வியாழன், 5 நவம்பர், 2009

இங்குள்ள தமிழர்கள் நோபல் பரிசு பெற்றால்
இன்னும் பெருமிதம்: ஸ்டாலின்



சென்னை, நவ.4- இங்குள்ள தமிழர்கள் தாய்நாட்டிலேயே ஆய்வு மேற்கொண்டு அவர்களின் கண்டுபிடிப்பு மக்களின் துயர் துடைப்பதற்காக என்றைக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறதோ அன்றுதான் நாம் மிகப்பெரிய அளவில் பெருமிதம் கொள்ள முடியும் என்று துணை முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழ்நாடு திறந்நிலை பல்கலைக்கழகத்தின் நான்காவது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு பேசுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பட்டமளிப்பு விழாவில் ஸ்டாலின் பேசியதாவது:

இங்கு படிக்கும் அனைவரும் தமிழின் மூலம் கற்கும் வகையில் அல்லது குறைந்தபட்சம் தமிழை ஒரு கட்டாயப் பாடமாக படிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தாய்மொழிக் கல்வியே மாணவர்களின் சிந்திக்கும் திறனைப் பெருக்கும்.

ஜப்பான், ரஷ்யா போன்ற நாடுகள் வேகமாக முன்னேறியதற்கு அடிப்படை காரணமே அங்கு பின்பற்றப்பட்ட தாய்மொழிக் கல்வி தான் என்பதை நாம் உணர வேண்டும். எனவே, தாய்மொழிக் கல்வியை அனைவரும் கற்றுத் தேர்ந்திட இப்பல்கலைக்கழகம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

நோபல் பரிசுக்கான ஆய்வுகள் இங்கேயே நடைபெறும் வகையில் பல்கலைக்கழகங்கள் தயாராக வேண்டும்.

இங்கு பிறந்த தமிழர்கள் தாய்நாட்டிலேயே தங்களது ஆய்வை மேற்கொண்டு அவர்களின் கண்டுபிடிப்பு மக்களின் துயர் துடைக்கப் பயன்பட்டதற்காக என்றைக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறதோ அன்றுதான் நாம் மிகப்பெரிய அளவில் பெருமிதம் கொள்ள முடியும். அந்த இலக்கை அடைய ஒவ்வொரு பல்கலைக்கழகமும் தம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று இந்த விழா மூலம் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு ஸ்டாலின் தனது உரையில் குறிப்பிட்டார்.

கருத்துக்கள்

தமிழிலேயே மழலைக் கல்வி முதல் ஆய்வுக் கல்வி வரை படிக்கும் வாய்ப்பை உருவாக்கினால் சிந்தனை ஆற்றல் வளர்ந்து அறிவியலறிஞர்களும் புதியன புனைவோரும் பெருமளவில் உருவாகுவர். அப்பொழுது நோபல் பரிசு முதலான உயர் பரிசுகள் தமிழ்நாட்டவரைத் தேடி வரும். எனவே அதறகான வாய்ப்பை உடனே உருவாக்குக! கல்வியைக் கொள்ளைக்காரர்களிடம் இருந்து பிடுங்கி அன்புடன்விரும்பிய கல்வியைக் கற்கும் வாய்ப்பை அனைவருக்கும் நல்கிடுக!அறிஞர்கள் பெருகுவர். உலகப் பரிசுகள் நம்‌மைத் ‌தேடி ஓடி வரும். இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
11/5/2009 2:16:00 AM

Hai balu i don’t know who are you but what do you know about our Indian scientists, you know lal ji, bhramachari, ramachandran, amritha, balasubramaniayan, mathavan nair.... please stop to under estimate people with out knowing they and their contribution to the science....

By Muhil Vannan Seralathan
11/5/2009 12:34:00 AM

It is really good to hear and good encouragement for research scholars like us doing research in India; we know how much we are working for country.

By Muhil Vannan Seralathan
11/5/2009 12:30:00 AM

Your family, especially your appan should be given Ante-Nobel for his bigotry, etappanism, and annihilating his own race for power and money. Shut your mouth, no one is going to buy your pretended patriotism for Thamizh, except the gullible in Thamizh Nadu.

By Raja
11/5/2009 12:00:00 AM

ஸ்டாலின் தமிழ் இன உணர்வு கண்டு மெய்சிலிர்த்து விட்டேன்

By salvi
11/4/2009 10:22:00 PM

இங்கு யாராவது(இந்து) ஏதாவது கண்டுபிடித்தாள், அவர்மீது சேக்குளரிச செருப்பு விலும். அந்த ஆதிக்க சக்திகள் மீது பகுத்தறிவு தமிழ் அரசு அனைத்து நவடிக்ககளும் எடுக்கும் என்பதை யாரேனும் மறந்துவிட்டார்களா? இதனால்தான் இந்தியா, ஒரு முஸ்லிம் மதத்தினரை, அதுவும் பகுத்தறிவு நாட்டிலிருந்து(தமிழ் மாநிலம்) முன்னிறுத்தியது. அதுவும் இந்தியாவீற்குள் மட்டுமின்றி உலகளாவிய வரவேற்ப்பை பெற்றது. அப்படியே பகுத்தறிவு மற்றும் சேக்குளதரிச பாசறைகள் அடக்கி வாசித்தாலும், மதவாத நாடுகலான அந்நியர்காள் ஆக்கிரமித்துள்ள நோபல் பரிசு இவர்களிக்கு கிடைக்காது என்பதையும் யாரும் மறந்து விடவில்லை.

By saravanan
11/4/2009 9:38:00 PM

TN CM is missed it.Really if he is worked on Jan -May 2009 he might have got this.Now there is no way.

By Rangiem N Annamalai
11/4/2009 8:53:00 PM

This is not the way to improve Tamil 'Scholastically'. Even the latest 'Nobel' winner has asked not to quantify science through 'Nobel Prize', as he knows it is a price given to 'Westerners'. Another important thing is by encouraging 'Tamil' there is going to be no use. Rather than that 'Stalin' would do well to ensure all 'Corporation' Schools are made 'English Medium' with 'Tamil' as a Second Language. This would ensure that 'Matriculation' schools would not be able to 'Rob' Tamils and Tamil Children can become 'World Class' professionals and scholars. Will Stalin Heed?

By Babu
11/4/2009 8:35:00 PM

நோபல் பரிசு உன் வப்பாவுக்கு கேடு தமிழ்உணர்வு கொனலங்கருக்கு

By usanthan
11/4/2009 8:27:00 PM

I fully agree wth Mr. Stalin. We all indians should use own languages for all purpose. During recent visit to China, I found everyone speaks only in their own chinese language and thier country has devloped like anything interms of structure and industries, decipline etc. But, in India if someone speaks in English gets more respect than their ow language. This is really pathedic situation. By Anwar Khan

By Anwar
11/4/2009 8:05:00 PM

if நோபல் பரிசு under control of Indian or tamil nadu gov all the cini fields hero and all the minister honored by நோபல் பரிசு....

By purush
11/4/2009 7:53:00 PM

>..Yes ,I am thrilled by the PASSION FOR TAMILS AND TAMIL LANGUAGE OF Hon.Stalin ! Only exception is THE PATHETIC POSITION OF TAMILS IN SRILANKA! Even Jews hadn't experienced under Hitler ! When a leader dies ,we say LONG LIVE THE LEADER 1 Like thsi now we can say LONG LIVE SRILANKAN TAMILS

By R .Krishanmurthy
11/4/2009 7:30:00 PM

Many tamilians -best in their Intelligence have already left T.N.and India,Cotribute to the growth of the places where they are.This will only contniue.The very worst will alone stay here.Can they get nobel prize?

By balu
11/4/2009 4:08:00 PM

ஸ்டாலின் தமிழ் இன உணர்வு கண்டு மெய்சிலிர்த்து விட்டேன்

By Anand
11/4/2009 3:25:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக