செவ்வாய், 3 நவம்பர், 2009

பாஜக ஆட்சியில் நடந்த ஊழலை திமுக அமைச்சர்கள் ஏன் எதிர்க்கவில்லை? ஜெயலலிதா கேள்வி



சென்னை, நவ.2: பாஜக ஆட்சியில் தொலைத் தொடர்புத் துறையில் 1.6 லட்சம் கோடி ஊழல் நடந்தபோது திமுக அமைச்சர்கள் அதை ஏன் எதிர்க்கவில்லை என அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார்.இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கை:பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சிக் காலத்தில் தவறான அலைவரிசை ஒதுக்கீடு மூலம் நாட்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் இழப்பை ஏற்படுத்தியுள்ளது என மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ.ராசா கூறியிருக்கிறார். இந்தக் குற்றச்சாட்டை உறுதி செய்வதும் அல்லது மறுப்பதும் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையைப் பொறுத்தது. ஆனால், ஒரு தவறை வைத்து மற்றொரு தவறை நியாயப்படுத்த முடியாது. ஒரு கொலையாளி தான் சிக்கியவுடன், தன்னைப் போன்ற வேறொரு கொலைகாரன் சிக்காமல் தப்பி ஓடிவிட்டான் என்ற காரணத்தைக் காட்டி தன்னுடைய கொலை வழக்கிலிருந்து விடுபட முடியாது. ஆனால், இது போன்ற காரணத்தைக் காட்டித்தான் தன்னுடைய ஊழல் வழக்கிலிருந்து விடுபட்டுவிட முயற்சிக்கிறார் ராசா. நாட்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்படும் அளவுக்கு தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக் காலத்தில் தொலைத் தொடர்புத் துறையில் ஊழல் நடந்த போது, முரசொலி மாறன், டி.ஆர். பாலு, ராசா உட்பட இதர தி.மு.க. அமைச்சரவை சகாக்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? இவர்களில் யாரும் இந்த ஊழலை ஏன் எதிர்க்கவில்லை? குறைந்தபட்சம் அமைச்சரவைக் கூட்டத்தில் கூட ஏன் இதை எழுப்பவில்லை? மௌனமாக இருந்ததன் விளைவாக, நாட்டுக்கு இழப்பு ஏற்படுத்திய பல கோடி ரூபாய் ஊழலுக்கு உடந்தையாக இருந்த குற்றத்தை இவர்கள் புரிந்ததாக ஆகாதா? 2003 டிசம்பர் வரை தேசிய ஜனநாயக கூட்டணியின் ஓர் அங்கமாகத்தான் ராசா சார்ந்த தி.மு.க. இருந்து வந்தது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி அமைந்த முதல் நாளிலிருந்து, அதாவது மே 2004-லிருந்து, முதலில் தயாநிதி மாறன், பின்னர் ராசா என தி.மு.க. வைச் சேர்ந்தவர்கள் தான் தொலைத் தொடர்புத் துறையை வைத்திருந்தனர். 5 ஆண்டு காலம் இந்தப் பதவியை வகித்த இந்த இருவரும் ஏன் இந்தப் பிரச்சினையை ஐந்து வருட காலத்தில் எழுப்பவில்லை?இந்த ஊழலை இவ்வளவு காலமாக மறைத்து வைத்திருப்பதன் மூலம், இந்த ஊழலுக்கு உடந்தையாக இருந்தவர்கள் என்ற குற்றத்திற்கு இவர்கள் ஆளாக மாட்டார்களா?. இரண்டாவது தலைமுறை ஸ்பெக்ட்ரம் அலைவரிசை குறித்து மத்திய புலனாய்வுத் துறை விசாரணை நடத்தாவிட்டால் தன்னுடைய அமைச்சரவையில் இதற்கு முன் நடைபெற்ற மிகப் பெரிய ஊழலை ராசா வெளிப்படுத்தியிருப்பாரா? இவ்வாறு ஜெயலலிதா தனது அறி்க்கையில் கேள்விகளை எழுப்பியுள்ளார்.
கருத்துக்கள்

சரியான கேள்விகள். எனவே, இவ்வாறெல்லாம் ஊழலைப்பற்றிக் கேள்வி எழுப்புவதாலேயே செயா ஊழலற்ற தூய்மையாளராக ஆகிவிட முடியாது. (ஆகா என்ன அருமையான நாடு! அறிக்கைகள் மூலமே நாட்டை வழி நடத்தும் ஆளுங்கட்சியையும் எதிர்க்கட்சியையும் உடைய அருமையான நாடு எதுவும் உலகில் வேறு உண்டா?) அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
11/3/2009 2:49:00 AM

Yes DMK is corrupt. Now BJP is proved corrupt. JJ is a maha corrupt. She had just escaped from the TANSI case because of corruption in judiciary. The judicial who helped her now facing the charges of land grabbing, encroaching on government land etc. One thief should not escape citing the other thief who escaped? Same thing applies to her as well. What a dirty politicians?

By Chola
11/3/2009 12:08:00 AM

சரியா கேள்விகள், இதற்கு என்ன பதில் அமைச்சர் ஆ.ராசா நாட்டுக்கு இழப்பு ஏற்படுத்திய பல கோடி ரூபாய் ஊழலுக்கு உடந்தையாக உள்ளார் மக்கள் கேள்வி கேட்கணும். murugiah dubai

By murugiah
11/2/2009 11:17:00 PM

correct question madam

By sivasubramanian.s
11/2/2009 9:40:00 PM

"Kathir dubai" pondra aatkalal thaan thamizhagam innum seerazhikirathu. Onraiye puliyam kombaai pidippathai vittu vittu pahutharivu paesi paesi makkalai muttal aakkum party ethu endru yosikka vendum. Karuna srilankan makkalukkaga 12 crore othukki irukkirar. etharkaga? paavathai kazhuva alla.. paavathai maraikka. antha paavathai avanal eppozhuthum kazhuva mudiyathu. Vittal ilankai thamizharkalukkm ilavasa t.v. kuduppan... oru roobaikku oru kilo arisi kuduppan.. athai sappittu vittu sappittu vittu thoongungal..

By unnai pol oruvan
11/2/2009 9:22:00 PM

uNmai. Anyone can point out any major scams in her last tenure? 92-96 was a learning curve for her. Anyone can challenge that Karuana hasn't done any scam? He is not caught yet. That's it. He is the cunning saakkadai panni (tamil) of tamilnadu. If you live in tamilnadu you can see the difference in administration between Jaya and Karuna. There is no safety in this city. Even lawyers and judges beaten by police - by the order of who?

By unnai pol oruvan
11/2/2009 9:15:00 PM

We are commenting on JJ and forgetting about karuna&co's corruption. At the moment, DMK is the biggest corrupted party in India. I think we need to talk about spectrum here.

By Indian
11/2/2009 7:58:00 PM

தாயே இதெல்லாம் நீங்கள் கேட்க கூடாது நீங்கள் செய்த ஊழலுக்கு எப்படி எல்லாம் நீதியை ஏமாற்ற முடியுமோ அதை எல்லாம் செய்து தப்பித்து கொண்டு வருகிறீர்.நீங்கள் போய் இதை பேச கூடாது நீங்கள் எப்படி எஸ்டேட் எஸ்டேட் ஆக வாங்கி போட்டீர்கள் என்று என்றைகாவது சொன்னதுண்டா இல்லையே அதனால் நீங்கள் பேசக்கூடாது.மக்களாகிய நாங்கள் தான் கேட்கணும்.

By kathir dubai
11/2/2009 7:48:00 PM

Don't forget what u r done when you was cm oolal Maha Rani

By ad
11/2/2009 7:27:00 PM

Amma Nee than India win oolal Maha Rani Maranthiteengal

By arasu
11/2/2009 7:24:00 PM

சரியா கேள்விகள், இதற்கு என்ன பதில்?

By pichai
11/2/2009 4:52:00 PM

The statement of Ms.Jeyalalitha is acceptable one.

By M.Natrayan, Guziliamparai
11/2/2009 4:41:00 PM

There are some DMK people here, they always support karu&co's corruption. They just don't care about country. People should change instead of just blindly following this corrupt leaders.

By chandni
11/2/2009 4:00:00 PM

Tamil naatin kulavilakka putum amma ungal pothani. please better sell out your corruption property Koda estate first.

By kumar J
11/2/2009 3:41:00 PM

MS JJ madam your comment absolutely correct. we will welcome your comment. by Indian

By Karan
11/2/2009 3:30:00 PM

Mr. Raja, please accept this irrugality and give your correct explanations if any.

By esspee
11/2/2009 3:07:00 PM

ஒரு தவறை வைத்து மற்றொரு தவறை நியாயப்படுத்த முடியாது. ஒரு கொலையாளி தான் சிக்கியவுடன், தன்னைப் போன்ற வேறொரு கொலைகாரன் சிக்காமல் தப்பி ஓடிவிட்டான் Mothathil evargal ellorum thamiz makkalai kolai saiyum mega kolaiyaligal....enenral kanimozi poi rajapatche vidam parisu porul vangalam?????

By Thamizan
11/2/2009 1:23:00 PM

OK JJ THANKS FOR YOUR KIND INFORMATION AND WE TAKE ACTION MK

By mehroze
11/2/2009 12:59:00 PM

this is old statement vijayakanth already told like this statement so waste ur statement and u time.

By Mohamed Kayal
11/2/2009 11:55:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக