சோனியா காந்திக்கு அமெரிக்க நீதிமன்றம் அழைப்பாணை
பதிவு செய்த நாள் :
புதன்கிழமை,
செப்டம்பர் 04,
1:03 PM IST
நியூயார்க், செப். 4-
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 31-10-1984 அன்று அவரது பாதுகாவலர்களான சத்வந்த் சிங் மற்றும் பியந்த் சிங் ஆகியோரால் அவரது வீட்டு தோட்டத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இதனையடுத்து, நாடெங்கும் உள்ள சீக்கியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இச்சம்பவம் நிகழ்ந்து சுமார் 30 ஆண்டு கழித்த நிலையில் அமெரிக்காவில் உள்ள 'சீக்கியர்களுக்கான நீதி' என்ற மனித உரிமை அமைப்பினர் 1984ம் ஆண்டு நிகழ்ந்த கலவரத்தின் போது சீக்கியர்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இழப்பீடு வழங்க வேண்டும் என நியூயார்க் கிழக்கு மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
1984ம் ஆண்டு நிகழ்ந்த கலவரத்தில் சுமார் 30 ஆயிரம் சீக்கியர்கள் சித்ரவதை செய்யப்பட்டனர். அப்போதைய ஆளுங்கட்சியான காங்கிரஸ் கட்சியின் திட்டமிடப்பட்ட இந்த தாக்குதலை முன்நின்று நடத்தியவர்களில் முக்கியமானவர்களான கமல்நாத், சஜ்ஜன்குமார், ஜகதீஷ் டைட்லர் உள்ளிட்ட பலரை சோனியா காந்தி பாதுகாத்து வருகிறார்.
எனவே, சீக்கியர்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சல், உயிர் சேதம் மற்றும் பொருட்சேதம் போன்றவற்றிற்கு சோனியா காந்தியிடம் இழப்பீடு பெற்று தர வேண்டும் என அமெரிக்கா வாழ் வெளிநாட்டினர் சித்ரவதை இழப்பீடு சட்டம் மற்றும் சித்ரவதைக்குள்ளானவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் சட்டத்தின் கீழ் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
வழக்கை நேற்று விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நியூயார்க் கிழக்கு மாவட்ட நீதிபதி, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சோனியா காந்திக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.
இந்த சம்மன் வெளியிடப்பட்ட 120 நாட்களுக்குள் உரியவரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.
தற்போது சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருக்கும் சோனியா காந்தி இந்த சம்மனை வாங்கிக் கொள்வாரா? அல்லது வக்கீல் மூலமாக பதில் அளிப்பாரா? என்பது விரைவில் தெரிந்து விடும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக