அரசு ஊழியரை பட்டபகலில் பொது மக்கள் முன்னிலையில் கொலை செய்தது. 5 ஆளும் அரசியல் கட்சியை சேர்ந்தவர் என்பதால் மரணதண்டனை சால பொருந்தும் இந்த சம்பவத்திற்கு பிறகாவது ஆளும் அரசியல் பிரமுகர்கள் மற்றும் தொண்டர்கள் ரகளையில் ஈடுபடுவதை நிறுத்திக்கொள்ளவேண்டும் இல்லையேல் அரசை கலைத்து விடவேண்டும் காரணம்: சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது (356 ) செய்வார்களா நம் முதுகெலும்பு இல்லாதவர்கள் ????.......
ரொம்ப முக்கியம் - பரலோகம்,இந்தியா
2010-10-05 01:13:22 IST
கலைஞர் ஆட்சிக்கு வக்காலத்து வாங்கும் அன்பர்களை கருத்து சொல்ல அழைக்கிறோம் !!...
தி.மு.க தேண்டேன் - சவுதி,இந்தியா
2010-10-05 00:59:43 IST
தி.மு.க. ஆட்சியில் இப்படித்தான் நடக்கும். இதல்லாம் சகஜமப்பா...
சங்கர் துபாய் - துபாய்,இந்தியா
2010-10-05 00:56:48 IST
தி.மு.க., கும்பல், பஸ் கண்ணாடியை அடித்து நொறுக்கியது. அந்த வழியாக வந்த ஐந்து பஸ்களை அடித்து நொறுக்கி, கும்பல் வெறியாட்டம் நடத்தியது தி.மு.க.,...
yila - Nellai,இந்தியா
2010-10-05 00:47:41 IST
சபாஷ்! சரியான நடவடிக்கை! இப்படிப்பட்ட விஷயங்களில் மக்கள் போராட்டம் நடத்தும் முன்பே அரசு விழித்துக்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டாமா? இப்படிப்பட்ட ரவுடிகள் எந்த கட்சியாக இருந்தாலும் ரவுடிகள் ரவுடிகளே. சாதாரண ஒண்ணேமுக்கால் துட்டு கவுன்சிலர் மகனே இந்த வரத்து வந்தால்.... எங்கே செல்கிறது ஜனநாயகமும் திமுக ஆட்சியும்? முதல்வரும் துணை முதல்வரும் விழித்துக்கொள்வது நல்லது. தனது கட்சி ரவுடிகளை அடக்குவதற்கு.......
குஞ்சுமணி - சென்னை,இந்தியா
2010-10-05 00:47:07 IST
இந்த டிரைவர் பசங்க பண்றது ரொம்ப மோசம், அடிச்சா அடி வாங்கிக்கொள்வதுதானே ?எதற்கு போராட்டம் எல்லாம் பண்ணனும், இந்த டிரைவர் பசங்க எத்தின பேரை ஏற்றி கொல்லுரானுங்க ? பொது மக்கள் பொறுமையா தானே இருக்காங்க ? புரட்சி தலைவி டாக்டர் ஜே மாதிரி ஒரே கையெழுத்தில் அத்தனை டிரைவர்களையும் வீட்டுக்கு அனுப்பி விட்டு , அமெரிக்காவில் இருந்து வெள்ளைக்காரன்களை கொண்டு வந்து டிரைவரா போடணும்...
சரவணா - சென்னை,இந்தியா
2010-10-05 00:45:25 IST
டாஸ்மாக் எனும் ஒரு எதிரியை ஒழித்தால் போதும், அனைத்தும் நன்றே...
சக்கையடி குமரன் - தென்காசி,இந்தியா
2010-10-05 00:37:54 IST
Councillor son is no big to anyone. Will the government dismiss the councillor and ask him to pay the damages for the public property. If Kalaignar really wants to serve the people of this state, he has to order to take over the Scorpio car to cover the damages for the Corporation buses. Chennai has become "Rowdy Land". DMK is a rowdy party . I am going to read dinamalar to follow what happened to the damaged buses and the arrested culprits. Who gave power to these rascals and bloody idiots to damage the buses. My heart is in deep pain because my tax money is being wasted by dogs and pigs like Suresh, who thinks Chennai is their father's property. I hope his father will read my comments and feel ashamed to have given birth to such a rascale and bloody idiot. Thank You Dinamalar !...
ரமேஷ் - chennai,இந்தியா
2010-10-05 00:37:28 IST
திமுக ரௌடிசம், ரேசன் கடத்தல், அராஜக ஆட்சியின் செம்புகள் சிலவும் இந்த தாக்குதலில் அடிபட்டு உள்ளார்கள் ... இந்த முறை கமெண்ட் எழுதும் செம்புகளா இந்த அடி உங்கள் மேலும் விழும் நேரம் தூரமில்லை......
sham - dubai,இந்தியா
2010-10-05 00:35:29 IST
that .....er should be arrest after that only political people know abt people power,when tamil nadu will get freedom from political? god only knows,...
கலைஞர் பிரியன் - டென்வர்,யூ.எஸ்.ஏ
2010-10-05 00:25:41 IST
ஏன் தான் இந்த அரசியலை சேர்ந்த கழக கண்மணிகள் இப்படி நடந்து கொள்கின்றனர் என்று புரிந்து கொள்ள முடியவில்லை...
மு அமானுல்லா - துபாய்,ஐக்கிய அரபு நாடுகள்
2010-10-05 00:18:44 IST
எப்படியோ,,,, இது போன்ற சம்பவங்களால் பாதிக்கப்படுவது என்னவோ அப்பாவி பொது ஜனம் தான். நாட்டில் எத்தணையோ தனி மனிதர்கள் வியாபாரிகள் அரசியல்வாதிகளால் மிரட்டப்படுகிறார்கள், துன்புறுத்தப்படுகிறார்கள் மற்றும் தாக்கப்படுகிறார்கள். இவர்களில் பலர் பயந்து வெளியே சொல்வது இல்லை. சிலர் ஒப்புக்கு ஒரு புகார் கொடுத்ததோடு இருந்து விடுகிறார்கள். தாங்கள் தாக்கப்பட்டால் போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கத்தின் துணையோடு இதனை சட்டப்பூர்வமாக தான் அணுக வேண்டுமே தவிர பொது மக்களுக்கு இடையூரு செய்யும் வண்ணம் வேலை நிறுத்தங்களில் ஈடுபடக் கூடாது....
கே.ராஜசேகரன் - chennai,இந்தியா
2010-10-05 00:18:32 IST
தி மு க கவுன்சிலர்களின் அட்டகாசத்தை கட்டுபடுத்த கருணாநிதியால் கூட முடியாது என்பதுதான் உண்மை.அவர்கள் பல(நூறு ) கோடிகளுக்கு அதிபதிகள். ஒவ்வொருவரும் தனி ராஜாங்கம் நடத்தி வருகிறார்கள்....
jayaram sekar - பெங்களூர்,இந்தியா
2010-10-05 00:14:54 IST
அடடா ஆளும் கட்சி கவுன்சிலர் மகன் ஐ சொல்லறதா இல்லை ஜனங்களுக்கு வேட்டு வைத்த டிரைவர் கண்டக்டர் களை சொல்லறதா அல்லது ஓட்டு போட்ட நம்மை சொல்லறதா? டிரைவர் கண்டக்டர் strike பண்ணலைன்னா எந்த நடவடிக்கையும் இருக்காது ... சரி அடுத்த தேர்தலில் நல்லவங்களுக்கு ஓட்டு போடுவோம் வேறே என்ன பண்ண...
தமிழ் - சிங்கப்பூர்,சிங்கப்பூர்
2010-10-05 00:13:12 IST
இந்த மாதிரி நபர்கள நாய அடிப்பதுபோல அடிச்சி உள்ளார தள்ளனும். அப்பன் கவுன்சிலர்னா இவனுக்கு வழி தரணுமோ...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக