செவ்வாய், 5 அக்டோபர், 2010

நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் பிரதமராக ருத்ரகுமரன் தேர்வு


கொழும்பு, அக். 4: நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் முதல் பிரதமராக விஸ்வநாதன் ருத்ரகுமரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.  விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் முன்னாள் சட்ட ஆலோசகரான அவர், அமெரிக்காவில் வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார்.  கனடாவைச் சேர்ந்த பொன் பாலராஜன் நாடாளுமன்ற அவைத் தலைவராகவும், சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த சுகன்யா புத்திரசிகாமணி துணைத் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.  தமிழ் ஈழ அரசின் நாடாளுமன்றம் இரு அவைகளைக் கொண்டதாக இருக்கும்.  இது தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட நாடாளுமன்றத்தையும், செனட் எனப்படும் நியமன உறுப்பினர்களைக் கொண்ட ஆலோசனை அவையையும் உடையதாக இருக்கும்.  நாடு கடந்த தமிழ் ஈழ அரசில் பிரதமருக்கு உறுதுணையாகப் பணியாற்ற 3 துணை பிரதமர்களையும், 7 பேர் கொண்ட அமைச்சரவையும் உருவாக்க தீர்மானிக்கப்பட்டது.  நியூயார்க்கில் சில நாள்களுக்கு முன்பு நடைபெற்ற தொடக்க விழாவில், அமெரிக்காவின் முன்னாள் அட்டர்னி ஜெனரல் ரம்சே சிறப்புரையாற்றினார்.  மலேசியாவின் பெனாங் மாநில துணை முதல்வர் கிளார்க், கொலம்பியா பல்கலைக்கழக பேராசியர்கள் ராமசாமி, டேவிட் பிலிப்ஸ் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றனர்.  எதிர்ப்பு: விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் மறைவிற்குப் பின்னர், நாடு கடந்த தமிழ் ஈழ அரசு என்று புதிய அமைப்பை, குமரன் பத்மநாதன், ருத்ரகுமரன், நெடியவன் ஆகியோர் தொடங்கினர்.  இலங்கை பாதுகாப்பு படையினர், 2009 ஆகஸ்டில் கோலாலம்பூரில் குமரன் பத்மநாதனை கைது செய்த பின்னர் இந்த அமைப்பு முடங்கியது.  ஈழத் தமிழர்களுக்கு தனிநாடு கோரும் இந்த அமைப்புக்கு புத்துயிர் அளிக்கும் வகையில் அமெரிக்காவில் அண்மையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் முதல் பிரதமராக ருத்ரகுமரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.  இதற்கு, விடுதலைப் புலிகளின் நார்வே பிரிவைச் சேர்ந்த நெடியவன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தமிழ்நெட் இணையதள நிர்வாகியான அவர், பிரதமர் தேர்தல் ஒருதரப்புக்குச் சாதகமாக நடைபெற்றிருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
கருத்துக்கள்

தமிழ் ஈழ அரசின் பொறுப்பாளர்களுக்குத் தினமணி வாசகர்கள் சார்பில் வாழ்த்துகள். விரைவில் தமிழ் ஈழத்தில் தேசியக் குடியரசு அமைய வழிவகுக்கட்டும்! தமிழ் ஈழம் மலர்க! தமிழ் ஈழ உலக நட்புறவு வளர்க! வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/5/2010 5:35:00 AM
தனி தமிழீழம் ஒரு பெரிய வல்லரசாக மாறி அமெரிக்காவுக்கே பெரிய போட்டியாக வளரக்கூடிய சக்தி படைத்த பொடியன்கள் கொண்ட அமைச்சகம்தான் இந்த நாடு கடந்த அமைப்பு .இந்தியா ஒரு சுண்டைக்காய் .உலகத்திலேயே பெரிய ராணுவம் கொண்டது எங்கள் தலைவனின் படை.
By veeran
10/5/2010 3:47:00 AM
விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு, 17 மாதங்கள் ஆகிவிட்ட நிலையிலும், வெளிநாடுகளில் அந்த அமைப்பின், "நெட்ஒர்க்' தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது' என, இலங்கை பயங்கரவாத எதிர்ப்பு நிபுணர் தெரிவித்துள்ளார். இலங்கையில் நடந்த இறுதிக் கட்ட போரின் போது ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்காக, அரசு சார்பில் மறு ஆய்வு ஆணையம் அமைக்கப்பட்டது. இலங்கையின் பிரபல பயங்கரவாத எதிர்ப்பு நிபுணரும், பேராசிரியருமான ரோகன் குணரத்னே, இந்த ஆணையத்தின் முன், ஆஜராகி விளக்கம் அளித்தார்.
By vaiko
10/5/2010 3:39:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக