திங்கள், 2 நவம்பர், 2009

தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் இடையே உறவை முறிக்க காவல்துறை முயற்சி? - திருமாவளவன் அறிக்கை



சென்னை, அக். 31: தி.மு.க.வுக்கும் விடுதலைச் சிறுத்தைகளுக்கும் இடையேயான நல்லுறவு பாதிக்கும் வகையில் காவல்துறையின் போக்கு உள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை அசோக் நகர் நூறடி சாலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகம் இயங்கி வந்தது. இந்த நிலையில், உயர் நீதிமன்ற தீர்ப்பு காரணமாக அரசுக்கும், காவல்துறைக்கும் நெருக்கடி ஏற்படாத வகையில் தலைமை அலுவலகத்தை காலி செய்து நிலத்தை காவல்துறையிடம் ஒப்படைத்தோம். அந்த நிலத்தை எதிர்தரப்பிடம் ஒப்படைக்கும்படி தீர்ப்பில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஏனெனில், இந்த நில உரிமை தொடர்பான வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், எதிர்தரப்புக்கு ஆதரவாக காவல்துறையினரே சனிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் அந்த நிலத்தை ஆக்கிரமித்து எங்களது கட்டடங்களை இடித்துள்ளனர். உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள உரிமை வழக்கு முடியும் வரையில் அந்த நிலத்தை எதிர்தரப்பிடம் ஒப்படைக்கக் கூடாது என்பதே விடுதலைச் சிறுத்தைகளின் கருத்தாகும். காவல்துறையினரின் நடவடிக்கைகளை எதிர்த்த விடுதலைச் சிறுத்தை கட்சியினர் மீது போலீஸôர் தடியடி நடத்தியுள்ளனர். காவல்துறையினரை ஆயுதங்களால் தாக்க வந்ததாக 15 பேர் மீது பொய் வழக்கும் போடப்பட்டுள்ளது. இதைக் கண்டிக்கிற வகையில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்திய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தை சட்டப்படி எதிர்கொள்ள உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதால் விடுதலைச் சிறுத்தைகள் மேலும் போராட்டங்களில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்த நிலப் பிரச்னையில் மட்டுமின்றி, கடந்த சில மாதங்களில் மட்டும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டவர்கள் குண்டர் தடுப்பு மற்றும் தேசிய பாதுகாப்புச் சட்டங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் மரக்காணம் அருகே தலித் இளைஞர் படுகொலையிலும், தலித் மக்கள் மீதே பொய் வழக்குப் போடப்பட்டுள்ளது. தமிழக காவல்துறையின் இந்தப் போக்கு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும், தி.மு.க.வுக்கும் இடையிலான நல்லுறவை பாதிப்படையச் செய்யும் சதி முயற்சியோ என்ற ஐயத்தைப் பரவலாக ஏற்படுத்தியுள்ளது என்று அந்த அறிக்கையில் திருமாவளவன் கூறியுள்ளார்.
கருத்துக்கள்

முதல்வரின் கட்டுப்பாட்டிலுள்ள காவல்துறை அவருக்குத் தெரியாமல் செயல்படுகிறது என்றால அதுவும் முதல்வருக்கு எதிரான குற்றச்சாட்டுதானே? முதல்வர் சதி செய்கிறார் எனச் சொல்ல அஞ்சிக் காவல்துறை மீது பழி போடுகிறாரா? மகிழ்ச்சி அடையுங்கள்.இரண்டகம் நிறைந்த கூட்டணியை விட்டு வெளியேற இயலாமைக்கு நல்ல தீர்வு கிடைத்து விடடது. அவர்களே வெளியேற்றியதும் எந்தக் கட்டுப்பாடின்றியும் உரிமைக் குரலை எழுப்பலாமே! விரைவில் சதித்திட்டம் நிறைவேற வாழ்த்தும் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
11/2/2009 3:18:00 AM

dear mr .thiruma entha oulakil kuniya kuniya kuthupavarkal kuduthal .so dont thing about any dogs voice so pls continue your political voice well done your jobs. by tamil parayan

By tamil parayan
11/1/2009 10:50:00 PM

He is directionless.He got congress vote and won but he says he is aligned with only DMK.Let us remind him that the Police Department comes under Chief Minister.May be he can't raise his voice against Kalaignar as he would lose his MP post.

By king
11/1/2009 7:23:00 PM

When Mr.Moopanar brought him to join the political stream, I thought he would be a respected Dalit leader and would help the Dalit people to get good education and better life. I just like to from Mr.Thiruma, For the past 10 years what the steps you made to increase literacy among the dalit people? Please note, his double standard also understood by the Srilankan Tamils. Just for 1 MP seat, he is begging Mr.Karuna now a days. Shame on Him!!

By iniya tamizhan
11/1/2009 6:56:00 PM

சுரண்டப்படும் வரை எதைத் தின்று எங்கே பார்த்துக் கொண்டிருந்தது இந்த பிற்பட்ட சமூகம்? ஏமாந்தோம் என்று சொல்ல வெட்கப்படாமல் அதைச் சொல்லிப் பிச்சை எடுப்பது எதைக்காட்டுகிறது? இன்னும் தன் நிலைமையின் அடிப்படைக் காரணத்தை உணராமல் எவனோ ஒருவன் ரௌடித்தனம் செய்ததால் அவனை தலைவனாக ஒப்புக்கொள்வது எவ்வளவு முட்டாள்தனம்? படிப்பையும் வேலையையும் கேட்காமல் சாராயமும் ஓட்டுக்கு பணமும் கேட்பது ஏன்? ஏமாந்துவிட்டதாக சொல்லியே இப்போது ஏமாற்றிக்கொண்டு அலைவது அவர்களது பிறப்புரிமை போலும்.

By UNMAI THAMIZHAN
11/1/2009 4:10:00 PM

உழைப்பு மறுத்து தின்று கொழுத்தது...பார்ப்பன பண்டாரக்கூட்டம்தான்...உழைப்பை சுரண்டப்பட்டவர்கள்தான் தாழ்த்தப்பட்டவர்கள்..

By மகிழ்நன்
11/1/2009 2:20:00 PM

Mr.Thiruma you and your party never did good for people instead creating problem like caste, etc., Parties like you and jump ramdoss should be thrown from the politics. Don't act do good things for the people. Jay Hind

By Ashok Jayaraman
11/1/2009 12:13:00 PM

dear Thirumavalavan ayia, i am respect you for triggering tamil cause among tamils. Now we expect you should take initative to trigger our people to unite against singala plus sonia central govt. aliance. please go for another one fasting protection. we will support you

By ravi varman
11/1/2009 11:38:00 AM

உழைப்பு மறுத்து சாராயத்துக்கு அடிமைகளாகி சமூகத்தில் பின் தங்கிவிட்ட ஒரு சாதியை அவர்களது அறியாமையை சாதகமாக்கி தலைவனாகிவிட்டவர் இவர். அந்த சாதியினர் படிக்கவோ தொழில் செய்யவோ எந்த முயற்சியும் செய்யாமல் அவர்களுக்கு அரசில் என்னென்ன ஓ.சி.யில் கிடைக்க செய்து அதன் மூலம் ஓட்டு பொறுக்கலாம் என்பதே அவர் கணக்கு. ஓட்டுக்களை வைத்து ரௌடித்தனம் செய்து சொத்து சேர்த்து அதை வைத்து மேலும் ஓட்டு பொறுக்கலாம் என்பது அவர் கொள்கை. கட்சிக்கு சொந்த அலுவலகம் கட்ட கம்யூனிஸ்டுகளுக்கு எத்தனை ஆண்டுகள் ஆகின என்பதை அவர் தெரிந்து கொள்ள வேண்டும்.

By sbala
11/1/2009 11:24:00 AM

Hi Sinkala DO in tamil of TAMIL, get of of this page

By Suresh, CA, USA
11/1/2009 9:49:00 AM

THIRUMA NEE VERUM MAAVU. rAJAPAKSE KAIKOOLI. yOU ARE A GONDA. INSTEAD OF BUYING PROPERTY FOR PARTY, YOU ARE FORCIBLY OCUPYING OTHER PEOPLE'S PROPERTY. yOU THINK YOU ARE LIVING 1000 YEARS BACK IN HISTORY.COME AND LIVE IN THE PRESENT WORLD.

By Tamil
11/1/2009 8:40:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக