வியாழன், 20 ஆகஸ்ட், 2009

களியாட்ட மங்கையுடன் கருணா சுவிஸ்சில் அட்டகாசம்
பிரசுரித்த திகதி : 19 Aug 2009

இலங்கையின் அமைச்சரும், விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து தப்பியோடியவருமான அமைச்சர் கருணா, சமீபத்தில் இரகசியமாக சுவிஸ்சர்லாந்துக்குச் சென்று வந்துள்ளார். அங்கு இரவுநேரக் கேளிக்கை விடுதிஒன்றில் களியாட்ட மங்கைகளுடன் உல்லாசமாக இருந்த அவர், மதுபோதை தலைக்கேற அங்கு நின்ற அழகி ஒருவருடன் இணைந்து புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார்.

விடுவார்களா எமது மக்கள் இதனை அம்பலப்படுத்தாமல் ? உடனே இந்தப் புகைப்படங்களை அதிர்வுக்கு அனுப்பிவிட்டார்கள். ஒரு பொறுப்புள்ள பதவியில் இருக்கும் அமைச்சர் ஒருவர் ஆடக்கூடிய கூத்தா இது ? இவ்வாறான அழகிகளுடன் தொடர்புகளை வெளிநாட்டில் உள்ள அமைச்சர்கள் வைத்திருந்தால், அவரை அமைச்சரவையில் இருந்து நீக்கிவிடுவார்கள். அல்லது ஆட்சியே கவிழ்ந்துபோகும் நிலை வெளிநாடுகளில் உள்ளது.

அரைக்கை சட்டை ஒன்று போட்டு, அந்த சட்டைப்பையில் ஒரு சில்வர்கலர் பேனாவை வைத்துக்கொண்டு, இவர் அடிக்கும் லூட்டியே தனி... 3 லட்சம் மக்கள் முட்கம்பிவேலிக்குள், நிலத்தில் கால் வைக்கமுடியாத அளவு மழைநீர் வெள்ளத்தில் தத்தளிக்க, குடி நீருக்கு காத்திருக்க... இவர் மற்ற தண்ணியில் மிதந்துகொண்டுடிருக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக