செவ்வாய், 18 ஆகஸ்ட், 2009

இலங்கையில் வெள்ளத்தில் மிதக்கும் ஈழத்தமிழர் முகாம்



கொழும்பு, ஆக. 17: இலங்கையில் சுமார் 3 லட்சம் ஈழத்தமிழர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள தாற்காலிக முகாம்களை வெள்ளம் தாக்கியுள்ளது. இதனால் மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். வன்னியில் முகாம்களுக்குள் வெள்ளம் புகுந்ததால் மக்களால் உணவு சமைக்க முடியவில்லை. தூங்குவதற்கும் இடமின்றி பரிதவிக்கின்றனர். வவுனியாவின் வடக்குப் பகுதியில் உள்ள ஈழத்தமிழர்கள் முகாமையும் வெள்ளம் பாதித்துள்ளது. வீடுகள், கழிப்பறை, கழிவுநீர் செல்லும் குழாய் ஆகியவை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. முகாம்களுக்குள் நீர் தேங்கியிருப்பதால் மக்களால் உணவு சமைக்க முடியவில்லை. தூங்க முடியாமல் இரவு பகலாக கஷ்டத்தை அனுபவிக்கின்றனர். ஆனால், வன்னி மற்றும் வவுனியாவில் ஈழத்தமிழர் முகாம்களில் வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு வேண்டிய உதவி செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு சமைக்கப்பட்ட உணவு வழங்கப்பட்டு வருகிறது. வவுனியா முகாமில் நீர் தேங்கியப் பகுதியில் இருந்து மக்கள் மீட்கப்பட்டு முகாம் எல்லைக்குள்ளையே சற்று உயரமான பகுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இரு முகாம்களிலும் நிலைமை கட்டுக்குள் உள்ளதாக இலங்கை அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈழத்தமிழர் வசிக்கும் தாற்காலிக முகாம்கள் கடுமையான மழையை தாங்கும் வகையில் இல்லை என்று அங்கு மறுவாழ்வு பணியில் ஈடுபடும் தன்னார்வ நிறுவனங்கள் ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்திருந்தன. ஆனால் இதை அந்நாட்டு அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை. இந்நிலையில் அங்கு பருவமழை பெய்து வருவதால் முகாம்கள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. முகாம்களின் மேற்கூரை பல இடங்களில் கிழிந்துள்ளதால் அதன் வழியாக நீர் சொட்டுச் சொட்டாக வழிந்து ஓடுகின்றன.
கருத்துக்கள்

சிங்களத் தலைவர்களே, ‘முகாம்களில் உள்ளவர்களை விடுவியுங்கள் அல்லது குறைந்தது பள்ளிகளிலாவது தங்க வையுங்கள். இதனால் பள்ளிக் கூடங்கள் தொடர்ந்து மூடியிருந்தாலும் கவலை இல்லை’ என்கிறார்கள். சிங்கள அரசும் காங்.அரசும் 3,00,000 ஈழத் தமிழர்களை 80,000 ஆகக் குறைக்க இயற்கை தந்த பரிசு என்று மகிழ்ந்து கொண்டு உள்ளார்கள். உலக மக்களோ உறங்கிக் கொண்டிருக்கின்றார்கள். இவர்களைக் காக்கும் காவலனாகஇருந்தது விடுதலைப் புலிகள்தாம் என்பதைப் புரிய வைத்திருக்கின்றார்கள். விரைவில் ஈழத்தமிழர்களின் இன்னல்கள் தீர்க! உரிமையுள்ள தாயக மண்ணாம் தமிழ் ஈழத்தில் உரிமையுடன் வாழ்க! 'விதந்தரு கோடி இன்னல் விளைந்தெமை பழித்திட்டாலும் சுதந்திர தேவி நின்னைத் தொழுதிட மறக்கிலேனே’ என வாழும் விடுதலைப் புலிகள் வெல்க! 'சூதும் பாவமும் பண்ணினால் போவான் போவான் ஐயோவென்று போவான்' என்னும் பாரதி வாக்கு மெய்யாகட்டும்!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
8/18/2009 3:30:00 A

ஈழத்தமிழர் வசிக்கும் தாற்காலிக முகாம்கள் கடுமையான மழையை தாங்கும் வகையில் இல்லை என்று அங்கு மறுவாழ்வு பணியில் ஈடுபடும் தன்னார்வ நிறுவனங்கள் ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்திருந்தன. ஆனால் இதை அந்நாட்டு அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை. இந்நிலையில் அங்கு பருவமழை பெய்து வருவதால் முகாம்கள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. முகாம்களின் மேற்கூரை பல இடங்களில் கிழிந்துள்ளதால் அதன் வழியாக நீர் சொட்டுச் சொட்டாக வழிந்து ஓடுகின்றன.இதைதான் தமிழக முதல்வர் சுமூகமான சூழ் நிலை என்கிறார். அட துரோகிகளே…த்தூ….

By srithiran
8/18/2009 1:55:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக