வியாழன், 20 ஆகஸ்ட், 2009

உலகத் தமிழர் பிரகடனம் நிகழ்ச்சி திட்டமிட்டபடி நடக்கும்: பழ.நெடுமாறன்



சென்னை, ஆக. 19: "உலகத் தமிழர் பிரகடனம்' வெளியிடும் நிகழ்ச்சி திட்டமிட்டபடி நடைபெறும் என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: "ஈழத்தமிழர் வாழ்வுரிமைக்கான "உலகத் தமிழர் பிரகடனம்' வெளியிடும் நிகழ்ச்சி ஆகஸ்ட் 20-ம் தேதி மாலை 6 மணிக்கு சென்னை அமைந்தகரை புல்லா அவென்யூ சாலையில் நடைபெறும். இக்கூட்டத்திற்கு பழ.நெடுமாறன் தலைமை தாங்குகிறார். ராமதாஸ், வைகோ, தா.பாண்டியன், த.வெள்ளையன் உள்ளிட்டோர் உரையாற்றுகிறார்கள்.ஈழத்தமிழர்களுக்கு வழிகாட்டும்...: தமிழர் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் முதன்முறையாக உலகத் தமிழர் பிரகடனம் வெளியிடப்பட இருக்கிறது. உலகறிய நாம் செய்யவிருக்கிற இந்தப் பிரகடனம் ஈழத் தமிழர்களுக்கும், உலகத் தமிழர்களுக்கும் வழிகாட்டும் பிரகடனமாகும். எனவே, இக்கூட்டத்தில் கட்சி, சாதி, மத வேறுபாடில்லாமல் அனைத்து தமிழர்களும் திரளாகக் கலந்து கொள்ள வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்கள்

'உலகத்தமிழர் சாற்றுரை' நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறட்டும்! தமிழீழம் வெல்லவும் உலகத் தமிழர் வாழ்வுரிமை பெறவும் வழிகாட்டட்டும்! வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
8/20/2009 3:03:00 AM

To EVERYONE IN TAMILNADU, Thank you very much!!!!!!!!!

By Vani Kumar, London, UK
8/20/2009 2:38:00 AM

Please continue to work for the entrapped Eezhamite tamils.

By P.Padmanaabhan
8/20/2009 1:39:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக