வெள்ளி, 6 நவம்பர், 2009

அகதி முகாம்களில் உள்ளவர்கள் வீடு திரும்ப நடவடிக்கை: அமெரிக்க எம்.பி.க்கள் வலியுறுத்தல்



வாஷிங்டன், நவ. 5: முகாம்களில் வாழும் மக்களை அவர்களது வீடுகளுக்கு அனுப்பும் நடவடிக்கையை விரைவாக மேற்கொள்ளுமாறு இலங்கை அரசை அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது. அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள் 32 பேர் இது குறித்த தீர்மானத்தை புதன்கிழமை நிறைவேற்றியது. இலங்கையில் போர் காரணமாக புலம்பெயர்ந்த மக்கள் பாதுகாப்பாக தங்களது வீடுகளுக்குத் திரும்ப உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களது மறுவாழ்வுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும். அதேநேரம் அவர்கள் வீடுகளில் குடியமர்த்தப்பட்டு தங்களது வாழ்க்கையைத் தொடர வழி ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிற தீர்மானங்கள்: அகதி முகாம்களுக்குச் செல்ல சர்வதேச தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்களை அனுமதித்து மறுவாழ்வுப் பணியில் இவர்களையும் ஈடுபடுத்த வேண்டும். இலங்கையில் தமிழர் வாழும் பகுதியில் அமைதி நிலவுவதை அரசு உறுதி செய்யும் வரை தமிழர்கள் பொறுமையுடன் இருக்க வேண்டும் என்றும் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துக்கள்

அமெரிக்கா சென்ற முன்னாள் கொலைத்தளபதி முகாம்களில் ஆயிரக்கணக்கில் விடுதலைப் புலிகள் இருப்பதாகவும் அவர்கள் அனைவரையும் கொன்றொழித்த பின்புதான் அமைதி திரும்பும் என்றும் அறிவித்துள்ளான். விடுதலைப் புலி என்னும் போர்வையில் பல்லாயிரக்கணக்கான தமிழர்களை மீண்டும் அழிக்கப் போவதாகப் பறைசாற்றியதைக்கேட்டும் தமிழர்கள் பொறுமையுடன் இருக்க வேண்டும் என்று எப்படித் தீர்மானம் போட மனம் வந்தது. உன் தன்னலத்திற்காகப்பிற நாடுகள் மீது அவதூறு கூறிப் படையெடுக்கும் அமெரிக்காவே சிங்களத்தின் மீது படையெடுத்து தமிழர்களை விடுவித்துத் தமிழர் தாயகத்தை அமைத்து உன் கடந்த காலக் கரிசுகளுக்கு (பாவங்களுக்கு)க் கழுவாய் (பரிகாரம்) தேடிக் கொள்! இதுவே உனது தலையாய பணியாகும். வெற்ற அறிக்கைகள் எல்லாம் வீண் நாடகங்களே! சிங்களத்தைச் சீனாவின் பக்கம் இருந்து திருப்பி உன் பக்கம் மாற்றுவதற்கான நாடகமே!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
11/6/2009 2:40:00 AM

அமைதிக்கு அரசு உறுதி செய்யும் வரை தமிழர்கள் பொறுமையுடன் இருக்க வேண்டுமாம்! அனலில் துடித்துக் கொண்டிருப்பவர்கள் மீள வேண்டும் என்று பதைபதைப்பதை எவ்வாறு பொறுமையின்மை என்று கருதுகிறார்கள்? கொத்தடிமை வதை முகாம்களில் உள்ளோர் எண்ணிக்கை நாளும் குறைத்துக் கூறப்படுவதில் இருந்தே பலர் இல்லாமல் ஆக்கப்படுவதைப் புரிந்து கொள்ளலாம். அடிமைகள் சினந்து பயன் இல்லைதான். ஆனால் வெளியே உள்ள உற்றார் உறவினர் நண்பர்கள் இன உணர்வினர் அவர்கள் உடனே தத்தம் வாழ்விடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பதை எவ்வாறு பொறுமையின்மையாகக் கருதுகிறார்கள்? அமெரிக்கா சென்ற முன்னாள் கொலைத்தளபதி முகாம்களில் ஆயிரக்கணக்கில் விடுதலைப் புலிகள் இருப்பதாகவும் அவர்கள் அனைவரையும் கொன்றொழித்த பின்புதான் அமைதி திரும்பும் என்றும் அறிவித்துள்ளான். விடுதலைப் புலி என்னும் போர்வையில் பல்லாயிரக்கணக்கான தமிழர்களை மீண்டும் அழிக்கப் போவதாகப் பறைசாற்றியதைக்கேட்டும் தமிழர்கள் பொறுமையுடன் இருக்க வேண்டும் என்று எப்படித் தீர்மானம் போட மனம் வந்தது.

By Ilakkuvanar Thiruvalluvan
11/6/2009 2:38:00 AM

வரவேற்கப்படவேண்டிய முயற்சி. முதலில் அகதிமுகாமிலுள்ள அனைவரும் தமது வீடுகளிற்குச்செல்ல வேண்டும். அங்கு அவர்கள் வாழ்க்கையைத் தொடங்க தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட வேண்டும். இதனை உலக நாடுகளும், குறிப்பாக இந்தியா உறுதி செய்ய வேண்டும். அதன்பின்பு தமிழர்களிற்கு நிரந்தரமான, அரசியல் தீர்வொன்று வழங்கப்படவேண்டும்.

By Ravi
11/6/2009 12:55:00 AM

America's so much effort and the voters for the resolution are very much appreciated. Their philanthrophy is greatly out-weighed neighbouring Asian countries. (I think America was the greatest donor for Tsunami disaster recovery)

By keeran
11/5/2009 8:50:00 PM

அமெரிக்கன் எதாவது ஒரு வகையில இலங்கை சிங்கள நாய்களை உதைப்பானேயானால், காஸ்மீரை அமெரிக்காவுக்கு எழுதி வைக்கிறேன்.

By Board Director - India
11/5/2009 7:58:00 PM

India is agaist the humanity. India is against the human rights. India maintain slavary within India. India has no freedom of speech. Indian never respect United Nations charter of rights. India has NAZIs type of Government. Sorry for Indian ordinary people who has no moral and ethics knowledge that bared by the brians and some north Indians.

By Cusman
11/5/2009 7:11:00 PM

IT IS TRUE NEWS! WASHINGTON (AFP) – The US House of Representatives urged Sri Lanka's government Wednesday to guarantee the safety and quick release of some 300,000 Tamils and other war-displaced people currently held in camps. By an overwhelming 421-1 vote, lawmakers approved a non-binding resolution that calls on the authorities in Colombo to help the populations of widely condemned, tightly guarded camps return to their homes. The measure urges Sri Lanka's government to turn over the operation of the camps to civilians, and allow day-to-day access to the camps for the Red Cross, non-governmental groups, and others who care for internally displaced people. It also calls on the government to allow an independent assessment of charges of large numbers of deaths, rampant disease, poor sanitation and poor health care in the camps and a plan to remedy the issues. The proposal also asks the government to establish "reasonable conditions" to allow non-Sri-Lanka agencies access

By Ravi-KL
11/5/2009 7:02:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக