புதன், 19 ஆகஸ்ட், 2009

தமிழக அரசின் உத்தரவு உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது : பழ.நெடுமாறன்


சென்னை, ஆக. 18: "தடை செய்யப்பட்ட இயக்கங்களை ஆதரித்துப் பேசுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தமிழக அரசு உத்தரவிட்டிருப்பது உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். இது குறித்து செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: "தடை செய்யப்பட்ட இயக்கங்களை ஆதரித்துப் பேசுவது தண்டனைக்குரிய குற்றம். அவ்வாறு செய்பவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் எச்சரித்துள்ளார். "தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு எதிராகப் பேசுவது குற்றமல்ல' என்று உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம், பொடா மறு ஆய்வுக் குழு ஆகியவை தீர்ப்பளித்துள்ளன. அதன் அடிப்படையில் தான் "பொடா' சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நான் (பழ.நெடுமாறன்), வைகோ உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டோம். நீதிமன்றங்களின் தீர்ப்பை அவமதிக்கும் விதத்தில் தலைமைச் செயலாளர் அறிக்கை வெளியிட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் ஆகியவை தடை செய்யப்பட்ட இயக்கத் தலைவர்களின் படங்கள், கொடிகள் மற்றும் சின்னங்களை வெளியிடுவது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் என்று ஊடகங்களையும் தலைமைச் செயலாளர் மிரட்டியுள்ளார். முழு கடையடைப்பு நடத்துவது சட்ட விரோதம் அல்ல என்று 3-2-2009-ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. ஆனாலும் கடந்த பிப்ரவரி 4-ம் தேதி இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் நடத்திய முழு அடைப்புப் போராட்டத்தை சட்ட விரோதமானது என எச்சரித்து தலைமைச் செயலாளர் கடிதம் எழுதியிருந்தார். நீதிமன்றத் தீர்ப்புகளை அவமதிக்கும் வகையிலும், கட்சிகளையும், ஊடகங்களையும் மிரட்டுவதற்கும் தலைமைச் செயலாளரை முதல்வர் பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது. ஈழத் தமிழர் பிரச்னை சுமுகமாக தீர்ந்து விட்டது என்று சில நாள்களுக்கு முன்னாள் கூறிய முதல்வர் இப்போது முகாம்களில் உள்ள ஈழத் தமிழர்களை விடுவிக்க மத்திய அரசு தலையிட வேண்டும் என்று கடிதம் எழுதுகிறார். இப்படி முன்னுக்கு பின் முரணாகச் செயல்படுவது அவரது வழக்கமாகி விட்டது. ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக செயல்படுபவர்களை சட்ட விரோதமான மிரட்டல்கள் மூலம் ஒடுக்க முயல்வது ஒருபோதும் வெற்றி பெறாது என்று நெடுமாறன் கூறியுள்ளார்.
கருத்துக்கள்

Indians please allow the innocent Srilankan Tamils live peacefully and freely. Why we all Indian oppose the humans freedom. Is it Mahatham Gandi gee's philosophy? If we respect out thesa pitha Gandi . please help Srilankan Tamil rather hurt and kill them. இலங்கை அரசின் அடுத்தகட்ட நகர்வைப் பொறுத்தே அந்நாட்டுக்கான உதவிகள் அமையும் - அமெரிக்கா அறிவிப்பு இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவடைந்து அதில் தாங்கள் வெற்றி பெற்றுவிட்டதாக இலங்கை அரசு கூறி மூன்று மாதங்கள் ஆகியுள்ள நிலையில், அந்நாட்டுக்கான மேலும் நிதியுதவிகள், இனி அங்கு மக்களை மீளக் குடியமர்த்துவது மற்றும் அரசியில் தீர்வுகளுக்கான நகர்வை ஒட்டியே அமையும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. நாட்டில் அதிகாரப் பகிர்வு தொடர்பான திட்டங்களை ஜனாதிபதி விரைவில் அறிவிப்பார் என்று அமெரிக்கா எதிர்பார்ப்பதாக, அந்நாட்டின் தெற்காசியாவுக்கான துணை வெளியுறவுச் செயலர் ராபர்ட் பிளேக் பிபிசியிடம் தெரிவித்தார். அரசியல் ரீதியான தீர்வுத் திட்டங்கள் முன்வைக்கப்படுவது தாமதப்படும் பட்சத்தில் அது தமிழ் சமூகத்தை மேலும் தனிமைப்படுத்துவதுடன

By Rahuman
8/19/2009 2:16:00 AM

(

இவ்வாறு விளம்பரப்படுத்துவது தவறு என அரசிற்குத் தெரியும். ஆனால், வேறு எவ்வாறுதான் காங்.ஐ மனங் குளிர வைப்பது? ஊடகங்களை மிரடடுவது? நாளை நடைபெற இருக்கும் சாற்றுரை (பிரகடன) நிகழ்ச்சியைக் குலைக்க முயற்சிப்பது?--இலக்குவனார் திருவள்ளுவன்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக