singalam லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
singalam லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 5 செப்டம்பர், 2012

புத்தரின் பொருள்களை இலங்கைக்கு அனுப்பாதீர் : தலைமையமைச்சருக்கு வைகோ மடல்

புத்தரின் பொருள்களை இலங்கைக்கு அனுப்பாதீர் : தலைமையமைச்சருக்கு வைகோ கடிதம்



சென்னை, செப்., 05 : புத்த பெருமானின் பெயரை உச்சரிக்கும் தகுதி இல்லாத, கொலைகார மகிந்த ராஜபக்சே ஆட்சி செய்யும் இலங்கைக்கு புத்தரின் புனிதப் பொருட்களை அனுப்ப வேண்டாம் என்று கூறி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பிரதமர் மன்மோகன்சிங்க்கு கடிதம் எழுதியுள்ளார்.வைகோ அனுப்பியுள்ள கடிதத்தில்,  உலகெங்கும் வாழ்கின்ற தமிழர்களை வேதனைக்கு உள்ளாக்குகின்ற ஒரு செய்தியைத் தங்கள் கவனத்துக்குக் கொண்டு வர விழைகின்றேன். தில்லியில் உள்ள தேசிய ஆவணக்காப்பகத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டு உள்ள, புத்த பெருமானின் எலும்புகள் உள்ளிட்ட புனிதப் பொருள்களை, வருகின்ற ஆகஸ்ட் மாதம் 20 ஆம் நாள் முதல், செப்டெம்பர் மாதம் 5 ஆம் நாள் வரையிலும், இலங்கை முழுவதும் காட்சிப் பொருளாக வைப்பதற்காகக் கொண்டு செல்வது என, இந்திய அரசும், இலங்கை அரசும் ஒப்பந்தம் செய்து கொண்டு இருப்பதாக, ஏடுகளில் செய்திகள் வெளியாகி உள்ளன. தில்லி தேசிய ஆவணக்காப்பகத்தின் பொது இயக்குநர் பிரவீண் ஸ்ரீ வத்சவா, இலங்கை அரசின் புத்தசாசனம் மற்றும் சமயங்கள் துறையின் அமைச்சகச் செயலாளர் கேஷியன் ஹெராத் ஆகிய இருவரும், கொழும்பு நகரில், மே 18 ஆம் நாள், இதுதொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டு உள்ளனர்.இலங்கை குடியரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சேவின் வேண்டுகோளை ஏற்று, இந்திய அரசு இம்முடிவை மேற்கொண்டு இருப்பதாகத் தெரிகின்றது. இந்திய அரசின் முடிவு, வெந்து போன தமிழர்களின் நெஞ்சில் வேல் கொண்டு குத்துவதாக  இருக்கின்றது. மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்களைப் படுகொலை செய்தது, சிங்கள இனவாத அரசு. ஐக்கிய நாடுகள் மன்றத்தின் பொதுச்செயலாளரால் நியமிக்கப்பட்ட மூவர் குழு அளித்த அறிக்கை அதை உறுதிப்படுத்துகின்றது. அப்பாவித் தமிழர்கள், குழந்தைகள், பெண்கள், வயது முதிர்ந்தோரை, சிங்கள இராணுவம் ஈவு, இரக்கம் இன்றிக் கொன்று குவித்தது. இப்போது, உலகநாடுகளின் மனசாட்சி விழித்துக் கொள்ளத் தொடங்கி இருக்கின்றது. கொலைகார மகிந்த ராஜபக்சேவையும், அவனது கூட்டாளிகளையும், பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தின் குற்றக்கூண்டில் நிறுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்கள். ஆனால், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழுவில், இலங்கையின் சிங்கள இனவெறி அரசுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்வதற்கு, இந்திய அரசு முனைப்போடு முன்நின்று பணியாற்றியது. இலங்கை அரசு செய்த இனப்படுகொலைகளை மறைத்து, அவர்களைப் பாதுகாக்க முயன்றது. எனவே, ஈழத்தமிழர்களைப் படுகொலை செய்திட,  இலங்கைக்கு ஆயுதங்கள், இராணுவ உதவிகளை வழங்கிய இந்தியாவும் ஒரு கூட்டுக் குற்றவாளியே என்பதை நான் மிகுந்த வேதனையோடு குறிப்பிடுகின்றேன். 2009 ஆம் ஆண்டு, மே மாதத்தில் மட்டும் லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்களை, சிங்கள இராணுவம் படுகொலை செய்தது. ஆனால், அதற்குப்பிறகுதான், இந்தியா மகிந்த ராஜபக்சேவை பலமுறை இந்தியாவுக்கு அழைத்து, சிவப்புக் கம்பள வரவேற்புக் கொடுத்து, விருந்து அளித்துச் சிறப்பித்தது. இப்போது, இலங்கையில், தமிழர்களின் இந்து சமய வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும், பௌத்த விகாரைகளாக மாற்றப்பட்டு வருகின்றன. இலங்கைத் தீவு முழுமையுமே, ஒரு பௌத்த சிங்கள நாடாக மாற்றுவதற்கு, இலங்கை அரசு வெறித்தனமாகச் செயல்பட்டு வருகின்றது.  இரத்தவெறி பிடித்த மகிந்த ராஜபக்சே கூட்டம், புத்தரின் பெயரைச் சொல்லுவதற்கு எவ்வித அருகதையும் அற்றவர்கள். மே 17,18 ஆகிய நாள்களில், படுகொலை செய்யப்பட்ட இலட்சக்கணக்கான தமிழர்களை நினைவுகூர்ந்து, உலகம் முழுமையும் வாழுகின்ற தமிழர்கள் வேதனையோடு கண்ணீர் அஞ்சலி செலுத்திக் கொண்டு இருக்கின்ற வேளையில், மே 18ஆம் நாள், இந்தியா இப்படி ஒரு ஒப்பந்தத்தைச் செய்துகொண்டு இருக்கின்றது. இந்திய அரசு, தமிழர்களுக்கு இழைக்கின்ற மன்னிக்க முடியாத துரோகம் இது. தில்லி தேசிய ஆவணக்காப்பகத்தில் உள்ள புத்த பெருமானின் புனிதப் பொருள்கள், இன்றைக்கு உலகில் மிகவும் மதிக்கத்தக்க, பழமையான  பொருள்களுள் ஒன்றாகும். இந்தியத் தொல்பொருள் துறையின் முதலாவது பொது இயக்குநரான, அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் அவர்கள், பிகார் மாநிலத்தில் பிப்ரவா என்ற இடத்தில், 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நடத்திய அகழ்வு ஆராய்ச்சிகளின்போது, இந்தப் பொருள்கள் கண்டு எடுக்கப்பட்டன. அந்த பிப்ரவாதான், பண்டைக்காலத்தில் கபிலவஸ்து என்று அழைக்கப்பட்டது. புத்தர் இயற்கை எய்தியபோது, அவரது சாம்பலும், எலும்புத் துண்டுகளும், எட்டுக் கூறுகளாகப் பிரிக்கப்பட்டு, எண் திசையைச் சார்ந்த எட்டுக் குழுக்களிடம் பாதுகாப்பதற்காகக் கொடுத்து வைக்கப்பட்டது. கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த மகாபரிணிப்ப சுத்தா எழுதிய குறிப்புகளில், அத்தகைய ஒரு கூறு, கபிலவஸ்துவின் சாக்கியர்களிடம் வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. புனிதம் நிறைந்த அப்பொருள்களை இலங்கைக்குக் கொண்டு செல்லக்கூடாது.எனவே, புத்த பெருமானின் புனிதப் பொருள்களை, இலங்கைக்குக் அனுப்புவதற்காகச் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய, தாங்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன் என்று வைகோ கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

செவ்வாய், 14 ஆகஸ்ட், 2012

மனச்சான்று உள்ளவர்கள் உணருகிறார்கள்! வருந்துகிறார்கள்!HSBC apologises for Lion flag display

HSBC apologises for Lion flag display, hunger striker welcomes community action in UK

[TamilNet, Tuesday, 14 August 2012, 10:02 GMT]
Eezham Tamil activist Sivanthan who waged a hunger strike in London for 22 days during the Olympics, has welcomed the action by the local Tamil community of New Malden, Surrey, after reading the news report, which appeared in the local news paper Your Local Guardian on Sunday with the title “New Malden bank sorry for displaying ‘genocide’ flag.” The Bank had removed the offending flag on 03 August, a few hours after the local community reacted against the display and the wider attention it acquired through a headline story. After removing the Sri Lankan flag, the HSBC branch had also extended apologies to the members of the community. In the meantime, the recovering hunger striker has appealed the London based Tamil electronic media to refrain from running commercials displaying ‘Sri Lanka’ flag and businesses to stop using the same.

Gobi Sivanthan on 13 08 2012 by TamilNet

On the concluding day of the Olympics, the apology by the HSBC bank was brought up in the news story by Clare Buchanan of Your Local Guardian.

“The flags were meant with the very best intentions and the bank unreservedly apologises to any members of the Tamil community who were offended,” the paper said citing a spokesman of HSBC.

In the meantime, Mr. Sivanthan, who is currently hospitalized after the fast, urged Tamil media houses operating from London like the ILC Radio and GTV, to refrain from giving advertisement space to the business establishments, which were using the offending ‘Sri Lankan’ flag in their commercials.

Referring positively to the recent decision taken by the HSBC branch in New Malden, London to remove Sri Lankan flags and apologize for displaying the same after protests from Eezham Tamils in the locality, youth activist Gobi Sivanthan urged Eezham Tamils world over to reject the ‘Sri Lankan’ identity and all symbols associated with it, in a voice interview for TamilNet. He further appealed to Eezham Tamil businesses not to promote any symbols associated with the genocidal Sri Lankan state.

Speaking from his hospital bed, Mr. Sivanthan said “Sri Lanka colluding with world establishments is taking its process of genocide further by imposing the ‘Sri Lankan’ identity on us,” opining that the Sri Lankan flag is associated with genocide of the Eezham Tamils.

He appealed to Tamil businesses, shops, restaurants and media houses to refrain from using the Sri Lankan flag symbols and other symbols associated with the ‘Sri Lankan’ identity which only legitimizes the ongoing genocide of the Eezham Tamil nation.

Sivanthan also criticized some establishments’ organizations for criminalizing the national flag of the Eezham Tamils, emphasizing that Tamils have a responsibility to defend and uphold the national flag and national symbols of Tamil Eelam.

The Tamil Eelam national flag was on prominent display at the spot of Sivanthan’s protest for all the 22 days.

Chronology:


Related Articles:
13.08.12   Youth Activist Sivanthan concludes 22 day hunger strike

வெள்ளி, 5 ஆகஸ்ட், 2011

தமிழகச் சட்ட ஒழுங்கைக் கெடுக்கச் சிங்களம் முயற்சி

தமிழக சட்ட ஒழுங்கை கெடுக்க சிங்களம் முயற்சி

சிங்களம் அடிபட்ட “பாம்பை” போல இப்போது உணர்கிறது. நாலாவது வன்னிப் போர் நடக்கும் போதுகூட, தமிழ்நாட்டில் மற்றும் இந்தியாவில் தங்களுக்கு “எதிரான” குரல் எழுப்பப்பட வில்லை என்று “இறுமாந்திருந்த” வேளையில் எல்லாமே இப்போது தங்களுக்கு எதிராக நடப்பதாக “சிங்களம்” கணக்கு போடுகிறார்கள். ” புலிகளை பயங்கரவாதிகள்” என்று முத்திரை குத்தியபோது, உலகம் ஒத்துழைத்தது. “அப்பாவி மக்களும் புலிகளுடன் சேர்ந்த போராளிகள்தான்” என்று சிங்களம் முத்திரை குத்திய போதும், உலகம் கண்டுகொள்ளவில்லை. “வெள்ளைக் கொடியுடன் சரனைந்த புலிகளை” படுகொலை செய்தபோதும், உலகம் “பெரிதாக கண்டுகொள்ளவில்லை”. இப்போது என்ன வந்துவிட்டது? “தமிழக சட்டமன்றமும், இந்திய நாடாளுமன்றமும்” சிங்களத்திற்கு எதிராக முனு, முணுக்கின்றன? இதுதான் சிங்களம் இன்று கேட்கும் கேள்வி.
உண்மைதான். அப்பாவி ஈழத் தமிழர் கொல்லப்பட்டபோதும், பகிரங்க இன அழிப்பு நடந்தபோத்யும், புலிகளை எதிர்த்து “ரசாயனக் குண்டுகளையும், கொத்துக் குண்டுகளையும்” பயோன்படுத்திய போதும, தமிழக மக்களை அடக்கி ஆள ஒரு கருணாநிதி முதல்வராக இருந்தார். அந்த சூழலின் “மௌனத்தை” உடைக்க “முத்துக் குமார்” என்ற தம்பி “உயிராயுதமாக” தன்னைத்தானே ஆக்கிக்கொண்டு, பெரும் “தீப்பொறியை” கிளப்பி விட முயன்றான். அதயும் அடக்க “ஜாபர் சேட்” போன்றோர் முயன்று வெற்றி பெற்றனர். இப்போது “பீனிக்ஸ் பறவை” போல மீண்டும் தமிழன்” எழுகிறான்.இந்த முறை “ஜெயலலிதா” முகம் “தமிழ் முகமாக” மாறி, “தமிழர் எழுச்சிக்கு” பயன்படுகிறது. இது அடுக்குமா? என்று சிங்களம் அலறுகிறது. “எத்தனையோ தேசிய இனப் பிரச்சனைகளை” எதிர்கொண்டு சமாளித்தவர்கள் நாங்கள். எங்களிடமே இந்த தமிழினம் விளையாடுகிறதா?”" என்று மத்திய உளவு நிறுவனமான “ரா’ வேலை செய்கிறது. திட்டம் தீட்டுகிறது. சூழ்ச்சி செய்கிறது.
அதன் விளைவே “திடீரென சிங்கள எம்.பி.களை ” நாடாளுமனரதிற்கு அழைப்பதும், அவர்களுக்கு “எதிர்ப்பு” கொடுத்தால், அதற்காக ” வந்தவர்களிடம் “மன்னிப்பு” கேட்பதும் , அதன்மூலம் “இந்தியாவின் மானத்தை கப்பலேட்டிரிவிடுவதும்” வட இந்திய நாடாளுமன்ற முறைகளாக இருக்கலாம். அதுவும் “திட்டமிட்டு” நடத்தப்பட்டதாக தெரிகிறது. “டில்லிக்கு சொல்லாமல் தமிழக சட்டப்பேரவை போர்க்குற்றவாளி, மற்றும் பொருளாதார தடை” என்று “தீர்மானம்” போட்டதை , மத்திய அரசும், பிரதமர் அலுவலகமும், வெளிவிவகாரத் துறையும், “ரசிக்கவில்லை”. அந்த “தீர்மானங்களை” வைத்து ஹிலாறி கிளிண்டன், முதல்வர் ஜெயலலிதாவை சந்த்தித்தையும், அவர்கள் வரவேற்கவில்லை. இலங்கை எம்.பி.கள் “நாடாளுமன்றம் வந்தபோது, அதிமுக உறப்பினர்கள் எதிர்ப்பு முழக்கம் இட்டதையும்” டில்லி வெறுப்பாகவே பார்க்கத் தொடங்கி உள்ளது. அவற்றிற்கு எல்லாம் பதில் கொடுக்க டில்லி நினைக்கிறது.
தமிழ்நாட்டில் “ஈழப்ப் பிரச்சனையை”‘ ஒட்டி சட்ட-ஒழுங்கை குலைத்தால், தானாகவே அதிமுக அரசு தனது ” சட்ட-ஒழுங்கை ‘பாதுகாக்க ” தமிழின உணர்வாளர்கள்” மீது “நடவடிக்கை” எடுப்பார்கள் என்று டில்லிக்கு கொழும்பு ஆலோசனை கூறியுள்ளது. இது “பழைய” அதிகாரிகள் சிலர் மூலமும் உறுதி செய்யப்பட்டதாகத் தெரிகிறது. அதை ஒட்டி, கொழும்பு தனது உளவுத் துறையான “என்.ஐ.பி.” மூலம் “ஐம்பது சிங்கள இளைஞர்களை” இந்தியா வந்திருப்பவர்களை சென்னைக்கு அனுப்பி, அவர்களை “பகிரங்க ஊர்வலமாக” வெளியே தெரியும்படி “பவனி வர” ஏற்பாடு செய்தது. புதன்கிழமை காலை அந்த திட்டம் செயலுக்கு வந்தது. சென்றல் ரயில் நிலையத்திலிருந்து “ஐம்பது சிங்கள இளைஞர்கள் சிங்கள எழுத்துக்கள் கொண்ட பனியன்களை மாட்டிக்கொண்டு” ஊர்வலம் போல நடந்துவந்தனர். அவர்களது கைகளில் “சிறிய சிங்களக் கொடிகளை” பிடித்துக் கொண்டு வந்தனர். அத்தகைய ஊர்வலத்திற்கு காவல்துறை இங்குள்ள “தமிழர்களுக்கே கூட” அனுமதி கொடுப்பதில்லை. அப்படி “காவலர் அனுமதி இல்லாமல்” அந்த சிங்கள படையெடுப்பு சென்னை நகரில் பகிரங்கமாக நடந்தது.
அந்த சிங்கள ஊர்வலம் நேராக “புரசவாக்கத்தை: அடைந்து “ஏ.ஜே.விடுதி” என்ற வட இந்தியர் விடுதிக்கு போய் சேர்ந்தது. சிங்களமும் டில்லியும் சேர்ந்து போட்ட “சதி” நடைபெறாமல், அந்த “சிங்களப் பொடியன்களுக்கு” உள்ளேயே “ஜே.வி.பி. என்றும், ராஜபக்சே ஆள்” என்றும் சண்டை அவ்ந்துவிட்டது. அந்த சண்டை “புரசைவாக்கம் கடைவீதியை” அசிங்கப்ப்டுத்தியது. அதுகண்ட “தமிழ் இளைஞர்கள்” எங்கள் ஊருக்கு வந்து என் சட்ட-ஒழுங்கை குலைகிறீர்கள் என்று கேள்வி கேட்டார்கள். கேள்வி கேட்டது குற்றமாகிப் போனதால், செய்தி அறிந்த “கொழும்பு” தலையிட்டு, “டில்லியை” உசுப்பி விட்டு, அதமூலம் “தமிழ் இளைஞர்களை” கைது செய்ய வைத்திருகிறார்கள். இது “அந்நிய சதியால்” தமிழக சட்ட’-ஒழுங்கை கெடுக்க” எடுக்க[ப்பட்ட முயற்சியே. வம்பு செய்த “சிங்கள இளைஞர்கள்” ஏன் வந்தார்கள்?, என்று வந்தார்கள்?, எதற்கு வந்தார்கள்?, என “காவல்துறை” புலனாய்வு செய்து, “தூண்டிவிட்ட” அந்நிய உளவுப்படை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-TSS MANI

திங்கள், 18 ஜூலை, 2011

களங்க நாடுகளின் பட்டியலில் இருந்து நீக்குமாறு இலங்கை கோரிக்கை

களங்கத்திற்குரிய நாடுகளின் பட்டியலில் இருந்து எடுத்துத் தண்டித்துப் புறக்கணிக்க வேண்டிய நாடுகளின் பட்டியல் உருவாக்கி முதல்நாடாகச் சிங்களர் ஆளும் இலங்கையைச் சேர்க்க வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

களங்க நாடுகளின் பட்டியலில் இருந்து நீக்குமாறு இலங்கை கோரிக்கை

First Published : 17 Jul 2011 01:11:59 PM IST


கொழும்பு, ஜூலை.17: ஐக்கிய நாடுகள் சபையின் களங்கத்துக்குரிய நாடுகள் பட்டியலில் இருந்து நீக்கவேண்டும் என்று இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது.யுத்தம் இடம்பெற்ற காலத்தில் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பபு சபை மற்றும் நடவடிக்கைக்குழு என்பன இலங்கையை இந்த பட்டியலில் இணைத்திருந்தன.சிறுவர்களை படைகளில் இணைத்தல் உட்பட்ட பல்வேறு குற்றச்செயல்கள் காரணமாகவே இந்த பட்டியலில் இலங்கை இணைக்கப்பட்டிருந்ததாக ஐக்கிய நாடுகளின் இலங்கைக்காக உறைவிடப் பிரதிநிதி பாலித கோஹன தெரிவித்தார்.விடுதலைப்புலிகளிடம் இருந்த சிறுவர் படையினர் விடுவிக்கப்பட்டனர். அதேநேரம் பிள்ளையான் தரப்பும் தமது சிறுவர் படையை கலைத்து அவர்களை குடுமபங்களுடன் இணைத்துள்ளது.எனவே இலங்கையை களங்கத்திற்குரிய நாடுகளின் பட்டியலில் இருந்து நீக்கவேண்டும் என்று கோஹன கோரிக்கை விடுத்துள்ளார்.

செவ்வாய், 21 ஜூன், 2011

. மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால்  இனிமேல், தமிழகக் காவல்துறை நடவடிக்கை எடுக்கும். ௨.தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டால், தமிழ்நாட்டில் உள்ள சிங்களர்களுக்குத் தமிழக அரசு பாதுகாப்பு அளிக்காது என்றும் தமிழக முதல்வர் அறிவிக்க வேண்டும். அப்பொழுதுதான் இக்கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி இட முடியும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / 
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

இலங்கை கடற்படையினரால் 23 தமிழக மீனவர்கள் கைது; 5 படகு பறிமுதல்

First Published : 21 Jun 2011 11:00:35 AM IST

Last Updated : 21 Jun 2011 12:09:34 PM IST

ராமேஸ்வரம், ஜூன்.21: மண்டபம், ராமேஸ்வரம் பகுதிகளில் இருந்து மீன்பிடிப்பதற்காகச் சென்ற 23 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.இதுகுறித்து மீன்வளத்துறை உதவி இயக்குநர் மார்க்கண்டேயன் கூறுகையில், கைது செய்ததற்கான காரணம் தெரியவில்லை என்றும், நள்ளிரவு 11 மணியளவில் இந்த கைது சம்பவம் நிகழ்ந்துள்ளதாகவும் தெரிவித்தார். தமிழக மீனவர்களிடம் இருந்து 5 படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.இலங்கை கடற்படையினரிடம் இருந்து ஒரு படகில் தப்பி வந்த மீனவர் ஒருவர் தகவல் தெரிவித்ததையடுத்து இந்த கைது சம்பவம் அனைவருக்கும் தெரியவந்தது.பறிமுதல் செய்யப்பட்ட 5 படகுகள் மன்னார் கடற்படை முகாமில் வைக்கப்பட்டுள்ளதாக இலங்கையின் மன்னார் மாவட்ட ஆட்சியர் நந்தினி தினானி தெரிவித்தார்.
கருத்துகள்

தமிழர் தலைவன் கிளநிதி தந்தி அடித்தே எல்லோரையும் மடையார் அற்கினார் இப்பொது முதலமைச்சர் உறுமி கர்டவேண்டும் இல்லையேல் சின்ஹலவன் கனியாகுமாரிக்கு வந்து பெண்களையும் கெடுப்பான்
By KOOPU
6/21/2011 3:01:00 PM
WHETHER IT IS TAMILS FROM TAMILNADU OR FROM TAMIL ELLAM THERE IS NO PROTECTION FOR THEM. UNION INDIAN GOVT SHOULD STOP PLAYING DOUBLE GAME WITH THE LIVES OF TAMILS. TAMILNADU GOVT AND POLITICIANS SHOULD BE HONEST AND FIGHT AGANIST THESE CONTINOUS CRIMES. INSTEAD OF BEEING FORMAL TAMILNADU GOVT SHOULD MOVE FORWARD TO GET BACK KATCHATHEVU ISLAND FROM SINGALAVANS.
By Paris EJILAN
6/21/2011 2:00:00 PM
இலங்கை கடற்படை மறுபடியும் தன் வேலையை காட்டுகிறது. தமிழக அரசு உஷார்.
By natarajan , chidambaram
6/21/2011 11:38:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

சனி, 11 ஜூன், 2011

Singalam support moon: பான் கி மூன் மீண்டும் ஐநா பொதுச்செயலராக இலங்கை ஆதரவு


வேறு யாரேனும் வந்தால் கொலைகாரச் சிங்களத்திற்கும் ஆபத்து. கொலையை மறைத்த பான்கீமூனுக்கும் ஆபத்து.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!



பான் கி மூன் மீண்டும் ஐநா பொதுச்செயலராக இலங்கை ஆதரவு

First Published : 11 Jun 2011 01:28:21 PM IST

Last Updated : 11 Jun 2011 02:04:28 PM IST

கொழும்பு, ஜூன்.11: பான் கி மூன் இரண்டாவது முறையாக ஐநா பொதுச்செயலர் ஆவதற்கு இலங்கை அரசு ஆதரவு தெரிவித்துள்ளதாக அந்நாட்டில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையை மையமாக வைத்து இலங்கை அரசுக்கும் ஐநா சபைக்கும் இடையே சமீபகாலமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டிருந்தது.இந்த நிலையில் பான் கி மூனின் பதவிக்காலம் விரைவில் முடிவடையும் நிலையில் உள்ளது. இரண்டாவது முறையாக அவர் போட்டியிட விரும்புகிறார். அவருக்கு பல்வேறு நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. பான் கி மூன் ஐநா பொதுச்செயலர் ஆவதற்கு இலங்கையும் ஆதரவு தெரிவித்துள்ளதாக அந்நாட்டின் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகி உள்ளது.

வியாழன், 21 ஏப்ரல், 2011

supporting organisation of L..T.T.E. புலிகளுடன் தொடர்புடைய அமைப்புகளுக்கு தடை: இலங்கை கோரிக்கை

தண்டனை பெற வேண்டிய சிங்களம் திசை திருப்பப் பார்க்கிறது. சிங்களமும் துணைநின்ற துணை நிற்கும் அரசுகளும் தலைவர்களும் அதிகாரிகளும் முதலில் தண்டிக்கப்பட வேண்டும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! / 
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 


புலிகளுடன் தொடர்புடைய அமைப்புகளுக்கு தடை: இலங்கை கோரிக்கை

First Published : 21 Apr 2011 03:42:42 PM IST

Last Updated : 21 Apr 2011 04:24:48 PM IST

கொழும்பு, ஏப்.21: விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய அனைத்து அமைப்புகளையும் தடை செய்யுமாறு இலங்கை அரசு ஐரோப்பிய நாடுகளிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக அந்நாட்டின் தமிழ் இணையதளங்கள் தெரிவிக்கின்றன.ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகளை தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவித்த போதிலும், புலி ஆதரவு அமைப்புகளை தடை செய்யவில்லை என்பதை இலங்கை அரசு சுட்டிக்காட்டியுள்ளது.சமீபத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பு  ஒடுக்கப்பட்ட போதிலும், ஐரோப்பிய நாடுகளில் அதன் ஆதரவு அமைப்புகள் சட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அரசு தெரிவித்துள்ளது.வெளிநாடுகளில் இயங்கி வரும் விடுதலைப் புலி ஆதரவு அமைப்புகளை தடை செய்வது குறித்து அந்நாடுகளுடன் இலங்கை அமைச்சர்கள் சமீபத்தில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.அடுத்தடுத்த வாரங்களில் இதுதொடர்பாக அதிகாரப்பூர்வமான முறையில் இலங்கை அரசு கோரிக்கை விடுக்க உள்ளதாக அந்த இணையதளச் செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

compromise in I.P.L. crisis ? :ஐபிஎல் விவகாரத்தில் சமரசம்?: இலங்கை சூசகம்

இரண்டு மட்டை அமைப்பிற்கும் இடையே ஒரு மோதலும் இல்லை. இறுதி ஆட்டத்தைப் பார்க்க வந்த சிங்களத் தலைவர், அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோர் வரவேற்பு மரபிற்கிணங்க அலுவல்முறையல்லாத வருகையாளர்களாகக் கருதப்பட்டு உரிய மதிப்பு அளிக்கப்பட்டனர். ஆனால், அலுவல் முறையிலான மதிப்பு அளிக்கப்படவில்லை என்பதற்காகச் சிங்களம் முரண்டு பிடிக்கிறது. நாமோ  இனப்படுகொலை புரிந்தாலும் செங்கம்பள விரிப்பு கொடுத்து மரியாததை தருபவர்கள்!  இப்பொழுது இவ்வாறு புறக்கணித்ததாகக்  கருதிச் சிங்களம் ஊடலில் உள்ளது. அரசுகளிடையே உள்ள ஊடல் தீர்ந்தால் இந்தச் சிக்கலும் தீரும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! / 
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 



ஐபிஎல் விவகாரத்தில் சமரசம்?: இலங்கை சூசகம்

கொழும்பு, ஏப்.21: ஐபிஎல்லில் தற்போது விளையாடிவரும் வீரர்கள் மேலும் சில நாட்கள் விளையாட அனுமதிக்கப்படுவர் என்று இலங்கை அரசு சூசகமாக தெரிவித்துள்ளது.இதனால் பிசிசிஐக்கும், இலங்கை கிரிக்கெட் வாரியத்துக்கும் இடையே ஏற்பட இருந்த மோதல் தவிர்க்கப்படும் சாத்தியம் ஏற்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.முன்னதாக இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதால் ஐபிஎல்லில் விளையாடி வரும் இலங்கை அணி வீரர்கள் மே 5-ம் தேதிக்குள் நாடு திரும்ப வேண்டும் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டிருந்தது.எனினும் அவர்களை மேலும் சில நாட்கள் விளையாட அனுமதிக்க வேண்டும் என இந்தியத் தரப்பில் இருந்து வலியுறுத்தப்பட்டது.இதுதொடர்பாக பிசிசிஐயிடம் இருந்து ஏராளமான இ-மெயில்கள் வந்தன. தேர்வுக் குழுவினரையும், இலங்கை கிரிக்கெட் வாரியத்தினரையும் சந்தித்து இந்த விவகாரம் குறித்து ஆலோசனை நடத்த உள்ளேன் என இலங்கை விளையாட்டுத் துறை அமைச்சர் மஹிந்த அளுத்கமகே தெரிவித்தார்.மே 10-ம் தேதி வீரர்கள் இங்கிலாந்துக்கு புறப்பட வேண்டும். அதை ஒத்திவைக்கவும் பரிசீலிப்போம். பிசிசிஐக்கு சங்கடத்தை ஏற்படுத்த விரும்பவில்லை. இந்தியாவுடன் நல்ல உறவு உள்ளது. அது தொடர விரும்புகிறோம். வீரர்களுக்கு புதிய தேதியை அறிவிக்க முயற்சி செய்து வருகிறோம் என அவர் குறிப்பிட்டார்.ஐபிஎல்லில் தற்போது குமார் சங்ககரா, மஹில ஜெயவர்த்தன உள்ளிட்ட 11 இலங்கை வீரர்கள் விளையாடி வருகின்றனர்.அவர்கள் முன்னதாகவே நாடு திரும்புவது அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் எனக் கூறப்பட்டது. மே 21-ம் தேதி வரை அவர்கள் இந்தியாவில் இருப்பார்கள் என அணி உரிமையாளர்களும் எண்ணியிருந்தனர்.ஆனால் இலங்கை அணி வீரர்கள் மே 5-ம் தேதிக்குள் நாடு திரும்ப வேண்டும் என அந்நாட்டு அரசும், கிரிக்கெட் வாரியமும் பிடிவாதம் பிடித்துவந்தன.


வியாழன், 16 டிசம்பர், 2010

condemn to ilangai: national anthem in singhalam only.

மீண்டும் என் பெயரைப் பயன்படுத்தும் கோழை வந்துவிட்டார்.  பகல் ௧.௩௫ மணிக்கு என் பெயரில் பதிந்த நண்பரே! உங்கள் கருததை அச்சமின்றி உங்கள் பெயரிலேயே தெரிவியுங்கள். அச்சம் இரு்நதது எனில் புனை பெயர் வைத்துக் கொள்ளுங்கள். தேவையில்லாமல் உங்கள் வீட்டிற்கு ஏன் காவல்துறை வர வேண்டும் என விரும்புகிறீர்கள்? 
எச்சரிக்கையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

இலங்கைக்கு கருணாநிதி கண்டனம்

First Published : 14 Dec 2010 12:00:00 AM IST

Last Updated : 14 Dec 2010 05:24:31 AM IST

சென்னை, டிச. 13: இலங்கையில் தமிழில் தேசிய கீதம் பாடத் தடை விதிக்கப்பட்டுள்ளதற்கு முதல்வர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து, திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:  இலங்கையில் தமிழ் மக்களும், சிங்களர்களும் வசிப்பதால், அந்த நாட்டு தேசிய கீதம், சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் இதுவரை பாடப்பட்டு வந்தது.  இந்த நடைமுறையை இலங்கை அதிபர் ராஜபட்ச மாற்றியுள்ளார் என்றும், இனிமேல் சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் பாடப்படும் என்றும், தமிழில் தேசிய கீதம் பாடுவதை ரத்து செய்து விட்டதாகவும் செய்திகள் வந்துள்ளன. இதுதொடர்பான தீர்மானம் அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்டு இருப்பதாகவும் செய்தி வந்துள்ளது.  அந்தச் செய்தி உண்மையானால் அது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. புண்பட்டு இருக்கின்ற ஈழத் தமிழர்களின் உள்ளத்தை மேலும் புண்படுத்தக் கூடியது. எனவே, இந்தச் செயலை கண்டிக்கின்றேன் என்று தனது அறிக்கையில் முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.அரசியல் தலைவர்கள் கண்டனம்: தமிழில் தேசிய கீதம் பாட இலங்கை அரசு தடை விதித்துள்ளதற்கு தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன்:  ராஜபட்ச தலைமையிலான இலங்கை இனவாத அரசு, இலங்கையின் தேசிய கீதத்தை இனி சிங்கள மொழியில் மட்டுமே பாட வேண்டும் என்றும், தமிழில் பாடக் கூடாது என்றும் அறிவித்துள்ளது. இது சிங்கள, தமிழ் மக்களிடையேயான நல்லிணக்கத்தை மேலும் பாதிக்கும் வகையில் உள்ளது.   ராஜபட்ச அரசின் ஜனநாயக விரோத செயல்களை கண்டித்து அனைத்து தரப்பினரும் ஆர்ப்பாட்டங்களை நடத்திட வேண்டும்.மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்:  இலங்கையின் தேசிய கீதத்தை தமிழில் இசைக்க தடை விதிப்பது என்ற இலங்கை அரசின் முடிவு கவலை அளிக்கிறது. இலங்கையில் போர் முடிந்து ஓராண்டுக்கும் மேல் ஆகிவிட்டது. இலங்கை அரசு, தமிழர் அமைப்புகளுடன் பேச்சு நடத்தி, தமிழர்கள் வாழும் பகுதிக்கு மாநில சுயாட்சி அளிக்க வேண்டும் என்றும், மொழி, கலாசாரம், வாழ்வாதாரம் போன்ற அம்சங்களில் சம அந்தஸ்து வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த சூழலில், தமிழில் தேசிய கீதம் பாட தடை என்ற முடிவு, இலங்கைத் தமிழர்கள் மத்தியில் அவநம்பிக்கையை உருவாக்கும். இதுபோன்ற நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்று இலங்கை அரசை இந்திய அரசு நிர்பந்திக்க வேண்டும்.விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்: ஒரு நாட்டில் இரு தேசிய கீதங்களா என்று ராஜபட்ச கேள்வி எழுப்பியுள்ளார். ஒரே நாட்டில் இரு தேசிய இனங்கள் வாழும் வரலாற்று உண்மையை ராஜபட்ச மூடி மறைக்க முயல்கிறார். தமிழர்களின் உரிமைகள் ஒவ்வொன்றாகப் பறிபோவதைத் தடுக்கவும் இந்திய அரசு உள்ளிட்ட சர்வதேச நாடுகள் முன்வர வேண்டும்.நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான்: இலங்கையில் தமிழர்கள் என்ற உரிமையுடனும், உணர்வுடனும் இனி எவரும் வாழ முடியாது என்பதை இலங்கை அரசு தொடர்ந்து உலகுக்கு நிருபித்து வந்துள்ளது. அதன் ஒரு பகுதிதான் இலங்கையின் தேசிய கீதத்தைத் தமிழில் பாட விதிக்கப்பட்டுள்ள தடையாகும்.  ஏற்கெனவே தமிழர்களின் மண்ணை தமிழர்களிடம் இருந்து பறித்து, அவர்களை இரண்டாந்தர குடிமக்களாக மாற்றிய சிங்களர்கள், இனி தமிழர்களை அங்கு வாழக் கூட அனுமதிக்கப் போவதில்லை என்பதற்கு இது மற்றொரு எடுத்துக்காட்டு.புதிய தமிழக கட்சித் தலைவர் க.கிருஷ்ணசாமி: "சிங்கள மொழிக்கும், சிங்களர்களுக்கும் தமிழ் மொழியும், தமிழர்களும் நிகரானவர்கள்' என்ற அந்தஸ்தில் இருந்து தமிழ் மொழியினுடைய எல்லா விதமான அடையாளங்களையும் அழிக்கும் வகையில் இப்போது சிங்கள மொழி மட்டுமே தேசியகீத மொழியாக அறிவித்திருக்கிறார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
கருத்துகள்

Karuna, first keep your house clean before issuing condemnation to Srilankan government. How many of us know the meaning of jana gana mana? Can you replace jana gana mana with நீராடும் as National Anthem for Tamil Nadu? That song has all the status to be the National Anthem for Tamil Nadu. It clearly refers India as a continent and “Dravida Naadu” a country within it (like European Union and the countries within it). I am sure you would have arrested Sundaram Pillai, if he was alive today for singing against Indian sovereignty to please your ally congress. It is shame on us that a party (Naam Thamilar) is needed to tell who we are. We lost our identity and let us not decimate our Tamil culture and language any further. We all have the responsibility to promote and protect it for our progeny. On the point, there exists a clear line of separation between Tamil Nation and Sinhala Nation. Tamils always recognized the existence of Sinhala Nation but it is the Sinhala Chauvinism that all the
By Raja
12/14/2010 7:52:00 PM
சிங்களப் பாடலை ஈழத் தமிழர்கள் பாட வேண்டியாது இல்லை. ஈழத் தமிழர்கள், ஈழத் தேசியப் பாடலைத் தான் பாட வேண்டும்.
By ரவி
12/14/2010 1:39:00 PM
என்ன தாத்தா - திடீர் கரிசனம் ? கொத்து கொத்தா மக்களை கொன்னப்போ எங்க போன ? ஓ ! எலக்சன் வருதுல்ல !
By இலக்குவனார் திருவள்ளுவன்
12/14/2010 1:35:00 PM
என் அருமை தமிழ் மக்கள்.... ஏன் எப்ப பார்த்தாலும் அடுத்த நாடு பிரசினில் தலை இடுகிரிகள்.... உங்களுக்கு தமிழில் இந்திய தேசிய கிததை பட முடியுமா? முதலில் உங்கள் நாட்டில் தமிழில் பட ட்ரை பண்ணுகள்... பெஸ்ட் ஒப் லக்.
By ஸ்ரீதரன் - ஸ்ரீ லங்கா
12/14/2010 12:02:00 PM
ஏன்பா கோபப்படுறீங்க? நான்தான் அப்பவே சொன்னேன்ல... நம்ம முதல்வர் ரொம்ப நல்லவர்... அவருக்கு தமிழர்கள் மீது பற்றும் பாசமும் இருக்கிறதென்று... இப்ப பார்த்தீங்களா? தனது உற்ற நண்பர் ராஜபக்சே கோபப்படுவார் என்று தெரிந்தும் துணிச்சலாக கண்டனம் தெரிவித்து இருக்கிறாரே!! இது உண்மையான உணர்வுதாங்க... தேர்தலுக்கு இன்னும் நான்கு மாதங்களே இருப்பதால் இதுவும் ஒரு நாடகம் என்று நீங்கள் கருதினால் நான் என்ன செய்ய முடியும்??
By Abdul Rahman - Dubai
12/14/2010 10:48:00 AM
என் தமிழன்னையே,தமிழே ..உன்னை அழிக்கத்தான் உலகில் இந்த ராஜபக்சேவையும் சேர்த்து எத்தனை பேர் பிறந்தார்கள்..அவர்கள் அழிந்தார்கள். ராஜபக்சே அழிவதும் உறுதி..ஆனால் நீ அழிவாயோ..நீடு தமிழே!..மண்ணும் விண்ணும் ,உடுக்களும் ,பொங்கு கடலும் உள்ளவரை வாழ்வாய்..
By சிபிகுமாரன்
12/14/2010 10:36:00 AM
என்ன ஒரு ஆச்சர்யம்!!!!!, இன்றுதான் இந்த முதியவன்னுக்கு தெரிந்த்ததோ தமிழர்களின் இதயம் புண்பட்டிருப்பது. பதவியின் ஆசையினால் என் இனம் அழிவதற்கு உறுதுணையாக இருந்தவன் எம்மொழி பற்றி பேச தகுதியில்லாதவன் இந்த கொடியவன். தானும் தன் குடும்பமும் நன்றாக இருக்க வேண்டும் என்பதில் இவனது முழுநேர சிந்தனையும். தமிழ்நாட்டை தாரைவார்த்து விடுவான் இவனுக்கு பிரதமர் பதவி கிடைத்தால். எம்மக்கள் உயிர்க்கு போராடிய பொழுதிலல்லவா தமிழ் மாநாடு அமைத்து தமிழ் உணர்வாளர்களை கொச்சை படுத்தியவன் இன்று தமிழர்களை பற்றி கருத்து கூறுவதா? ஏய் மக்கா இதுவரை பொறுத்தது போதும் இனியும் காத்திருக்க வேண்டாம்... வெற்றி நமக்கே என்ற வீர வெற்றி முழக்கத்துடன் தமிழ்வாசகன்
By தமிழ்வாசகன்
12/14/2010 9:20:00 AM
முதல்வரின் இந்த பொய் தமிழ் உணர்வை எந்த தமிழனும் நம்ப மாட்டான்..ஈழப்போர் உக்கிரமான கட்டத்தில் வெறும் கடிதங்க எழுதி நாடகம் நடத்தியவர் தானே நீர் ...
By vijay
12/14/2010 8:23:00 AM
இந்த உணர்வு மக்களை கொன்று குவித்தபோது எங்கு போனது முதல்வர் அவர்களே. எல்லாத்தையும் தான் கொன்னு போட்டாச்சே, இனி யாருக்காக அங்க தமிழ் தேசிய கீதம்? புதைத்த பிணங்களுக்கா? தயவு செய்து உங்களுடைய உணர்வுகளை உங்களுக்குள்ளே வைத்துக் கொள்ளுங்கள். இந்த வயதிலும் ஏன் இப்படி நடிக்கிறீங்க? கொஞ்சம் கூட நா கூசல இப்படி அறிக்கை விடறதுக்கு? இன்னும் என்னன்னவோ வருது. ஆனா உங்க வயசு கருதி அதெல்லாம் எழுதாம இத்தோட நிறுத்திக்கிறேன். தயவு செய்து இது போல் அறிக்கை கொடுத்து உங்க வயசுக்கு உண்டான மரியாதையை கெடுத்துக்காதீங்க. ஏன்னா என்ன மாதிரியே எல்லாரும் இருப்பாங்கன்னு சொல்ல முடியாது பாருங்க....
By முஹம்மது
12/14/2010 7:55:00 AM
இலங்கை என்ன இந்திய மாநிலமா? சீனாவின் செல்லப்பிள்ளை
By Raj
12/14/2010 7:37:00 AM
ராஜபக்‌ஷேயின் அரசு மட்டுமல்ல இதற்கு முன்னரும் கடந்த அறுபது ஆண்டுகளாக இலங்கைத் தமிழர்கள் சிங்கள அரசியல்வாதிகளாலும் அவர்களது அரசுகளாலும் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளார்கள். தந்தை செல்வா காலத்திலிருந்து ஆரம்பித்த இவ்வகையான பேரினவாதப் புறக்கணிப்பின் பிறிதொரு அடையாளமே இப்போது ராஜபக்‌ஷே அரசு இலங்கையின் தேசிய கீதத்தினைத் தமிழிலும் பாடவேண்டியதில்லை என்பதாகும். இலங்கைத் தமிழர்கள் இந்தச் சிங்கள அரசுகளைப் புரிந்து கொண்டதால்தான் 1977ல் தந்தை செல்வாவின் ஆசியுடன் தமிழ் ஈழக் கோரிக்கை உருவானது.இதனைத் தமிழக அரசியல்வாதிகள் அன்றே புரிந்துகொண்டு அதற்கான தீர்வினை மத்திய அரசின் உதவியோடு எட்ட முனைந்திருக்கலாம். முள்ளிவாய்க்காலில் பல்லாயிரம் உயிர்களை இரக்கமின்றிக் கொன்ற அரசிடம் நீதியையும், நியாயத்தையும் எதிர்பார்பதும் அதற்காக அறிக்கைகளை வெளியிடுவதும் காலங்கடந்த செயல் என்றே படுகிறது. இதனைத் தமிழகச் சகோதரர்களின் மனக் குமுறலின் ஓர் அடையாளமாகக் கொள்ளலாமேயன்றி விளையப்போவது ஏதுமில்லை. [www.sarvachitthan.wordpress.com]]
By ’சர்வசித்தன்’
12/14/2010 7:13:00 AM
இலங்கை என்ன இந்திய மாநிலமா? இவர்களின் கண்டனத்தை ஏற்க சீனாவின் செல்லப்பிள்ளை. இந்தியாவை எட்டி உதைக்கப்பூகும் குட்டிக்கடுவன்
By Raj
12/14/2010 6:41:00 AM
மொழித்திணிப்பிற்கு இந்தியம் வழிகாட்டுகிறது என்பதற்கு இதுவொரு சான்று. ஈழம் தமிழர்களுக்கு மட்டுமே உரிய நாடு. அங்கே தமிழில் மட்டுமே நாட்டு வணக்கப்பாடல் இருக்கும். இலங்கை தமிழர்களுக்கும் உரிய நாடு. எனவே, அங்கே தமிழிலும் நாட்டுவணக்கப்பாடல் இருக்க வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
12/14/2010 5:29:00 AM
மொழித்திணிப்பிற்கு இந்தியம் வழிகாட்டுகிறது என்பதற்கு இதுவொரு சான்று. ஈழம் தமிழர்களுக்கு மட்டுமே உரிய நாடு. அங்கே தமிழில் மட்டுமே நாட்டுவணக்கப் பாடல் இருக்கும். இலங்கை தமிழர்களுக்கும் உரிய நாடு. எனவே, அங்கே தமிழிலும் நாட்டு வணக்கப்பாடல் இருக்க வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
12/14/2010 5:18:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *v

ஞாயிறு, 12 டிசம்பர், 2010

India support to ban ki-muun : பான் கீ மூனுக்கு மீண்டும் ஆதரவு தர இந்தியா முடிவு

உண்மையைச் சொல்லிப் போர்க்குற்றங்களைத் தடுக்க எண்ணினாலும் இந்தியத்திற்கும் சிங்களததிற்கும் அடிபணிந்து வாய்மூடி இருந்தவர். இப்பொழுது ஓய்வு பெறச் செய்தால் ஓய்வடைந்தவர்கள் உண்மைகளைத் தெரிவிப்பது போல் ஏதும் உண்மைகளை வெளியிட்டு விடுவார். பதவிநலத்திலேயே மூழ்கச் செய்து விட்டால் தொடர்ந்து அடிமையாகவே இருப்பார். இந்திய, சிங்களப் போர்க்குற்றங்களை மறைக்கும் கேடயமாகவே விளங்குவார். எனவே, சரியான முடிவு! என்றாலும் காலம் விரைவில் மாறும்.  உண்மையாவும் வெளியாகும. ஆட்சி அதிகாரங்கள் போகும்!
தீய எண்ணங்கள் சாகும்! அதனை விரைவில் காண்போம்! தமிழ் ஈழம் உலகநாடுகளால் ஏற்கப்படும் நற்காலத்தையும் காணபோம்! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

பான் கீ மூனுக்கு மீண்டும் ஆதரவு தர இந்தியா முடிவு

First Published : 11 Dec 2010 05:45:55 PM IST

Last Updated : 11 Dec 2010 05:48:02 PM IST

வாஷிங்டன், டிச.11- ஐநா பொதுச்செயலர் பதவிக்கு பான் கீ மூன் மீண்டும் போட்டியிட்டால் அவருக்கு ஆதரவு தர இந்தியா முடிவு செய்துள்ளது.இத்தகவலை ஐநாவுக்கான இந்திய உயர் அதிகாரி ஒருவர் கூறியதாக பிடிஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது."ஐநாவின் முன்னாள் இணைச் செயலரும் இந்திய எம்.பி.,யுமான சசி தரூர் மீண்டும் ஐநா பொதுச்செயலர் பதவிக்கு போட்டியிடுவாரா?" என்று இந்திய அதிகாரியிடம் கேட்டபோது அவர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.கடந்த தேர்தலில், தென் கொரியாவைச் சேர்ந்த பான் கீ மூனிடம்தான் சசி தரூர் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.2011 டிசம்பரில் பான் கீ மூனின் பதவிக் காலம் முடிவடைகிறது.
கருத்துகள்

This 'gentleman' had kept quiet when srilanka was massacring tamils. Of course India will vote for him. He played to the wishes of Indian govt.
By Karthik
12/11/2010 5:53:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

வெள்ளி, 10 டிசம்பர், 2010

seeman to be released

-கருத்துக்கள்‎(3)‎
பங்களிக்க விரும்புகிறீர்களா?
இணைஅல்லதுஉள்நுழை
அவசரத்தில் ஆராயாது தவறான தீர்ப்பு சொன்னதற்காக வளையாத செங்கோல் வளைந்தது என உயிர் நீத்தான் பாண்டிய நெடுஞசெழியன். இவரைப் போன்ற எண்ணற்ற நடுநிலை தவறாத மன்னர்கள் ஆண்ட தமிழ்நாட்டில் நயன்மை- நீதி- எங்கே என்று தேடி வேண்டி உள்ளது. உண்ம அறம் ஓங்க வேண்டுமெனில் தவறு செய்வோர் தண்டிக்கப்பட வேண்டும். எனவே, சீமானைச் சிறைக்கு அனுப்பி அவருக்கும் அவர் குடும்பத்தினருக்கும் அவர் இயக்கத்தினருக்கும் உலகத் தமிழன்பர்களுக்கும் இடரும் உளைச்சலும் ஏற்படுத்தியமைக்குக் காரணமான அனைத்துத் தரப்பு அதிகாரிகள் மீதும் ஆட்சியாளர்கள் மீதும் வழக்கினை இழுத்தடித்த முந்தைய நீதிபதிகள் மீதும் நடவடிக்கை எடுத்துத் தண்டிக்க வேண்டும். அப்பொழுதுதான் இதுபோன்ற தவறுகள் நேரா. நடைமுறைத்தவறுதானே தவிர குற்றம் உண்மை என அரசு வாதிட்டால் அரசிற்கே இழுக்கு என உணர்த்த வேண்டும். சிறை மீளும் சீமானுக்கு வாழ்த்துகள். வாதிட்ட வழக்குரைஞர்களுக்கும் கருத்துப் போரிட்ட அன்பர்களுக்கும் பாராட்டுகள். விடுதலை செய்ததும் நீதிமன்றத்திலேயே விடுவிக்கப்பட்டுப் பின்னர்ச் சிறைச்சாலை சென்று நடைமுறைகளை முடிக்கும் வண்ணம் சட்டம் திருத்தப்பட வேண்டும். மகிழ்ச்சியுடனும் வாழ்த்துகளுடனும் இலக்குவனார் திருவள்ளுவன்
Thiruvalluvan. I. 12/9

நல்ல செய்தி , அண்ணன் அவர்களின் ஓவியத்தை காண http://artforeelam.blogspot.com
vijay 12/9

வாழ்த்துகள்............... மகிழ்ச்சி
ஈழக்கதிர் 12/9

மொழிபெயர் »
« முந்தைய  அடுத்து »