ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2009

கொழும்பு, ஆக. 16-

இலங்கை வன்னி பகுதியில் உள்ள மடு கிறிஸ்தவ தேவாலயம் புகழ் பெற்றதாகும். இங்கு ஒவ்வொரு ஆண்டும் தேர்திருவிழா நடைபெறும். அப்போது 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம்.

நேற்று இந்த கோவில் திருவிழா நடந்தது. இதில் 1 லட்சம் பேர் கலந்து கொண்டனர். இந்த பகுதியில் வசித்ததமிழர்கள் அனைவரும் தற்போது அகதி முகாம்களில் அடைக்கப்பட்டு உள்ளனர். எனவே திருவிழாவுக்கு பக்தர்கள் வரவில்லை.

இந்த விழாவில் யாழ்ப்பாணம் பேராயர் தாமஸ் சவுந்தரநாயகம் கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது:-

தமிழர்களை அகதிகள் என்ற பெயரில் கைதிகள் போல அடைத்து வைத்து உள்ளனர். அவர்களால் கோவில் திருவிழாவுக்கு வர முடியவில்லை.

அனைத்து தமிழர்களையும் உடனே விடுவிக்க வேண்டும். எங்கள் சகோதரர்களும், சகோதரிகளும் முகாமுக்குள் இருக்கின்ற நிலையில் இங்குவேதனையோடு விழா கொண்டாடி கொண்டிருக்கிறோம்.

இந்த விழாவுக்கு அதிபர் ராஜபக்சே வருவதாக இருந்தது, பாதுகாப்பு காரணமாக அவர் வருகை ரத்து செய்யப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக