புதன், 4 நவம்பர், 2009

மத்திய அரசின் உதவிகள் தொடர்ந்து கிடைக்கும்: முதல்வர் கருணாநிதி


சென்னை, நவ. 3: தமிழகத்தில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கான மத்திய அரசின் உதவிகள் தொடர்ந்து கிடைக்கும் என்று முதல்வர் கருணாநிதி நம்பிக்கை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள முகாம்களின் நிலையை மேம்படுத்த ரூ.16 கோடி மதிப்பிலான முன்மொழிவுகளை மத்திய அரசுக்கு தமிழகம் அனுப்பியுள்ளது. இதுதொடர்பாக, மத்திய அரசிடம் இருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை. இந் நிலையில், கருணாநிதி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை விவரம்: திமுக அரசைப் பொறுத்தவரையில், தமிழகத்தில் வாழும் இலங்கைத் தமிழர்கள் அகதிகள் அல்ல; அவர்களும் தமிழர்கள்தான். நம்மோடு தொப்புள் கொடி உளவு கொண்டவர்கள். அவர்களை வாழ்விக்கச் செய்யும் அனைத்து முயற்சிகளும் நம்மை நாமே வாழ்வித்துக் கொள்ளச் செய்யும் முயற்சிகள்தான் என்ற நோக்கோடு தமிழக அரசு செயல்படுகிறது. இலங்கைத் தமிழர்கள் வாழும் முகாம்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கிற குறைகளைக் கண்டறிந்து நிவாரணப் பணிகளை மேற்கொள்ளத்தான் அரசின் சார்பில் ரூ.12 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய அரசின் உதவிகளும் தொடர்ந்து கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள்

பாவம் கலைஞர்! முன்பெல்லாம் மத்திய அரசு உதவி செய்திருந்தாலும் தமிழக அரசே செய்ததுபோல் பேச முடிந்தது. இப்பொழுது ஒவ்வொரு திட்டத்திலும் பேச்சிலும் மத்திய அரசும் உதவுவதாகச் சொல்ல வேண்டியுள்ளது. அல்லது மத்திய அரசு உதவப் போகிறது என்ற மாயையாவது விதைக்க வேண்டியுள்ளது. தமிழக முசிபூர் இரகுமானாக எப்படி இருந்த அருமைக்கும் பெருமைக்கும் உரிய கலைஞர் . . . . . ? வருத்தத்துடனும் உள்ளன்புடனும் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
11/4/2009 3:35:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக