திங்கள், 2 செப்டம்பர், 2013

பரோட்டா சாப்பிடுவதை த் தவிர்க்கலாமே!

http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_79367720130901213916.jpg

பரோட்டா சாப்பிடுவதை த் தவிர்க்கலாமே!

பரோட்டா சாப்பிட்டால், உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் நோய்கள் வருவதாக கூறும், மருத்துவர் சைனி சந்திரன்,
: நான், சென்னையை சேர்ந்தவள். "டயட்டீஷியன்' ஆக பணியாற்றுகிறேன். கோதுமையில் இருக்கும், நல்ல குணங்கள் அனைத்தும் நீக்கப்பட்டு, அதில் இருந்து பிரிக்கப்படுவது தான், மைதா. முழுக்க முழுக்க, மைதா மாவால் செய்யப்படும் உணவு தான், பரோட்டா. உடலுக்கு தேவையான நல்ல சத்துக்கள் ஏதும், மைதாவில் தயாராகும் பரோட்டாவில் இல்லை. பரோட்டாவுடன், குழம்பாக ஊற்றி சாப்பிடும், குருமா போன்ற கிரேவி மட்டுமே, புரோட்டீன் மற்றும் கலோரிகளை கொடுக்கின்றன. அது மட்டுமின்றி, அளவுக்கு அதிகமான எண்ணெய் சேர்க்கப்படுவதால், உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும், பல நோய்கள் வருகின்றன. பொதுவாக, உடல் உழைப்பு அதிகம் இருப்பவர்கள், பரோட்டா சாப்பிடும் போது, எளிதில் ஜீரணமாகிவிடும். ஆனால், அதிக உடல் அசைவுகள் இன்றி, "டெஸ்க்'கில் அமர்ந்து, உடல் உழைப்பு குறைவான வேலை செய்பவர்களுக்கு, பரோட்டா, தீங்கு விளைவிக்கும். இதனால் தான், அதிகம் ஓடி ஆடி விளையாடாத குழந்தைகள், பரோட்டா சாப்பிட்டால், வயிற்று வலியால் அவதிப்படுகின்றனர். பரோட்டாவில், எண்ணெய் அதிகமாக உள்ளதால், உடலில் கொழுப்புச் சத்து அதிகமாகிறது. இதன் காரணமாக தான், உடல் எடை கூடுகிறது. இது மட்டுமின்றி சர்க்கரை வியாதி, இதய நோய், ரத்தக் கொதிப்பும் ஏற்படுகிறது. "ஹார்மோன்' குறைபாடு உள்ளவர்கள், கண்டிப்பாக பரோட்டா சாப்பிடக் கூடாது. "எனக்கு பரோட்டா பிடிக்கும்; சாப்பிட்டே தீருவேன்' என்பவர்கள், அதன் விளைவை ஈடு செய்ய, தினமும் வாக்கிங், உடற்பயிற்சி என, சில உடல் உழைப்பு முயற்சிகளில் ஈடுபட வேண்டும். மைதாவில் தண்ணீர் ஊற்றி, பிசைந்து, பக்குவமாக செய்வதற்கு, உடல் உழைப்பு அதிகம் தேவை என்பதால், ஓட்டல்களில் மட்டுமே பரோட்டா கிடைக்கும். இதனால், வீட்டில் சமைக்காத நேரங்களில் பரோட்டா சாப்பிடுவதை, முடிந்தவரை தவிர்க்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக