வியாழன், 5 நவம்பர், 2009

ஊரே திருப்பதிக்குப் பயணம்: காவலிருந்த போலீஸôருக்கு லட்டு, பழம் வெகுமதி



போச்சம்பள்ளி, நவ.4: போச்சம்பள்ளி அருகே ஊரில் பெரும்பாலானோர் திருப்பதிக்கு சென்றுவிட ஊரை போலீஸôர் பாதுகாத்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ளது ஒட்டத்தெரு, குப்பனூர், பரையப்பட்டி கிராமங்கள். அங்குள்ள 175 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 700 பேர் தங்கள் வீடுகளை பூட்டிவிட்டு சாமி தரிசனம் செய்ய 7 பஸ்களில் திருப்பதிக்குச் சென்றனர். தாங்கள் வரும் வரை ஊரை பாதுகாத்துத் தரும்படி போச்சம்பள்ளி போலீஸôருக்கு வேண்டுகோல் விடுத்தனர். அதன்படி இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டியன் தலைமையிலான போலீஸôர் 4 நாட்கள் இரவு பகலாக ஊரை காவல் காத்தனர். தரிசனம் முடிந்து ஊர் திரும்பிய பொதுமக்கள் திரளாக வந்து போலீஸôருக்கு திருப்பதி லட்டு, பழவகைகளை வழங்கி நன்றி தெரிவித்தனர்.
கருத்துக்கள்

கடமை உணர்விற்கும் நன்றி உணர்விற்கும் பாராட்டுகள்!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
11/5/2009 3:32:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக