வியாழன், 5 நவம்பர், 2009

இலங்கை அகதி முகாம்கள் நிலை 6-ம் தேதிக்குள்
அரசுக்கு அறிக்கை



வாலாஜாபேட்டை, நவ. 3: இலங்கை அகதிகள் முகாம்களின் நிலை குறித்து அரசுக்கு வரும் 6-ம் தேதிக்குள் அறிக்கை அளிக்கப்படும் என சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். வாலாஜாபேட்டை அடுத்துள்ள பாலாறு அணைகட்டு பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாம் நிலை குறித்து சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன், மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எஸ்.ஜெகத்ரட்சகன், ராணிப்பேட்டை எம்எல்ஏ ஆர்.காந்தி ஆகியோர் செவ்வாய்க்கிழமை ஆய்வு நடத்தினர். முகாமில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் சென்ற அவர்கள், முகாமில் உள்ள அகதிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தனர். இலங்கை அகதிகள் கூறியதாவது: பாலாறு அணைக்கட்டு முகாமில் 260 குடும்பங்களைச் சேர்ந்த 1009 பேர் உள்ளோம். அனைவரையும் இந்தியக் குடிமக்களாக அங்கீகரித்து, நிரந்தரக் குடியுரிமை வழங்க வேண்டும். 150க்கும் மேற்பட்ட மாணவர்களின் கல்வி மேற்படிப்புக்கு வங்கி மூலமோ, நேரடியாகவோ அரசு நிதியுதவி அளிக்க வேண்டும். மேலும், முகாமில் உள்ள வீடுகளின் மேற்கூரை பழுதடைந்து மழைக்காலத்தில் ஒழுகுகிறது. கழிப்பறை வசதிகள் இருந்தும் தண்ணீர் கிடையாது. முகாம் குழந்தைகள் வாலாஜா சென்று படிக்க பள்ளி நேரத்தில் பஸ் வசதி கிடையாது. பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். ஆய்வுக்குப் பிறகு அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறியது: இலங்கை அகதிகள் முகாம் நிலை குறித்து ஆராய அமைச்சரவை கூட்டம் நடத்தப்பட்டு ரூ.12 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்தந்த மாவட்டத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமை நேரில் பார்வையிட்டு 6-ம் தேதிக்குள் அறிக்கை அளிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதையொட்டி அணைக்கட்டு முகாம் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. மற்ற 5 முகாம்களும் புதன்கிழமை ஆய்வு செய்யப்பட்டு, 6-ம் தேதி அரசுக்கு அறிக்கை அனுப்பப்படும் என்றார் அமைச்சர். மாவட்ட வருவாய் அலுவலர் எ.சரவணவேல்ராஜ், ராணிப்பேட்டை கோட்டாட்சியர் சிற்றரசு, வட்டாட்சியர்கள் ரேவதி, கிருபானந்தம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
கருத்துக்கள்

ஏதோ நேற்று தான் இலங்கைத் தமிழர்கள் இங்கு வந்தார்கள். இன்று அறிக்கை அளிக்கிறார்கள். நாளையே அவர்கள் வாழ்வில் தென்றல் வீசும் என்றல்ல! இலங்கைத் தமிழர்களை நாடற்றவர்களாக ஆக்கி ஒரு தலைமுறை கடந்து விட்டது. இனி ஈழத் தமிழர்களையும் நாடற்றவர்களாக ஆக்க வேண்டாவா? இலங்கை முகாமகளில் தேனும் பாலும் கொட்டுகிறது என்றால்தானே அவர்களை இங்கு இழுக்க முடியும். அவர்களை அங்கிருந்து விரட்டச் சிங்களக் கொடுங்கோலரசிற்கு உதவ முடியும்! காங். அரசின் நல்லெண்ணத்தைப பெற முடியும்! உண்மையிலேயே இலங்கைத் தமமிழர்கள மீது பரிவும பற்றும இருந்தால் அவர்களுக்கு வாழ்வுரிமை தாருங்கள். விரும்பிய இடத்தில் விரும்பியவாறு வாழ வாய்ப்பும் வசதியும் ஏற்படுத்தித் தாருங்கள். இங்கிருந்து தங்களின் தாயகத்திற்கு அவர்கள் திரும்புகையில் பிச்சைக்காரர்களாக அல்லாமல் செல்வர்களாகச செல்லட்டும்! ஏதோ இப்பொழுதாவது நாடக அரங்கேற்றத்தின் ஒரு பகுதியால் சிறிது நன்மை கிடைக்கும என்ற மகிழ்ச்சி இருந்தாலும் இலங்கைத் தமிழர்களை நம்முடன் இணைந்து நன்னிலையில் வாழச் செய்வதே அரசின் கடமை என்பதை உணர வேண்டும். உணர்ந்து உரியன செய்வார்களா?

வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
11/5/2009 3:01:00 AM

அறிக்கை வெளியிடப்பட்டது: இலங்கையில் இருந்து வந்த தமிழர்கள் இனிதே வாழ அத்துணை வசதிகளும் தந்து அவர்தம் இன்னல் தடுத்து வந்தாரை வாழவைத்த தமிழகம் எனும் பெயரை என்றும் நிலைபெறச் செய்து தமிழன் என்றும் வீழான் எனும் நிலையைப் பெற்றிடச் செய்திட்ட தமிழினத்தலைவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களுக்கு முகாம்களில் வாழும் நம் உடன் பிறப்புகள் அன்புக் காணிக்கையாக தங்கள் இன்னுயிரையும் தர தயாராக உள்ளார்கள்.

By sbala
11/4/2009 5:39:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக