புதன், 26 டிசம்பர், 2012

மேற்குத் தொடர்ச்சி மலையில் அரிய வகைப் பறவைகள்

மேற்குத் தொடர்ச்சி மலையில் அபூர்வ வகைப்  பறவைகள்





ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் 10 முதல் 12 வகையான அபூர்வ வகை பறவைகள் உள்ளது தெரியவந்ததுள்ளது.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள சாம்பல் நிற அணில் சரணாலயப் பகுதியில் முதல் முறையாக பறவைகள் குறித்த தகவல்கள் சேகரிக்கும் பணி சனிக்கிழமை முதல் செவ்வாய்கிழமை வரை நடைபெற்றது.
செவ்வாய்கிழமை தகவல்கள் சேகரித்து வந்த பின்னர் குழுவின் ஒருங்கிணைப்பாளரும், பெங்களூரில் உள்ள வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வரும் பறவைகள் ஆர்வலர் சந்திரசேகரன் தினமணி செய்தியாளரிடம் கூறியதாவது:
மேற்குத் தொடர்ச்சி மலைக்கு மட்டுமே உரித்தான, காண்பதற்கு அரிதான, அபூர்வ வகையான 10 முதல் 12 வகையான பறவை இனங்கள் இப்பகுயில் இருப்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக கேரளா மாநிலத்தில் மட்டுமே உள்ளது என்று கருதப்படும் ஸ்ரீலங்கன் தவளை வாய் பறவை முதலியார் ஊத்து, சாமியார் தடத்தில் இருந்துள்ளது. இதனை தகவல் சேகரிக்கச் சென்ற குழுவினர் புகைப்படம் எடுத்து வந்துள்ளனர். இதனைப் பார்க்கும்போது இவ்வளவு தொந்தரவுகளுக்கு நடுவேயும் மலைகள் சிறப்பாக உள்ளது என்பதே உண்மை. தற்போது திரட்டப்பட்ட தகவல்கள் ஒருங்கிணைக்கப்பட்டு வனத்துறையிடம் ஒப்படைக்கப்படும். தற்போது மேற்குத் தொடர்ச்சி மலையில் இப் பகுயில் உள்ள பறவைகளை சிறப்பாக பராமரிப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய பரிந்துரைகள் வனத்துறைக்கு அளிக்கப்படும். மேலும் பறவை இனங்களைப் பாதுகாக்க தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக