வெள்ளி, 6 நவம்பர், 2009

போலீஸ் - வழக்கறிஞர்கள் மோதல்: முதல்வரே முழுப் பொறுப்பு- ஜெயலலிதா



சென்னை, நவ. 5: ""உயர் நீதிமன்ற வளாகத்துக்குள் போலீஸôர் - வழக்கறிஞர்கள் இடையே நிகழ்ந்த மோதல் சம்பவத்துக்கு முதல்வர் கருணாநிதியே முழுப் பொறுப்பேற்க வேண்டும்'' என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: ""சென்னை உயர் நீதிமன்ற வளாகத்துக்குள் நிகழ்ந்த காவல் துறையினர் - வழக்கறிஞர்கள் மோதல் சம்பவத்தை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற அமர்வு, "நீதிபதி, வழக்கறிஞர்கள், நீதிமன்றப் பணியாளர்கள் மற்றும் வழக்குகளுக்காக நீதிமன்றங்களுக்கு வந்திருந்தவர்கள்' என அனைவரையும் படுகாயப்படுத்தியதோடு மட்டுமல்லாது, அங்குள்ள பொருள்களுக்கு பெருத்த சேதத்தை உண்டாக்கியது உள்ளிட்ட பல்வேறு அவமதிப்பு நடவடிக்கைகளுக்கு சென்னை காவல் துறையின் உயர் அதிகாரிகள் தான் பொறுப்பு' என குறிப்பிட்டுள்ளது. 4 காவல் துறை உயர் அதிகாரிகளின் பெயர்களைக் குறிப்பிட்டு அவர்களை தாற்காலிக பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று கூறியதோடு மட்டுமல்லாது, சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு பிறப்பித்து ஒரு வாரத்துக்கு மேல் ஆகியும், நீதிமன்ற உத்தரவுகள் நிறைவேற்றப்பட்டதாக தெரியவில்லை. இதற்கு நேர்மாறாக காவல் துறையினரை காப்பாற்றும் விதத்தில் நீண்ட அறிக்கையை வெளியிட்டிருக்கிறார் முதல்வர் கருணாநிதி. "அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெறும் சில சம்பவங்களை வைத்து, காவல் துறையினரின் பணிக்கு களங்கம் கற்பிக்கக் கூடாது' என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார். முழுப் பொறுப்பு... உயர் நீதிமன்ற வளாக சம்பவத்தில் காவல் துறையின் மூத்த அதிகாரிகளை குற்றவாளிகள் என உயர் நீதிமன்றம் கூறியிருந்தாலும், இந்த விவகாரம் இத்துடன் முடியப் போவதில்லை என முதல்வர் கருணாநிதிக்கு தெரியும். காவல் துறையின் அத்துமீறல்களுக்கான பொறுப்பு நேரடியாக கருணாநிதியை தான் சென்றடையும். எனவே, நீதிமன்ற உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்க அவர் தயங்குகிறார். தான் எடுக்கவிருக்கும் நடவடிக்கை என்ன என்பதை மக்களுக்கு கருணாநிதி தெரியப்படுத்த வேண்டும். தவறு செய்த அதிகாரிகளை காப்பாற்ற வேண்டும் என்று கருணாநிதி விரும்பினால், சென்னை உயர் நீதிமன்ற வளாகத்துக்குள் நுழைந்து அங்கு உள்ளவர்கள் மீது தாக்குதல் தொடுக்க உத்தரவு வழங்கியது தாம் தான் என நீதிமன்றத்துக்குச் சென்று தைரியமாக சொல்ல வேண்டும். இல்லையென்றால், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையைச் சந்திக்க அவர் தயாராக இருக்க வேண்டும். எப்படிப் பார்த்தாலும், முதல்வர் தான் இந்தச் சம்பவத்துக்கு முழுப் பொறுப்பு ஏற்க வேண்டும்; பதில் சொல்ல வேண்டும் என தனது அறிக்கையில் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள்

மடல்கள் (கடிதங்கள்) மூலமும் அறிக்கைகள் மூலமும் ஆட்சியை நடத்தும் ஆளும்கட்சிக்குப் பொருத்தமான எதிர்க்கட்சி! நா ளொரு அறிக்கை விட்டால் தன் கடமை தீரர்ந்தது என நம்பும் எதிர்க்கட்சித்தலைவி! எதிர்க்கட்சியாக இருந்தால் காவல்துறையின் ஈரல் கெட்டு விட்டடது என்றும் ஆளும் கட்சியின் ஏவல் நாயாகச் செயல்படுகின்றது என்றும் குற்றங்கள் சாட்டுவதும் ஆளும் கட்சியாக இருந்தால் ஏவல்நாயாகப் பயன்படுத்திக் கொண்டு தலையில் வைத்துக் கொண்டாடுவதும் இரு கட்சிகளும் பின்பற்றும் உயரிய கொள்கையாயிற்றே! இருந்தாலும் இந்தச் சலசலப்பிற்கெலலாம் பனங்காட்டு நரி அஞ்சாது. அது தன் கடமையை - காவல்துறையைத் தனக்குச் சாதகமாக வளைக்கும் கடமையை - த் தவறாமல் செய்யும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
11/6/2009 3:07:00 AM

what a daring comment, really she is a powerful woman politician after Indira. Now Mr Karunanidhi should come out with his point of view and prove himself neutral beween lawyers and the police since he is the CM of this state. Jayalalitha has given this stunning statement knowing clearly that this is not in favour of police but she has gone ahead and given a sort of clean chit to lawyers is something strange and look upon this matter seriously. The Police Department should be reformed in such a way that in future no such bad remarks come to them.

By ibrahim, dubai
11/6/2009 2:34:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக