ஞாயிறு, 1 நவம்பர், 2009

2010, ஜனவரிக்குள் தமிழர்கள் சொந்த ஊர்களில் குடியமர்த்தப்படுவார்கள்: இலங்கை நம்பிக்கை



கொழும்பு, அக்.31: இலங்கையில் போரினால் இடம்பெயர்ந்த தமிழர்கள் அடுத்த ஆண்டு ஜனவரிக்குள் சொந்த ஊர்களில் குடியமர்த்தப்படுவார்கள் என்று இலங்கை நம்பிக்கை தெரிவித்துள்ளது. இதுகுறித்து இலங்கையின் பேரிடர் மேலாண்மை மற்றும் மனித உரிமைகள் துறை அமைச்சர் மகிந்தா சமரசிங்கே கூறியதாவது:போரினால் இடம்பெயர்ந்த தமிழர்கள் அனைவரும் அடுத்த ஆண்டு ஜனவரிக்குள் சொந்த ஊர்களில் குடியமர்த்தப்படுவார்கள். சிறப்பு முகாம்களில் உள்ள ஆயிரக்கணக்கான மக்களை விரைவாக சொந்த ஊர்களில் குடியமர்த்த நடவடிக்கை எடுக்குமாறு அமெரிக்க, ஐரோப்பிய யூனியன் மற்றும் மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. இலங்கை கடந்த 30 ஆண்டுகளாக தீவிரவாதத்தால் சிதறுண்டு போனது. இனி புதிய இலங்கையை உருவாக்கி மக்கள் வாழ நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். வடக்குப் பகுதியில் இருந்த இடம்பெயர்ந்த 2.85 லட்சம் பேரில் சுமார் 1 லட்சம் பேர் சொந்த ஊருக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் கிளிநொச்சி பகுதிகளில் இடம்பெயர்ந்த மக்களை குடியமர்த்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுவிட்டன. இந்த பகுதிகளில் 41 ஆயிரத்து 685 பேரை குடியமர்த்துவதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்று பேரிடர் நிவாரணத் துறை அமைச்சர் ரிசாத் பத்தியுதீன் தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள்

இலங்கையில் இருந்து சிங்களர்கள் பிரிந்து போகும நாள விரைவில வரும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்.

By Ilakkuvanar Thiruvalluvan
11/1/2009 3:20:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக