அரக்கோணம், அக்.3: அதிமுகவில் இனி இளைஞர்களுக்கே பொறுப்புகள் அளிக்கப்பட உள்ளன என எம்பி பாலகங்கா கூறினார். அரக்கோணத்தில் நடைபெற்ற நகர ஜெயலலிதா பேரவை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசியது: எம்ஜிஆர் அதிமுகவை ஆரம்பித்த போது அவருடன் அன்று ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இருந்தனர்; அவரால் எளிதாக ஆட்சியை கைப்பற்ற முடிந்தது. அதனால்தான் இளைஞர்களுக்காக ஜெயலலிதா பேரவையைத் தொடர்ந்து நடத்தி வருகிறார். வரும் 2011-ம் ஆண்டு தேர்தலில் ஜெயலலிதா தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமையும் என்றார் அவர். வேலூர் மாவட்டச் செயலர் எல்கேஎம்பி வாசு தலைமை தாங்கினார். அரக்கோணம் நகரச் செயலர் துரை.குப்புசாமி, நகர ஜெ.பேரவைச் செயலர் ஆர்.ஆர்.பாபு, முன்னாள் எம்.எல்.ஏக்கள் பவானி கருணாகரன், சந்திரசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துக்கள்
திமுக வில் மட்டும் என்ன இளைஞர் அழகிரி, இளைஞர் தாலின், இளைஞர் தயாநிதி, இளைஞர் கனிமொழி என இளைஞர் பட்டாளத்திற்குப் பொறுப்புகளும் பதவிகளும் தராமலா இருக்கிறார்கள்! இளைஞரோ முதியவரோ கொத்தடிமையாக இராமல் இன உணர்வுடன் உள்ளவர்களுக்கு வாய்ப்பளித்தால் கட்சி வளரும். ஆனால் தலைமைக்கே அந்த உணர்வு இல்லாத பொழுது பிறருக்கு அவ்வாறு அந்த உணர்வு வெளிப்படும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
11/5/2009 2:47:00 AM
11/5/2009 2:47:00 AM
"அதிமுகவில் இனி இளைஞர்களுக்கே பொறுப்புகள் அளிக்கப்பட உள்ளன என எம்பி பாலகங்கா கூறினார்" - Appo Balaganga, neenga enna youngster'a??
By Jeeva Sridhar
11/4/2009 9:57:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *11/4/2009 9:57:00 PM