சனி, 7 செப்டம்பர், 2013

கழிவுநீர்க் கால்வாயைத் தூய்மை செய்த ஆடசியர் : மத்திய ப் பிரதேசம்

http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_797591.jpg

கழிவுநீர்க் கால்வாயை த் தூய்மை செய்த  ஆடசியர் : மத்திய ப் பிரதேசம்
போபால்:மத்திய பிரதேசத்தில், விகாஸ் நர்வால் என்ற கலெக்டர், கழிவுநீர் கால்வாயை, சுத்தம் செய்யும் பணியில், நேரடியாக களமிறங்கியது, பொதுமக்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ""மற்றவர்களுக்கு முன் மாதிரியாக விளங்க வேண்டும் என்பதற்காகவே, சுத்தம் செய்யும் பணியில், நானே இறங்கினேன்,'' என, அவர் விளக்கம் அளித்துள்ளார்.

மத்திய பிரதேசம் மாநிலம், நீமூச் மாவட்டத்தில், சமீப காலமாக, டெங்கு காய்ச்சலுக்கு பலியானோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. "இங்குள்ள, முக்கிய நகரங்களில், கழிவுநீர் கால்வாய்கள் சுத்தம் செய்யப்படாமல் இருப்பதும், சுகாதார பணிகளை, சரியாக மேற்கொள்ளாததும் தான், இதற்கு காரணம்' என, பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதையடுத்து, இந்த மாவட்ட கலெக்டர், விகாஸ் நார்வால், அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார். கடந்த, ஒரு வாரமாக, நகரில் உள்ள கழிவுநீர் கால்வாய்களை சுத்தம் செய்யும் பணியில், அவரே, நேரடியாக களமிறங்கியுள்ளார்.கழிவுநீர் கால்வாயை, கலெக்டர் சுத்தம் செய்வதை பார்த்த, பொதுமக்கள் ஆச்சர்யம் அடைந்தனர். "கலெக்டரே சுத்தம் செய்கிறார்; நாமும் செய்யலாமே' என, பொதுமக்கள் பலரும், சுத்தப்படுத்தும் பணியில், அவருடன் சேர்ந்து, ஆர்வத்துடன், ஈடுபட்டு வருகின்றனர்.

கலெக்டர், விகாஸ் அகர்வால் கூறியதாவது:கலெக்டர், ஒரு மாவட்ட நிர்வாகத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர். தன் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை, சுத்தமாக பராமரிப்பதில், கலெக்டருக்கும் முக்கிய பங்கு உள்ளது. இதனால் தான், மற்றவர்களுக்கு முன் மாதிரியாக திகழும் வகையில், நானே, சுத்தம் செய்யும் பணியில் இறங்கினேன்.இவ்வாறு, அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக