திங்கள், 2 நவம்பர், 2009

தமிழிசை மூவர் மணிமண்டபம் 9 மாதத்தில் கட்டப்படும்: பரிதி இளம்வழுதி



சென்னை, நவ. 1: நாகை மாவட்டம் சீர்காழியில் அமைக்கப்படவுள்ள தமிழிசை மூவர் மணிமண்டபம் 9 மாதத்தில் கட்டி முடிக்கப்படும் என்று செய்தி விளம்பரத்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி தெரிவித்தார். இதுதொடர்பாக தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: முதல்வர் கருணாநிதி உத்தரவின் பேரில் சீர்காழியில் தமிழிசை மூவர்களான அருணாசல கவிராயர், மாரிமுத்து பிள்ளை, முத்து தாண்டவர் ஆகியோருக்கு மணிமண்டபம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மணிமண்டபம் கட்டுவதற்கான இடம் மற்றும் வரைபடத்தை அமைச்சர் பரிதி இளம்வழுதி ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகையில், ""மணிமண்டபம் 419 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட உள்ளது. 6 முதல் 9 மாதங்களில் கட்டி முடிக்கப்படும். எனவே, மணிமண்டபம் கட்டுவதற்கு திருத்திய மதிப்பீட்டினை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்கள் உடனடியாக அரசுக்கு அனுப்ப வேண்டும்'' என்று உத்தரவிட்டார்.
கருத்துக்கள்

கலைஞர் கடந்த முறை ஆட்சியில் இருந்தபொழுது அறிவித்த திட்டம். அவர் ஆட்சியும் முடிந்து அடுத்தவர் ஆட்சியும் வந்து சென்று மீண்டும் ஆட்சிக்கு வந்து பாதிக்காலத்திற்கு மேல் போனபின்னும் காலத்தாழ்ச்சி இருக்கலாமா? அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
11/2/2009 3:09:00 AM

நான் படையிலே போகும்போதும் பதவியோடு போகவேண்டும் உடன்பிறப்பே. காவேரி காய்ந்தால் எனக்கு என்ன? பெரியாறு போனால் எனக்கு என்ன? தமிழக மீனவன் மடிந்தால் எனக்கென்ன? இலங்கைத்தமிழன் இறந்தால் எனகென்ன? தமிழன் எக்கேடு கேட்டல் எனக்கென்ன? என் மக்கள் (ஸ்டாலின், அழகிரி, கனிமொழி, மாறன்) நன்றாக ச்விச்ஸ் வங்கி கணக்கோடு சுபிட்சமாக இருந்தால் அதுபோதும் எனக்கு. தேர்தல் என்று வந்தி விட்டால், அடித்த பணத்தை அள்ளிவீசி வெற்றிவாகை சூடிவா உடன்பிறப்பே. என் கொள்கை என்னவென்று கோபப்பட்டும் கேட்டிடாதே உடன்பிறப்பே. நான் பாடையிலே போகும்போதும் பதிவோடு போகவேண்டும். தமிழன் எக்கேடு கேட்டால் எனக்கென்ன? நான் பாடையிலே போகும்போதும் பதிவோடு போகவேண்டும் உடன்பிறப்பே

By tamizhargal
11/2/2009 12:37:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக