சீனா: 5 அகவையில் தனியாக விமானம் ஓட்டிப் பரபரப்பை ஏற்படுத்திய சிறுவன்
பதிவு செய்த நாள் :
புதன்கிழமை,
செப்டம்பர் 04,
11:34 AM IST
பீஜிங், செப். 4-
சீன த் தலைநகர் பீகிங்கில் உள்ள உயிரியல் பூங்காவின் மீது தொடர்ந்து 35 நிமிடங்கள் தனியாக விமானம் ஓட்டிய சிறுவன்,
அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தினான்.
கிழக்கு சீனாவில் உள்ள ஜியாங்சு மாகாணத்தை சேர்ந்தவர் ஹி லிஷெங். தன்னுடைய 5 வயது மகனை எதற்கும் அஞ்சாத சாகசக்காரனாக உருவாக்க வேண்டும் என்பதில் இவருக்கு தனியாத ஆர்வம்.
இந்த ஆர்வம் அவருக்குள் வெறியாக உருவெடுக்க தொடங்கியது. கடந்த பிப்ரவரி மாதம், நியூயார்க் நகரின் மைனஸ் 13 செல்சியஸ் உறைபனியில் தனது 5 வயது மகன் டுவோடுவோ-வை வெறும் ஜட்டியுடன் அமர வைத்ததன் மூலம் இவரும் இவரது மகனும் பிரபலமடைந்தனர்.
இந்நிலையில், இவருக்கு சொந்தமான சிறிய ரக விமானத்தில் டுவோடுவோ-வை மட்டும் தனியாக அமர்த்தி பீஜிங்கில் உள்ள உயிரியல் பூங்காவின் மீது அவன் விமானத்தை செலுத்தி வட்டமிட்டு பறக்கும் சாகசத்தை கண்டு ஹி லிஷெங் பரவசமடைந்துள்ளார்.
அந்த விமானம் தரையிறங்கியதும், இவ்வளவு நேரம் தங்களின் தலைக்கு மேலே வட்டமிட்ட விமானத்தை ஓட்டியவன் 5 வயது சிறுவன் என்பதை அறிந்த பொதுமக்கள் பதற்றமும், பரபரப்பும் அடைந்தனர்.
விமானம் ஓட்டுவதற்கு, போதுமான பயிற்சியும், லைசென்சும் தேவை என்ற விதிமுறைகளை மீறி 5 வயது சிறுவனை விமானம் ஓட்ட வைத்த ஹி லிஷெங் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து போலீசார் ஆலோசித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக