வியாழன், 5 நவம்பர், 2009

காங்கோவில் ராணுவத்தினரின் தாக்குதலில் 500 அப்பாவிகள் படுகொலை



கின்ஷாஸô, நவ. 3: காங்கோவில் ராணுவ வீரர்கள் அப்பாவி பொதுமக்கள் 500 பேரை படுகொலை செய்துள்ளதாக மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது. காங்கோ ஜனநாயக குடியரசின் ராணுவ வீரர்கள் கடந்த மார்ச் மாதத்திலிருந்து நடத்திய படுகொலைகளில் அப்பாவி பொதுமக்கள் 500 பேர் உயிரிழந்துள்ளனர். கிளர்ச்சியாளர்களை அடக்குவதாகக் கூறி பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனித உரிமைகள் அமைப்பின் உண்மை கண்டறியும் குழு காங்கோவின் வடக்கு மற்றும் தெற்கு கிவு பகுதியில் ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான காலத்தில் நடத்தப்பட்ட வன்முறைகளைக் கணக்கெடுத்தது. இதில் காங்கோ ராணுவ வீரர்கள் வேண்டுமென்றே 505 பொதுமக்களைக் கொன்றுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இது தவிர காங்கோ ராணுவ வீரர்களும் ருவாண்டா ராணுவ வீரர்களும் கூட்டாக மேற்கொண்ட நடவடிக்கையில் 198 அப்பாவிகள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் நடைபெற்றுள்ளது. முன்னதாக காங்கோ ராணுவத்துக்கு அளித்து வந்த ஆதரவை ஐக்கிய நாடுகள் சபை வாபஸ் பெற்றது. ராணுவத்தினர் 62 பொதுமக்களைக் கொன்றதாக குற்றம் சாட்டியது. ஆனால் உண்மையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஐ.நா. கணக்கெடுப்பைக் காட்டிலும் அதிகம் என மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 81 பொதுமக்களை ராணுவத்தினர் கொன்றுள்ளனர். இங்குள்ள 5 கிராமங்களில் இந்த வேட்டை நடத்தப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகம் அமைந்துள்ள பகுதியிலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள கிராமத்தில் இத்தகைய கொடூர செயல் நடந்துள்ளதாக மனித உரிமைகள் அமைப்பினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
கருத்துக்கள்

உலகெங்கும் படைத்துறையினரும் அவர்கள் மூலம் ஆட்சியாளர்களும் நடத்தும் படுகொலைகளுக்குக்கணக்கில்லை. கொலைகளுக்குப் பின்னர் கண்துடைப்பு விசாரணை மூலம் எந்தப் பயனும் இல்லை. இனி எந்த ஓர் இடத்திலும் இப்படிப்பட்ட படுகொலைகள் தடுத்து நிறுத்தப்படுவதற்குரிய வழிவகைக்ள கண்டறிய வேண்டும். கொலைக்குற்றவாளிகளின் பரம்பரை யினரே தண்டனை பெறும் வகையில் நடவடிக்கை எடுப்பதன் மூலம் இனி யாரும் குற்றச் செயலலை எண்ணிக பார்க்கக் கூட முடியாத நிலையைக் கொண்டு வரவேண்டும். வேதனையுடன இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
11/5/2009 3:45:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக