இந்த நிலையில் திடீரென இம்மாதம் 4 ஆம் தேதியன்று வடகொரியாவுக்குப் போனார் அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன். 2000 ஆண்டில் அவரது அமைச்சரவையில் வெளியுறவு அமைச்சராக இருந்த மெடலின் அல்பிரைட் வடகொரியா போனதுதான் கடைசி. அதற்குப் பிறகு அந்நாட்டுக்குச் சென்ற அமெரிக்க வி.வி.ஐ.பி கிளிண்டன்தான். இரு நாடுகளுக்கும் இடையே தூதரக உறவுகள் கிடையாது. ஐ.நா.வின் தடைகளை மீறி வடகொரியா அணுசோதனை நடத்தியதன் விளைவாக இரு நாடுகளுக்கும் இடையே சுமுகமான உறவு இல்லை.
இந்தப் பின்னணியில்தான் பில் கிளிண்டன் அங்கே போனார். வடகொரியா அதிபர் கிம் ஜாஸ் -2 கிளிண்டனுக்கு விருந்து கொடுத்தார். அதிபர் ஒபாமாவின் வாழ்த்துகளை கிம்முக்குத் தெரிவித்தார் பில்.
சந்தடியோடு சந்தடியாக "அந்த இரண்டு பெண் செய்தியாளர்களையும் விடுதலை செய்யுங்கள்' என்று வடகொரியாவை நாசுக்காகக் கேட்டுக் கொண்டார். இதில் ஒரு விஷயம். "அமெரிக்காவுடன் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்த விருப்பம்' என்று வடகொரியா அறிவித்த ஒரு வாரத்தில் கிளிண்டன் அங்கே போயிருக்கிறார். இந்தப் பேச்சுவார்த்தை பெண் செய்தியாளர்கள் விடுதலை பற்றியது அல்ல. இரு நாடுகளுக்கிடையேயான நல்லுறவு பற்றியது.இந்தப் பின்னணியில்தான் பில் கிளிண்டன் அங்கே போனார். வடகொரியா அதிபர் கிம் ஜாஸ் -2 கிளிண்டனுக்கு விருந்து கொடுத்தார். அதிபர் ஒபாமாவின் வாழ்த்துகளை கிம்முக்குத் தெரிவித்தார் பில்.
இன்னொரு விஷயம். கிளிண்டன் இப்போது அதிபர் அல்ல. எனவே, அவரது விஷயம் அதிகாரபூர்வமானதாக இருக்க முடியாது என்ற கருத்தும் எழுந்திருக்கிறது.
யூனா லீ, லவ்ரா லிங் ஆகியோர் விடுதலை? கேள்விக்குறியாகவே இருக்குமோ என்ற அச்சம் போய் ஆச்சரியக்குறியாகிவிட்டது. இரண்டு பேரை வடகொரியா விடுதலை செய்து விட்டது. பில் கிளிண்டன் தான் வந்த விமானத்திலேயே அவர்களையும் அழைத்துப் போய்விட்டார்.ரஷ்யப் பிரதமர் விளாடிமிர் புதினுக்கு அவ்வப்போது ஏதேனும் சாகசங்கள் செய்துகொண்டே இருக்க வேண்டும். ஜூடோ தற்காப்புக் கலையில் "பிளாக் பெல்ட்' வாங்கியிருப்பவர் புதின். சமீபத்தில் கிழக்கு ரஷ்யப் பகுதியில் திமிங்கலம் ஒன்றின்மீது ரேடியோ டிரான்ஸ்மிட்டர் ஒன்றை குறிபார்த்துச் சுட்டு பொருத்தி விட்டுத் திரும்பினார். சிக்கலான சாகசம் அது. போர் விமானத்தில் சர்வசாதாரணமாகப் பறக்கக் கூடியவர். சைபீரிய புலி ஒன்றை துணிச்சலாக வேட்டையாடியவர்.
ஆகஸ்டு மாதம் முதல் தேதியன்று இன்னுமொரு சாகசம். இதை வேறு எந்த 56 வயது தலைவரும் செய்திருக்க முடியுமா? என்பது சந்தேகம்.
சைபீரியாவில் பைக்கால் ஏரி என்று ஓர் ஏரி இருக்கிறது. உலகிலேயே மிக ஆழமான ஏரி என்ற பெருமை இதற்கு உண்டு.
மிர்-1 என்ற நீர்மூழ்கி மினி கப்பல் ஒன்றில் ஏறி அமர்ந்தார் புதின். "சர்' என்று 1400 மீட்டர் -கிட்டத்தட்ட 4600 அடி ஆழத்திற்கு அந்த ஏரிக்குள் டைவ் அடிப்பதுபோல அந்த மினி நீர்மூழ்கிக் கப்பலில் போனார். இயற்கை எழில் கொட்டிக் கிடந்தது உள்ளே. தாவரத் தொகுப்பு, விலங்குகளின் தொகுப்பு என்று பைக்கால் ஏரி காட்டிய விழுமிய தோற்றப் பொலிவில் தன்னை மறந்தார்.
உலகில் உள்ள சுத்தமான தண்ணீரில் ஐந்தில் ஒரு பங்கு தண்ணீரை தன்னுள் கொண்டிருக்கும் ஏரி என்பது பைக்காலின் இன்னொரு பெருமை.
கிட்டத்தட்ட ஐந்து மணி நேரம் 1400 மீட்டர் ஆழத்தில் இருந்து விட்டு வந்த பின்னர் செய்தியாளர்கள் கேட்டார்கள்: ""என்ன இப்படி சாகசத்துக்கு மேல் சாகசமாகச் செய்து கொண்டு போகிறீர்கள்? அடுத்தது என்ன, விண்வெளிப் பயணம்தானே?'
புதின் சிரித்துக்கொண்டே சொன்னார்: "பூமியில் பார்க்க வேண்டியதே ஏராளமாக இருக்கிறது, சாமி. விண்வெளிக்குப் போக இதற்குள் என்ன அவசரம்?'
இன்றைய தேதியில் உலகத் தலைவர்களில் மிக நன்றாக உடல் நலத்தைப் பேணுபவர் புதின்தான். ரொம்ப "நீட்'டாக டிரஸ் பண்ணும் தலைவரும் அவர்தான்.
"இன் தி பிரஸிடென்ட்'ஸ் சீக்ரெட் சர்வீஸ்' என்று ஒரு புதிய புத்தகம் அமெரிக்காவில் வெளியாகி இருக்கிறது. அமெரிக்காவின் பல்வேறு அதிபர்களுடன் நெருங்கிப் பழகிய, அவர்களுக்குப் பாதுகாப்பு தந்த, தந்து வரும் கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேலான ரகசியப் பாதுகாப்பு அதிகாரிகளைப் பேட்டி கண்டு எழுதப்பட்ட புத்தகம். புத்தகத்தில் வெளியாகியுள்ள சில ரசமான தகவல்கள்.
ஜிம்மி கார்ட்டர் : வெள்ளை மாளிகையில் உள்ள டென்னிஸ் கோர்ட்களில் விளையாட ஊழியர்கள் அதிபரின் அனுமதியைப் பெறவேண்டும் என்று வெளியான செய்தியை மறுத்தவர். தன் பாதுகாப்பு அதிகாரிகளைவிட தன்னால் வேகமாக ஓடி அவர்களை ஓட்டப்பந்தயத்தில் ஜெயிக்க முடியும் என்று சொன்னார்.
ரெனால்டு ரேகன் : ரொம்பவும் கருணை உள்ளம். தங்கள் பணக் கஷ்டம் பற்றி எழுதி தனக்குக் கடிதம் அனுப்புபவர்களுக்கு உதவியாக யாருக்கும் தெரியாமல் தன் தனிப்பட்ட பணத்தை "செக்'காக அனுப்பும் வழக்கம் கொண்டவர்.
லின்டன் ஜான்ஸன் : அடிக்கடி "தண்ணி'. ஒரு தரம் தன் ஓவல் அலுவலகத்தின் ஒரு சோபாவில் தன் செயலாளர்களில் ஒருவருடன் "சில்மிஷம்' செய்து கொண்டிருந்தபோது தன் மனைவியால் கையும் களவுமாகப் பிடிபட்டவர். "மனைவி வருவதை ஏன் எனக்கு முன்கூட்டியே எச்சரிக்கவில்லை' என்று தன் பாதுகாப்பு அதிகாரிகள் மீது எரிந்து விழுந்தார்.
ரிச்சர்டு நிக்ஸன் : இருவரும் இவர் மனைவியும் தனித்தனி அறைகளில்தான் படுத்து உறங்குவார்கள். மனைவி "பேட்' (Pat) குடிப்பழக்கம் கொண்டவர். மார்ட்டினிஸ் மதுவகைகள் அதிகம் பிடிக்கும்
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஓர் ஆராய்ச்சி, "உலகிலேயே நார்வே, ஸ்வீடன் நாடுகளைச் சேர்ந்த ஆண்கள்தான் குடும்ப வாழ்க்கையில் மிகவும் கவர்ச்சிகரமான கணவன்மார்களாகக் கருதப்படுகிறார்கள்' என்று தெரிவிக்கிறது.
இந்தக் கவர்ச்சி உடல் சார்ந்தது அல்ல என்பது முக்கியம். குடும்பத்தில் தன் வாழ்க்கைத் துணைவிக்கு, வீட்டு வேலைகளில் உதவுகின்ற மனப்பக்குவமே இந்தக் கவர்ச்சி. வீட்டு வேலை எனும்போது சமையலில், சாமான் கழுவுவதில், குழந்தை பராமரிப்பில் செய்யும் உதவிகளும் அடங்கும்.
"ஒரு திருமணம் நிலைப்பதும், வெற்றி பெறுவதும் ஆணும் பெண்ணும் சமமாக ஒருவருக்கொருவர் வீட்டு வேலைகளில் உதவிகரமாக இருப்பதைப் பொறுத்து அமைகிறதா' என்பதுதான் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியின் தலைப்பு.
"எகாலிடேரியன் நாடுகள்' (Egalitarian countries) என்று சில நாடுகள் உண்டு. பொதுவாக பெண்களின் வேலைகள் என்று முத்திரை குத்தப்பட்ட வீட்டு வேலைகளை ஆண்கள் செய்தால் அது தப்பில்லை. கெüரவக் குறைச்சல் இல்லை என்ற மனப்பக்குவம் வளர்ந்துள்ள நாடுகள் அவை.
நார்வே, ஸ்வீடன் இந்தப் பட்டியலில் முதலிடம் வகிக்கின்றன.
மொத்தம் பனிரெண்டு நாடுகளிலிருந்து 20-45 வயதுக்குட்பட்ட 13500 ஆண், பெண்களை பேட்டி கண்டு அதன் அடிப்படையில் ஆராய்ச்சியின் முடிவுகளை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் வெளியிட்டிருக்கிறது.
எனவே இனிமேல் நார்வே, ஸ்வீடன் நாட்டு ஆண்களுக்கு உலகளாவிய கல்யாண மார்க்கெட்டில் "டிமாண்ட்' அதிகமானால் வியப்பில்லை.
கவர்ச்சிகரமான கணவர்கள் பட்டியலில் கடைசி இடம் ஆஸ்திரேலிய ஆண்களுக்கு! அவர்களுக்கு வீட்டு வேலைகளைவிட விளையாட்டுப் பந்தயங்களும் பீர் குடிப்பதும் ரொம்பப் பிடிக்கிறதாம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக