இலங்கை விவகாரத்தில் பான் கீ மூன் தமது கடமையை சரிவரச் செய்யவில்லை |
பிரசுரித்த திகதி : 19 Aug 2009 |
இலங்கை விவகாரத்தில் ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் தமது கடமையை சரியான முறையில் மேற்கொள்ளவில்லை என ஐக்கிய நாடுகளுக்கான நோர்வே பிரதிநிதி முனா ஜூல் (Mona Juul) தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் தலைமைப் பதவியை வகித்து வரும் பான் கீ மூன் தனது கடமைகளை மேற்கொள்ளவில்லை எனவும், அதிகாரத்தையும் சரியான முறையில் பயன்படுத்தவில்லை எனவும் குற்றம் சுமத்தப்படுகிறது.பான் கீ மூன் அர்ப்பணிப்புடன் செயற்படுவதில்லை எனவும், சிறந்த தலைமைத்துவப் பண்புகளும் அவரிடம் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
உலகப் பிரச்சினைகளுக்கு ஐக்கிய நாடுகள் அமைப்பு காத்திரமான தீர்வுத் திட்டங்களை முன்வைக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார். |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக