வியாழன், 20 ஆகஸ்ட், 2009

தடைசெய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவு
விடுதலைச் சிறுத்தைகள் மீது நடவடிக்கை எடுக்க
காங்கிரஸ் கோரிக்கைவேலூர், ஆக.19: தடைசெய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக பேனர், போஸ்டர்கள் ஒட்டிய விடுதலை சிறுத்தைகள் அமைப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று காங்கிரஸ் மாநில பொதுச் செயலரும் எம்.எல்.ஏ.வுமான சி. ஞானசேகரன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் புதன்கிழமை வேலூரில் செய்தியாளர்களிடம் கூறியது: சென்னையில் திருமாவளவனின் பிறந்தநாளை "எழும் ஈழம்' என்று ஆகஸ்ட் 17-ல் கொண்டாடினார்கள். அதற்காக வைக்கப்பட்ட டிஜிட்டல் பேனர்கள், போஸ்டர்கள், விளம்பரங்கள் அனைத்திலும், தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் படத்தையும், லச்சினையையும் பயன்படுத்தியுள்ளனர். அவற்றை சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளார். அதே நேரத்தில் தடைசெய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக செயல்படுவது குற்றச்செயல் என்று தலைமைச் செயலர் பத்திரிகை விளம்பரங்கள் மூலம் தெரிவித்துள்ளார். ஆனால், இதுவரை இத் தவறை செய்தவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழக முதல்வர் இதில் கவனம் செலுத்தி உடனுக்குடன் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் ஞானசேகரன்.
கருத்துக்கள்

விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்பொழுதுதான் காங்.கூட்டணி என்னும் புதைகுழியில் இருந்து திருமா வெளியேறுவார். கலைஞரால் தைக்கப்பட்ட அவரது வாய் திறக்கும்; கைக்கட்டு அவிழும். தமிழ்நல அமைப்புகள் சிதறும் நிலை நீங்கும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
8/20/2009 3:14:00 AM

ஞானசேகரன்... உங்களோட பிரச்னை என்ன? பிரபாகரன் போட்டோவுக்கு கூட பயப்படுறீங்க? அவர் ரொம்ப நல்லவருங்க... சின்ன பசங்களை எல்லாம் ஒன்னும் பண்ண மாட்டாரு... பயப்படாதீங்க....

By poochaandi
8/20/2009 2:51:00 AM

ஏம்பா சிறுத்தைகளா... ரஜினி, விஜய், அஜித் போல புரட்சியாளர்களோட படத்த போட்டு போஸ்டர் அடிச்சி ஒட்டுரத விட்டுட்டு இப்படி ஏம்பா பண்றீங்க... பாத்திங்கல்ல.... "தேசிய" கட்சி தலைவர் கோவிச்சிகிட்டாரு...இனிமே உங்கள களி திங்க வைக்காம விடமாட்டாரு...

By Cinemaa Kaaran
8/20/2009 2:50:00 AM

மத்தியில் உங்கள் ஆட்சி தானே நடைபெறுகிறது.. பேசுவதே குற்றம் என்று சட்டம் இயற்றுங்கள் ஞானசேகரன்... எல்லாம் சரி ஆகிவிடும்.... ஆமாம்.... நீங்க எந்த நாட்டு சட்டம் பத்தி பேசிகிட்டு இருக்கீங்க... இது தமிழ்நாடு... இலங்கை சட்டம் எல்லாம் இங்கு செல்லாது...

By Thamizh Maravan
8/20/2009 2:31:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக