சனி, 7 நவம்பர், 2009

இலங்கைப் போரில் மனித உரிமை மீறல்: விசாரிக்க குழு நியமனம்

கொழும்பு, நவ. 6: இலங்கையில் போரின் போது மனித உரிமை மீறப்பட்டதான குற்றச்சாட்டை விசாரிக்க 5 பேர் கொண்ட குழுவை அந்நாட்டு அதிபர் மகிந்தா ராஜபட்ச நியமித்துள்ளார். நீதித் துறை வல்லுநர் டி.எஸ். விஜயசிங்க இந்த விசாரணைக் குழுவுக்கு தலைவராக இருப்பார் என்று இலங்கை பேரிடர் மேலாண்மை மற்றும் மனித உரிமைகள் துறை அமைச்சர் மகிந்தா சமரசிங்க கொழும்பில் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
கருத்துக்கள்

அ ஆட்சி செய்யும் பொழுது ஆ குற்றவாளி; ஆ ஆட்சி செய்யும் பொழுது அ குற்றவாளி என்பது எழுதப்படாத உலக வரலாறு. அவ்வாறிருக்க கொலைகாரனிடம் விசாரணைப் பொறுப்பை ஒப்படைத்தால் பாதிக்கப்பட்டவர்களைத்தானே குற்றவாளியாகக் காட்டுவான். ஏதோ அந்த அரசிற்குத் தெரியாமல் ஏதோ நடந்து விட்டது போன்று விசாரணை மேற்கொள்ளச் சொல்லும் வேடிக்கையை என்னென்பது? குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டிய இனப்படுகொலைக்காரனை நீதிபதியாக்கும் தந்திரத்தை அமெரிக்கா செய்துள்ளது. என்னதான் நடக்கும் நடக்கட்டுமே! இருட்டினில் நீதி மறையட்டுமே! தன்னாலே வெளிவரும் மயங்காதே!ஒரு தலைவர் இருக்கிறார் கலங்காதே என அமைதியாக வேடிக்கை பார்க்க வேண்டியதுதான்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
11/7/2009 3:31:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக