புதன், 4 நவம்பர், 2009

புழல் அகதிகள் முகாமில் ஸ்டாலின்



சென்னை அருகே புழல்-காவாங்கரை இலங்கை அகதிகள் முகாமை நேரில் பார்வையிட்டு குறைகள் கேட்டறிகிறார் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின். உடன் (வலமிருந்து) மீன்வளத்து
அம்பத்தூர், நவ.3: சென்னை அருகே புழல்-காவாங்கரை இலங்கை அகதிகள் முகாமுக்கு துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார். முகாமில் உள்ள வீடுகளுக்குச் சென்று பார்வையிட்டு அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். "புழல் மத்திய சிறைச்சாலையிலிருந்து வெளியேறும் கழிவுநீர் முகாமை சுற்றித் தேங்கியுள்ளதால் துர்நாற்றம் வீசுவதாகவும், கொசுக்கள் அதிகமாகி நோய்கள் பரவுவதாகவும்' அவரிடம் புகார் கூறப்பட்டதை அடுத்து அந்த இடத்தை நேரில் பார்வையிட்டு, நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். பின்னர் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி: தமிழ்நாட்டில் 26 மாவட்டங்களில் 115 முகாம்கள் அமைக்கப்பட்டு 19,439 குடும்பங்களைச் சேர்ந்த 73,241 இலங்கை அகதிகளுக்கு உணவுப் பொருள்கள், கல்வி உதவி ஆகியன செய்யப்பட்டு வருகின்றன. அகதிகளின் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டத்துக்கு ரூ.16 கோடியே 18 லட்சம் மதிப்பிலான திட்டத்தை மத்திய அரசிடம் தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது. ஒவ்வொரு முகாம்களிலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரடியாகச் சென்று குறைகளை கேட்டறிந்து சரிசெய்வர். அதன் முதற்கட்டமாக புழல் முகாமில் உள்ளவர்களுக்கு பாதுகாப்பான வீடு, அரசு ஆவணங்கள் பெறுவது, உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றி வைக்கப்படும் என்றார் ஸ்டாலின்.ஏமாற்றத்தில்கும்மிடிப்பூண்டி அகதிகள் கும்மிடிப்பூண்டியில் உள்ள அகதிகள் முகாமுக்கு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பழனிக்குமார் உட்பட அரசு அதிகாரிகள் வருவதாக வந்த தகவலை தொடர்ந்து, முகாமை சேர்ந்தவர்கள் தங்கள் கோரிக்கை மனுவுடன் செவ்வாய்க்கிழமை நெடுநேரம் காத்திருந்தனர். இந்நிலையில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் புழல் இலங்கை அகதிகள் முகாமை பார்வையிடச் சென்றதால் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் உட்பட அதிகாரிகள் அனைவரும் புழல் அகதிகள் முகாமுக்கு சென்றுவிட்டனர். இதனால் தங்கள் கோரிக்கை மனுக்களுடன் கும்மிடிப்பூண்டி அகதிகள் காத்திருந்து ஏமாற்றமடைந்தனர்.
கருத்துக்கள்

தேர்தல் வரும் பின்னே இது போல் செய்தி வரும் முன்னே என்று மட்டும் எண்ண முடியவில்லை. ஏதோ புதுமாப்பிள்ளை வீட்டிற்குப் போவதுபோல் திடீரென்று உதவுவதாக அறிவிப்பதும் பார்வையிடுவதும் ஏதோ பின்னணித் திட்டத்திற்கு முன்னறிவிப்பு என்று எண்ண வைக்கின்றது. காங்கிரசு - சிங்கள அரசுகளின் சதி வலையில் ஏதேனும் நாடகம் அரங்கேறப் போகிறது. இவர்களை விரட்டவா அல்லது உரிமையுடன் வாழவைக்கப்பட வேண்டிய ஈழத்தமிழர்களை இங்கு வரவழைக்கவா என்று தெரியவில்லை. ஆட்சிகள் மாறினாலும் அவலக் காட்சிகள் மாறாச் சூழலில் இப்படித்தான் எண்ண முடிகிறது. சிந்தனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
11/4/2009 3:17:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக