திங்கள், 2 நவம்பர், 2009

இலங்கைப் போர்: கோத்தபய குறித்து விசாரணை நடத்த அமெரிக்கா முடிவு



கொழும்பு, நவ. 1: விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின்போது நடைபெற்ற மனித உரிமை மீறல்களில் கோத்தபய ராஜபட்சவுக்கு உள்ள பங்கு குறித்து முப்படைகளின் தளபதி சரத் பொன்சேகாவிடம் விசாரிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக டெய்லி மிரர் பத்திரிகை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது: புலிகளுக்கு எதிரான போரின்போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்த அறிக்கையை நாடாளுமன்றத்திடம் அமெரிக்க வெளியுறவுத் துறை சமர்ப்பித்துள்ளது. மனித உரிமை மீறல்களில் அதிபர் ராஜபட்சவின் சகோதரரும், பாதுகாப்புச் செயலருமான கோத்தபய ராஜபட்சவுக்கு உள்ள பங்கு குறித்த ஆதாரங்களை அளிக்குமாறு அமெரிக்க அதிகாரிகள் கோரியுள்ளதாக வாஷிங்டனில் உள்ள இலங்கை தூதரகத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் சரத் பொன்சேகா கூறியுள்ளார். அமெரிக்காவில் உள்ள ஓக்லஹோமாவில் பொன்சேகாவுக்கு சொந்த வீடு உள்ளது. கிரீன் கார்டு வைத்துள்ள அவர் அதைப் புதுப்பிப்பதற்காக தற்போது அமெரிக்காவில் உள்ளார் என "டெய்லி மிரர்' செய்தியில் கூறப்பட்டுள்ளது. பொன்சேகாவிடம் அமெரிக்க அதிகாரிகள் புதன்கிழமை (நவம்பர் 4) விளக்கம் கோர உள்ளனர் என "சண்டே டைம்ஸ்' செய்தி வெளியிட்டுள்ளது. இப் பிரச்னை தொடர்பாக அமெரிக்க முன்னாள் குடியரசுத் தலைவர்களின் சட்ட ஆலோசகர் ஃபிரெட் பீல்டிங் மற்றும் வழக்கறிஞர்களிடம் பொன்சேகா ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இந்த விவகாரம் குறித்து இப்போதைக்கு எதுவும் கூற முடியாது என அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன. போரின்போதான மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க தனி குழு அமைக்கப்படும் என அதிபர் மகிந்த ராஜபட்ச கடந்த வாரம் அறிவித்திருந்தார். போரின் கடைசிக் கட்டத்தில் ராணுவம் மற்றும் புலிகளின் மனித உரிமை மீறல்கள் குறித்து 68 பக்க அறிக்கையை அமெரிக்க வெளியுறவுத் துறை தயாரித்துள்ளது. அதில் அத்துமீறல்கள் குறித்து 170 நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கருத்துக்கள்

உண்மையான விசாரணையாக இருக்க வேண்டும் என்றால் கூடவே தாய்நாட்டிற்காகத் தங்கள் இன்னுயிரையும் இழந்த போராளிகள் குறித்தும் விசாரிக்கப்படும் என்று பின்பாட்டுப் பாடுவதை நிறுத்த வேண்டும். விசாரணையின் மூலம் இலங்கையைத் தன் வழிக்குத் திருப்ப வேண்டும் என எண்ணாமல் கடுங்குற்றவாளிக்குத் தண்டனை அளிப்பதன் மூலம் இத்தகைய தவறுகளை இனி எந்த ஆட்சியாளனும் நினைத்துப் பார்க்க முடியாமல் செய்ய வேண்டும். கொத்துக் குண்டுகளாலும் எரிகுண்டுகளாலும் அகழ்வுப் பொறிகளாலும் ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்ட பொழுது கைகட்டிக் கொண்டு இருந்த அமெரிக்க ஆட்சியாளர்களுக்கும் ஐ.நா. அதிகாரிகளுக்கும் சூத்திரதாரிகளான இந்திய ஆட்சியாளர்களுக்கும் இநதிய அதிகாரிகளுக்கும் கடுந் தண்டனைகள் வழங்கப் பட வேண்டும். கண்துடைப்பு விசாரணையாக இல்லாமல் துயர் துடைப்பு விசாரணையாக அமைய வேண்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
11/2/2009 3:53:00 AM

"ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்"

By Tamil Aadhavan, USA
11/2/2009 3:04:00 AM

கோத்தபய ராஜபட்சவுக்கு தண்டணன தனலவெட்ட வேண்டும் அதுதான் நல்லம்

By usanthan
11/2/2009 1:59:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக